Author: Priya ram
•Friday, April 29, 2011
ஹர்ஷினி அம்மா ப்ளாக்ல ஒரு பதிவில் பிரேஸ்லெட் செய்து போட்டு இருந்தாங்க . அதை பார்த்ததில் இருந்து அதே மாதிரி பண்ணனும்னு ஆசையா இருந்தது. இவருடன் ஒரு முறை வெளில போகும் போது இவர் கிட்ட கேட்டு ஒரு பிரேஸ்லெட் வாங்கினேன். அதை பார்த்ததும் ரொம்ப ஈஸியா தானே இருக்கு வாங்கி ட்ரை பண்ணிடணும்னு நினைச்சேன். தியாகராய நகர் போகும் போது இதற்க்கு தேவையானவற்றை வாங்கி ட்ரை பண்ணேன். நல்லா வந்தது. பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

தேவையான பொருட்கள் :
பிஷ்நெட் ஒயர்.
தேவையான மணிகள்
கத்தரிக்கோல்





செய்முறை :
தேவையான அளவு பிஷ்நெட் ஒயரை கட் பண்ணிக்கணும். அதில் நமக்கு விருப்பம் போல் மணியை கோர்த்து ரெண்டு முனையையும் சேர்த்து முடிச்சு போட்டுடனும். அவ்வளவே  தான் அழகான பிரேஸ்லெட் கிடைச்சுடும்.

Author: Priya ram
•Wednesday, April 27, 2011
இது என்னோட ரெண்டாவது தெர்மோகோல் தட்டு அலங்காரம்.

இந்த அலங்காரமும் ஈஸி தான். நமக்கு தேவையான படத்தை தெர்மோகோல் தட்டுல வரையனும். பென்சில்னால வரைந்த பகுதிக்கு மட்டும் பெவிகால் தடவி மேல ஜிகினா தூள் தூவி கவிழ்த்து தட்டினால் அலங்கார தட்டு தயார்.



இதுல கொடுத்து இருக்க கலரை விட வேற கலர் கொடுத்து  இருக்கலாம்னு எங்க மாமனார் சொன்னார். உங்களுக்கு என்ன தோணறது பார்த்து விட்டு சொல்லுங்க

Author: Priya ram
•Monday, April 25, 2011



இந்த அலங்கார வளையல் செய்ய

தேவையான பொருட்கள் :

மெழுகு வளையல் ( கடையில கலர் கலரா கிடைக்கும் )
கலர் செல்லோடேப்
பெவிகால்
அலங்காரம் செய்ய வெள்ளை பூ ஸ்டோன்





செய்முறை :

மெழுகு வளையலை சுற்றி கலர் செல்லோடேப்  இடைவிடாமல் ஓட்டனும். வளையல் மேலே  தேவையான இடத்தில்  பெவிகால் தடவி வெள்ளை பூ ஸ்டோன் ஓட்டனும். அழகான அலங்காரம் செய்யப்பட்ட வளையல் ரெடி.







Author: Priya ram
•Friday, April 22, 2011
நான் கல்யாணத்துக்கு முன்னாடி தெர்மோகோல் தட்டுல அலங்காரம் நிறைய செய்து இருக்கேன். இப்போ பண்ணலாம்னு எங்க மாமனார் கிட்ட தெர்மோகோல் தட்டு வாங்கி வர சொன்னேன். எத்தனைன்னு சொல்லாம விட்டுட்டேன். நான் எதிர் பார்த்தது ஒன்னு இல்லேன்னா ரெண்டு தட்டு வாங்கி வருவார்னு. அவர் பத்து தட்டு வாங்கி வந்துட்டார். அந்த தட்டுல ஒன்னு ஒண்ணா எடுத்து டிசைன் யோசிச்சு போட்டு கிட்டு இருக்கேன். அதுல மொதல்ல நான் போட்ட டிசைன் இது தான்.


தேவையான பொருட்கள் :
பெவிகால்
தெர்மோகோல் தட்டு
கலர் ஜிகினா தூள் ( என்ன கலர்ஸ்  வேண்டுமோ அதை எடுத்துக்கலாம்  )
பெப்ரிக் கலர்ஸ்


செய்முறை :

தெர்மோகோல் தட்டுல தேவையான டிசைன் வரையனும். எந்த பகுதிக்கு என்ன கலர் வேண்டுமோ அந்த பகுதியில் பெவிகால் தடவி கலர் ஜிகினாவை நிறைய போடணும். ஒரு பேப்பர் எடுத்து கொண்டு அதில் தெர்மோகோல் தட்டை கவிழ்த்து தட்டினால் தேவையான ஜிகினா மட்டும் பெவிகால் தடவிய இடத்தில் ஒட்டிக்கொண்டு மீதி ஜிகினா பேப்பரில் விழுந்து விடும். முழு படத்திற்கும் இதே மாதிரி ஜிகினா தூள் போட்டு அலங்காரம் செய்து விட்டு தேவை என்றால் தட்டை சுற்றி பெப்ரிக் கலர்ஸ் தரலாம்.
Author: Priya ram
•Tuesday, April 19, 2011
இந்த சமிக்கி மாலையை சமிக்கி வைத்து செய்தேன்.




தேவையான பொருட்கள் :
பச்சை, கோல்டன் கலர் சமிக்கி ( இது பூ வடிவத்தில் இருக்கும். எல்லா கலர்லயும் கிடைக்கிறது )
டுவைன் நூல்
ரெண்டு ஊசி
கோல்டன் மணி
கோல்டன் கலர் டேப்
கத்திரிகோல்


செய்முறை : 
          பச்சை, கோல்டன் கலர் சமிக்கியை கப் வடிவத்தில் மடிக்கணும். டுவைன் நூலில் தேவையான அளவு எடுத்து  இரண்டு புறமும் ஊசி கோர்த்துக்கணும். ஒரு கோல்டன் சமிக்கி, மூணு கோல்டன் மணி,ஒரு பச்சை சமிக்கி, மூணு கோல்டன் மணி இப்படியே மாத்தி மாத்தி கோர்த்து கொண்டே வர வேண்டும்.  ரெண்டு பேர் ரெண்டு பக்கம் கோர்த்து கொண்டே வந்தால் மாலை சீக்கிரம் பண்ணி விடலாம்.  நடுவில் கிழே தொங்கும் பகுதிக்கு ஒரு சமிக்கி, ஐந்து மணி, ஒரு சமிக்கி என கோர்த்து நடுவில் சேர்த்து முடிச்சு போடணும். நமக்கு தேவையான அளவுல மாலை செய்துக்கலாம்.






Author: Priya ram
•Thursday, April 14, 2011
அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


Author: Priya ram
•Friday, April 08, 2011

இந்த பெரிய மேட்டையும் உல்லன் நூல் வைத்து தான் பண்ணேன். இதற்க்கு பயன் படுத்தின சட்டம் கொஞ்சம் பெரிய சைஸ். இதை மாதிரி ரெண்டு மேட் செய்தால் ஒரு பை பண்ணலாம்.

 
பூக்களுக்கு நடுவில் மணி வைக்காம இந்த மாடல் செய்து இருக்கேன். டெலிபோன் மேட்- ல செய்தது  போல் மணி வைத்தும் செய்யலாம்.


Author: Priya ram
•Wednesday, April 06, 2011



இந்த மேட்டை உல்லன் நூல் வைத்து பண்ணேன். இதை செய்ய  எக்சகன் ஷேப் - ல ஒரு மர சட்டம் வேண்டும். அந்த சட்டம் இருந்தால் ஈஸி - யா இந்த மேட்டை செய்து விடலாம். இதில் ஒவ்வொரு பூக்களுக்கும் நடுவில் மணி கோர்த்து செய்து இருக்கேன்.






Author: Priya ram
•Monday, April 04, 2011


உல்லன் நூலை வைத்து  இந்த பூனையை செய்தேன். 



இந்த பூனையை பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லாம போயிடாதீங்க...
 அப்புறம் உங்க வீட்டு பாலை முழுக்க இது வந்து குடித்து விடும்.


Author: Priya ram
•Friday, April 01, 2011
  


  
தக்காளி தொக்கு எங்க வீட்டுல ரெண்டு விதமா பண்ணுவோம். ஒன்னு தக்காளிய அரைத்து  பண்ணுவது மற்றொன்று தக்காளியை பொடியாக நறுக்கிட்டு பண்ணறது. இந்த தொக்கு தக்காளியை அரைத்து பண்ணேன்.

தேவையான பொருட்கள் :

தக்காளி - 1  / 2  கிலோ
கடுகு - 1  / 4  ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - கொஞ்சம்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள்  பொடி -  1  / 4  ஸ்பூன்
வறட்டு மிளகாய் பொடி - 1  ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு




செய்முறை :

ஒரு   வாணலியில் எண்ணெய்  விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து தக்காளியை தண்ணி விடாமல்  அரைத்து கொட்டி அதில் மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய் பொடி போட்டு கிளறி மூடி வைக்கணும்.அடுப்பை சிம் - ல வைக்கணும்.  இது நன்றாக கொதித்து தக்காளி தொக்கு திக்காக  எண்ணெய் ஓரத்தில் சேர்ந்து வரும்போது வாணலியை இறக்கிடணும். தக்காளி தொக்கு ரெடி.

                                               
Related Posts Plugin for WordPress, Blogger...