Author: Priya ram
•Tuesday, July 05, 2011
இந்த கொழம்பு எனக்கு ரொம்ப புடிக்கும். அம்மா பண்ணும்போது தேன் மாதிரி இருக்கும் தயிர் சாதத்துக்கு தொட்டுண்டு சாப்பிடுவேன். என்னோட தம்பி வத்த கொழம்பு இல்லைனா ஆவக்காய் ஊறுகாய் (ஸ்................... சொல்லும் போதே சாப்பிடனும் போல இருக்கு) ஏதாவது ஒன்னு இருந்தா தான் தயிர் சாதமே சாப்பிடுவான். எங்க வீடுகள்ல எல்லாம் நிறைய வெங்காயம் சேர்க்கவே மாட்டாங்க. அதனால வெங்காயம் போடாம நான் வத்த கொழம்பு பண்ணி இருக்கேன். உங்களுக்கு வெங்காயம் சேர்த்துக்கனும்னா சேர்த்துக்கலாம். எங்க அம்மா வீட்டுல வத்த கொழம்பு செய்யும் போது கடலைக்காய் எல்லாம் போட மாட்டாங்க. எங்க மாமியார் விட்டுல போடுவாங்க. அதுவும் உப்பு, காரம், புளிப்பு எல்லாம் ஒரச்சிண்டு சூப்பர் ரா இருக்கும்.




தேவையான பொருட்கள் :

கடலை எண்ணெய்
கடுகு
பெருங்காயம்
உளுத்தம் பருப்பு - 1 / 4  ஸ்பூன்
கடலை பருப்பு -  1 / 4  ஸ்பூன்
துவரம் பருப்பு -  1 / 4  ஸ்பூன்
வெந்தயம் -  1 / 4  ஸ்பூன்
கடலைக்காய் -  1 / 4  கப்
தக்காளி - 1
கத்தரிக்காய் - தேவையான அளவு. நான் 6  காய் போட்டு இருக்கேன்.
புளி -  ஒரு எலுமிச்சை அளவு
உப்பு
மஞ்சள் பொடி
மிளகாய் பொடி
நல்லெண்ணெய் - 2  ஸ்பூன்






கத்தரிக்காய் இப்படி தான் நறுக்கிக்கணும்.

செய்முறை :

புளியை  தண்ணீரில் ஊற வச்சு திக்காக கரைச்சு வச்சுக்கணும்.
வாணலியில் கடலெண்ணெய் விட்டு கடுகு தாளித்து பெருங்காயம் போட்டு  உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு, கடலைக்காய், வெந்தயம் போட்டு கொஞ்சமாக வதக்கணும். தக்காளி பொடியாக நறுக்கி போட்டு வதக்கி கத்தரிக்காய் போட்டு, கத்தரிக்காய் மேல் தோல் சுருங்கும் வரை வதக்கணும். வதங்கியதும் புளி தண்ணீர் விட்டு உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு கிளறாமல் அப்படியே மூடி வச்சிடணும். நல்லா கொதிச்சு பச்சை வாசனை போனதும் கிளறி இறக்கிடணும். அப்புறம் சூட்டுடன் ரெண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் மேல விட்டு கலந்தால்  வத்த கொழம்பு தயார்.








கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா எங்கயாவது ஊருக்கு போய்ட்டா நானும், எங்க அக்காவும் தான் சமைப்போம். எங்க அம்மாவோட சுவை இருந்தா தான் என் தம்பி சாப்பிடுவான். சமைக்கும் போது பக்கத்துல நின்னு பார்த்து கிட்டே இருப்பான். சுவை சரி இல்லைனா... அம்மா உப்பு, மிளகாய் பொடி போட்டா கிளறவே மாட்டாங்க நீ கிளறி பண்ண அதான் சுவை சரி இல்லைன்னு சொல்லி சாப்பிடவே மாட்டான். அதுல இருந்து எப்போ சாம்பார், வத்த கொழம்பு எது பண்ணாலும் உப்பு, மிளகாய் பொடி போட்டு அடுப்பை சிம் ல வச்சிட்டு அப்படியே மூடி வச்சிடுவேன். அது நல்லா கொதிச்சு சுண்டி வந்ததும் நன்றாக கிளருவேன். 
வத்த கொழம்பு இத மாதிரி ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப நல்லா இருக்கும். எண்ணெய் நிறைய விடணும்னு நினைக்கறவங்க நிறைய விடலாம். எங்க வீட்டுல எண்ணெய் நிறைய சேர்த்துக்க மாட்டாங்க அதான் நான் கொஞ்சமா விட்டு செய்து இருக்கேன்.
This entry was posted on Tuesday, July 05, 2011 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On July 5, 2011 at 11:59 AM , Mahi said...

வத்தக்கொழம்பு கொஞ்சம் வித்யாசமா,சிம்பிளா இருக்கு ப்ரியா! அடுத்தமுறை இப்படி செய்துபார்க்கிறேன்.

கொழம்ப விட உங்க ஃப்ளாஷ்பேக்...பேஷ்,பேஷ்,ரொம்ப நன்னார்க்கு! ;)

 
On July 5, 2011 at 3:30 PM , இமா க்றிஸ் said...

நான் லீவுல செய்து பார்க்க மாட்டேன். ;) சாப்பிட்டுருவேன். உங்க குறிப்பும் நல்லா இருக்கு. முன்னுரை பின்னுரை எல்லாம் கூட நல்லா இருக்கு. ரொம்பவே ரசிச்சு எழுதி இருக்கீங்க ப்ரியா. ;)

 
On July 5, 2011 at 5:09 PM , Anonymous said...

வத்த குழம்பு differenta இருக்கு. இப்போ இங்க லஞ்ச் டைம். ஆபீஸ்ல உங்க வத்த குழம்ப பார்த்து பேரு மூச்சு விட்டுகிட்டே sandwich சாபிட்டுக்கிட்டு இருக்கேன் ஹும் ....

 
On July 6, 2011 at 7:19 AM , Priya ram said...

நன்றி மகி. ட்ரை பண்ணி பாருங்க நல்லா சுவையா இருக்கும்.

 
On July 6, 2011 at 7:20 AM , Priya ram said...

நன்றி இமா.

 
On July 6, 2011 at 7:22 AM , Priya ram said...

ஆபீஸ் ல இப்போ பார்த்து கிட்டே சாப்பிட்டுடுங்க. அப்புறம் லீவ் ல நல்லா நிறைய செய்து சாப்பிடுங்க.

 
On September 21, 2012 at 8:14 PM , திண்டுக்கல் தனபாலன் said...

எனது துணைவியாருக்கு மேலும் ஒரு தளம் கிடைத்து விட்டது...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை…
Follower ஆகி விட்டேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் (இந்தப் பதிவு) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post_21.html) சென்று பார்க்கவும்...

நேரம் கிடைச்சா நம்ம தளம் வாங்க... நன்றி…

 
On September 22, 2012 at 10:46 PM , Jaleela Kamal said...

அட்டகாசமான அடுப்படிகள்
http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_21.html
உங்கள் பதிவை இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...