Author: Priya ram
•Wednesday, March 30, 2011



இப்போ மாங்காய் சீசன்னால வீட்டுல  மாங்காய் வாங்கி வந்து இருந்தாங்க.  இன்னிக்கு மாங்காய் தொக்கு பண்னேன். நல்லா வந்தது. ருசி நல்லா இருக்குனு வீட்டுல எல்லோரும் சொன்னாங்க.


தேவையானவை : 

மாங்காய் - 1  தோல் சீவி துருவியது.
கடுகு - 1 / 4  ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1  / 4  ஸ்பூன்
வறட்டு மிளகாய் பொடி - 1   ஸ்பூன்
வெல்லம்  - ஒரு சுண்டைக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
வெந்தியம் வறுத்து பொடி பண்ணது - 1 / 2  ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயம் -  1  சிட்டிக்கை

செய்முறை :

               வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் கடுகு வெடிக்க விட்டு பெருங்காயம் போடணும். பிறகு துருவிய மாங்காய் போட்டு மஞ்சள் பொடி, உப்பு, வறட்டு மிளகாய் பொடி போட்டு நன்றாக கிளறி விட்டு வேக விடனும். மாங்காய் வெந்து எண்ணெய் ததும்பி வரும்போது வெந்திய பொடி, வெல்லம் போட்டு கிளறி இறக்கணும். சுவையான மாங்காய் தொக்கு ரெடி. இதை பண்ணும் போது எண்ணெய், மிளகாய் பொடி கொஞ்சம் அதிகமாக போட்டு செய்தால் ஒரு வாரம் வரை கூட கெடாமல் இருக்கும்.
Author: Priya ram
•Monday, March 28, 2011




இது என்னோட ரெண்டாவது பானை அலங்காரம். இது ரொம்ப ஈஸி. பானையை  உப்பு தாள் போட்டு நல்லா தேச்சு அலம்பிட்டு காய வைத்து வெள்ளை எனாமல் பெயிண்ட் அடிக்கணும். அதை  ஒரு நாள் காய விட்டுடனும். தனியா ஒரு ட்ரே- ல கொஞ்சமா தண்ணி எடுத்துக்கணும். அதுல சிவப்பு, மஞ்சள், நீலம் ( வேற ஏதாவது கலர் இருந்தா அதையும் சேர்த்துக்கலாம் ) கலர் எனாமல் பெயிண்ட் விட்டு பிரஷ் வச்சு ஒரு கலக்கு கலக்கணும். அப்புறம் பானையை அதில் ஒரே ஒரு முறை உருட்டி எடுக்கணும். இதை திரும்ப ஒரு நாள் காய வைத்தால் மார்பல் பெயிண்ட் செய்யப்பட்ட பானை தயார்.

Author: Priya ram
•Friday, March 18, 2011
இது என்னோட முதல் பானை அலங்காரம். இந்த அலங்காரம் பண்ண கொஞ்சம் வேலை பண்ணனும். பானையை உப்பு தாள் போட்டு நன்றாக தேய்த்து சாப்ட் ஆக்கணும். அப்புறம் பானையை அலம்பி விட்டு அதை காய வைத்து அதன் மேல் ரெண்டு மூணு லேயர்  டிஷ்ஷு பேப்பர் வச்சு பெவிகால் தடவி  ஒட்டி காய விடனும். நன்றாக காய்ந்ததும் ரெட் கலர் பெயிண்ட் பண்ணிட்டு வேண்டிய டிசைன் போட்டுக்கணும்.


Author: Priya ram
•Wednesday, March 16, 2011
இந்த  காய்களை கோல்ட் போர்சலின் கிரீம் வச்சு பண்ணேன்.


பச்சை பட்டாணி
வெண்டைக்காய்
கத்தரிக்காய்
கேரட்
இன்னும் ஒரு காய் இதுல இருக்கு இல்லையா அது என்ன காய்னு நீங்க கண்டு புடிங்க பார்க்கலாம்.

Author: Priya ram
•Monday, March 14, 2011
ஐஸ் குச்சிகளை வைத்து இந்த  பானைகளை  செய்தேன். ரெண்டு பானைக்கும்  கலர்  தரலாம்னு எங்க வீட்டுல  ஐடியா தந்தாங்க.  ஒன்றுக்கு மட்டும் மொதல்ல கலர் கொடுத்து பார்ப்போம்னு  கலர்  தந்தேன். கலர் கொடுத்த பிறகு கலர் தராதது நல்லா இருக்குனு பாதி பேர் சொன்னாங்க. கலர் தந்தது நல்லா இருக்குனு பாதி பேர் சொன்னாங்க. அதான் ரெண்டு மாதிரியும் இருக்கட்டும்னு ஒன்னு கலர் தந்து இன்னும் ஒன்னு கலர் தராம வைத்து விட்டேன். உங்களுக்கு எது புடிச்சு இருக்குனு சீக்கரம் வந்து கமென்ட் போடுங்க. பானைக்கு கீழே  போட்டு இருக்க மேட் பத்தி இன்னொரு பதிவில் சொல்லறேன். 





Author: Priya ram
•Friday, March 11, 2011



இந்த பேப்பர் குடிசை வீடு போன வாரம் டிவி -ல ஒரு பெண்மணி கைவினை பொருட்கள் செய்யும் நிகழ்ச்சில வந்து  சொல்லி தந்தாங்க. அவங்க சொல்லி தரும் போதே எனக்கு பண்ணனும்னு ஆசை வந்து விட்டது. உடனே பண்ண ஆரம்பிச்சுட்டேன்.  செய்வதும்  ரொம்ப ஈஸி தான். இதுக்கு தேவை தினமும் கிழிக்கிற காலண்டர்  பேப்பர் தான். 

இந்த மாதிரி பேப்பர் மொத்தமா எடுத்துக்கணும். இதுல ரெண்டு மாதிரி இருக்கும். ஒன்னு பின் அடிச்சது இன்னும் ஒன்னு ஆணி அடிச்சது இருக்கும். நம்ம இந்த வீடு பண்ண ஆணி அடிச்சது தான் உபயோகிக்கனும். 


ஆணி எடுத்து விட்டு இந்த வாட்டத்துல பேப்பரை வச்சுக்கணும். 
முதல் தாளை  இந்த மாதிரி முக்கோணமா மடிச்சுக்கணும்.


அடுத்த தாளை இந்த மாதிரி பாதி மடிசிட்டு 

மீதி பாதியை நேர் வாட்டத்தில் மடிக்கணும் 


நுனி கீழ சரியா தொடணும் அப்படி செய்தால் தான் கூரை சரியாக வரும். 

அடுத்த  தாளை முக்கோணமா மடிக்கணும். 
அதுக்கு அடுத்த தாளை பாதி மடிச்சு 

மீதியை நேர் வாட்டத்தில் மடிக்கணும். இப்படியே மாத்தி மாத்தி மொத்த
 பேப்பரையும் மடித்தால் 

இந்த மாதிரி கிடைக்கும். சேர்த்தால் குடிசை வீடு கிடைக்கும். 

Author: Priya ram
•Wednesday, March 09, 2011
என்னோட மாமியார் பிறந்த நாளுக்காக quilling பேப்பர் வச்சு இந்த க்ரீடிங் கார்டு செய்தேன்.




Author: Priya ram
•Tuesday, March 08, 2011
உலக மகளிர் அனைவருக்கும்  மகளிர் தின வாழ்த்துக்கள்.


Author: Priya ram
•Monday, March 07, 2011
OHP ஷீட்டில் டோரா, மிக்கி மௌஸ் படம் 3D outliner  மூலம் வரைந்து உள்ளுக்குள் க்ளாஸ் கலர் வைத்து கலர் கொடுத்து இருக்கேன்.








Author: Priya ram
•Friday, March 04, 2011

இது என்னோட முதல் க்ளாஸ் பெயின்டிங். வீட்டுல இருந்த ஒரு சின்ன க்ளாஸ் -  ல ட்ரை பண்ணது.




Related Posts Plugin for WordPress, Blogger...