Author: Priya ram
•Monday, July 25, 2011
தக்காளி தொக்கு இந்த மாதிரி செய்தால் தான் என் கணவருக்கு புடிக்கும்.
தக்காளியை  அரச்சிட்டு செய்தால்  ரொம்ப விரும்பி சாப்பிட மாட்டார்.   



தேவையான பொருட்கள் :

தக்காளி - 1 கிலோ
கடலை எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
உப்பு
வறட்டு மிளகாய் பொடி
மஞ்சள் பொடி


செய்முறை :

தக்காளியை பொடியாக நறுக்கி வச்சுக்கணும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து பொடியாக நறுக்கிய தக்காளி போட்டு உப்பு, மஞ்சள் பொடி, வறட்டு மிளகாய் பொடி போட்டு நன்றாக கிளறவும். அடுப்பை சிம்மில் வைத்து மூடி வைத்து விடவும். 5  நிமிஷம் கழித்து நன்றாக கிளறி விடவும். பச்சை வாசனை போய் எண்ணெய் ஓரத்தில் சேர்ந்து வரும்போது அடுப்பை அனைத்து விடவும்.






நிறைய எண்ணெய் விட்டு இந்த தக்காளி தொக்கு செய்தேன். ஒரு வாரம் வந்தால் கூட  காலைல இட்லி, தோசை, சப்பாத்தி செய்யும் போது எல்லாம் தொட்டுக்க என்னனு தேட வேண்டாம்னு. ஆனால் வீட்டுல  2  நாள்ல காலி பண்ணிட்டாங்க. இந்த முறைல செய்தாலும் ரொம்ப நல்லா இருக்கும். செய்து பாருங்க.  
This entry was posted on Monday, July 25, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On July 25, 2011 at 11:02 PM , GEETHA ACHAL said...

ரொம்ப ரொம்ப நல்லா கரசரமாக இருக்கு...இதனுடம் இரண்டு இட்லி அதிகம் உள்ளே செல்லுமே...

எங்க வீட்டில் இதே மாதிரி நல்லெண்ணெயில் செய்வோம்...எண்ணெய் அதிகம் சேர்த்தால் தான் சுவையாக இருக்கும்...அதனாலே இதனை யாரவது friends வரும் பொழுது மட்டும் செய்வேன்....

 
On July 26, 2011 at 12:08 AM , Angel said...

எங்க அம்மா இப்படிதான் செய்வாங்க .இது தனி டேஸ்ட் .ரொம்ப நல்லாருக்கும் .especially with மல்லிப்பூ idly

 
On July 26, 2011 at 1:50 AM , Mahi said...

சூப்பரா இருக்கு ப்ரியா! செம கலர்! :P:P

 
On August 1, 2011 at 3:47 PM , Priya ram said...

நன்றி கீதா.. நியாபக படுத்திடீன்களே..... எங்க அம்மா வீட்டுல இட்லி பூ மாதிரி இருக்கும். தொட்டுக்க கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னி, தக்காளி தொக்கு எல்லாம் போட்டுண்டு சாப்பிட்டா எத்தனை இட்லி சாப்பிடுரோம்னு தெரியாம உள்ள போயிட்டே இருக்கும்.



எங்க மாமியார் வீட்டுல புழுங்கல் அரிசி யூஸ் பண்ண மாட்டாங்க.... பச்சை அரிசி மட்டும் தான். பச்சை அரிசி இட்லி அவ்வளவு சாப்ட் - டா இல்லை.

நான் கூட கடைசில கொஞ்சம் நல்ல எண்ணெய் சேர்ப்பேன்.

 
On August 1, 2011 at 3:49 PM , Priya ram said...

thanks angelin.எங்க அம்மா வீட்டுல அரச்சு தான் பண்ணுவாங்க. இங்க இவருக்காக இப்படி பண்ண ஆரம்பிச்சு, இப்போ எனக்கும் எந்த மாதிரி சாப்பிடுவது புடிச்சு போச்சு.

 
On August 1, 2011 at 3:59 PM , Priya ram said...

நன்றி மகி..நல்லா காரமா பண்ணா நிறைய நாள் நல்லா இருக்கும்னு காரம் போட்டு பண்ணேன். எண்ணெய் நிறைய விட்டதால் காரம் கொறஞ்சு போச்சு. இவங்க சீக்கிரம் சாப்பிட்டு காலி பண்ணிட்டாங்க.

 
Related Posts Plugin for WordPress, Blogger...