Author: Priya ram
•Monday, May 23, 2011
நானும் என்னோட கணவரும்  ஒரு வார இறுதியில் கோவளம் பீச்க்கு போனோம்.  போற வழி  எல்லாம் ஒரே மாங்காய் தோப்பு. மாங்காய் கொத்து கொத்தா கீழயே தொங்கிட்டு இருந்தது. அங்க இருந்த ஆட்கள்  பறிக்க விடலை. அதனால் போட்டோ மட்டும் எடுத்தேன். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


Author: Priya ram
•Friday, May 20, 2011
இந்த ஆர்ட் செய்ய நிறைய பேப்பர்ஸ் வேண்டும். என்னோட தம்பி ஒருத்தன் அவன் ஆபீஸ் - ல நிறைய கலர் பேப்பர்ஸ்  இருப்பதாகவும் அதை தானே கட் பண்ணி தருவதாகவும்  சொன்னான்.  மொதல்ல  ஒரு கலர் பேப்பர்  மட்டும் நிறைய கட் பண்ணி தந்தான். அதை வைத்து என்னோட மாமனார் பிறந்த நாளுக்கு இந்த பரிசு செய்தேன்.




Author: Priya ram
•Thursday, May 19, 2011
என்னோட நாத்தனார் விடுமுறைக்காக வீட்டுக்கு வந்து இருந்தாள். அவள் என் கிட்ட கருக மணி மாதிரியே நிறைய கலர்ல மாலைகள் பண்ணி தர சொல்லி கேட்டாள்.  நானும் கிடைத்த கலர் மணிகளை வைத்து இந்த மணி மாலைகளை  செய்தேன். பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.

இது மெரூன் கலர் மணி வைத்து செய்தது.


இது பச்சை  கலர் மணி வைத்து செய்தது.



 இது நீல  கலர் மணி வைத்து செய்தது.


 இது சிவப்பு கலர்  மணி வைத்து செய்தது.


இது எல்லா கலர்  மணியையும்  வைத்து செய்தது.

Author: Priya ram
•Sunday, May 08, 2011


உலக தாய்மார்கள் அனைவருக்கும், எதிர் காலத்தில் தாய் ஆக போறவங்களுக்கும்  அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.


Author: Priya ram
•Friday, May 06, 2011
இந்த தங்க மரத்தை தங்க நிற இலைகள் மற்றும் முத்து வைத்து செய்தேன். ஐந்து ஸ்டாகின்ஸ் கம்பியை எடுத்து கொண்டு பாதியாக மடித்து கீழே உருட்டி மேலே இரண்டு இரண்டு கம்பியாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமா இடைவெளி விட்டு இலை, மணி என மாத்தி மாத்தி கோர்க்கணும்.




இதே மாதிரி மணிகள் வைத்தும் செய்தேன். 



Author: Priya ram
•Thursday, May 05, 2011

சினேகிதி என்னோட ப்ளாக் -க்கு முதல் விருது தந்து இருக்கீங்க. மிக்க நன்றி. விருதை பெற்றுக்கொள்ள தாமதமாகி விட்டது. ஸ்கூல் லீவ்க்காக நிறைய குட்டீஸ் வீட்டுக்கு வந்து இருந்தாங்க. லேப்டாப் பக்கமே வர முடியலை.


இந்த இனிப்பான திராட்சை பழத்துடன் எனது  நன்றியை  சொல்லிக்கறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...