Author: Priya ram
•Thursday, August 25, 2011
என்னவர் குலாப்ஜாமூன் பண்ண சொல்லி ரொம்ப நாளா கேட்டு கிட்டே இருந்தார். மகியோட dry  ஜாமூன் பார்த்து எனக்கும் பண்ணனும்னு ஆசையா இருந்தது.



நேத்து ஜாமூன் செய்து அதில் சிலவற்றை சுகர் -ல உருட்டி வைத்தேன். 

என்னவருக்கு ரொம்ப புடிச்சு இருந்தது. விரும்பி சாப்பிட்டார்.

ஹாட் ஜாமூன் வித் ஐஸ்-கிரீம் சாப்பிட்டால் நல்லா இருக்கும்னு மகி ஐடியா தந்ததால், அதையும் ட்ரை பண்ணலாம்னு என்னவர் அலுவலகத்தில் இருந்து வருவதற்குள் ஐஸ்-கிரீம் வாங்கி வந்து வைத்து இருந்தேன்.


ஐஸ்-கிரீம் கூட ஜாமூன் வைத்து தந்தேன். ஒரே சர்ப்ரைஸ் அவருக்கு. ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருந்தார். பண்ணவே இல்லை. திடீர்னு பண்ணேன். மகி சொல்லி இருந்த மாதிரி ஜாமூன் பொறித்து கொஞ்சம் ஆறியதும், சர்க்கரை, தண்ணீர் சம அளவு எடுத்து பாகு செய்து (கம்பி பதம் எல்லாம் இல்லை, சும்மா கொதி வந்தா போதும் ) அதில் ஜாமூன் போட்டு, ஏலக்காய் போட்டு செய்தேன். நான் குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்கி செய்து இருக்கேன். ரவை,பால் பவுடர் வைத்து அடுத்த முறை ட்ரை பண்ணனும். (இதை  பண்ணவே இத்தனை நாள் ஆச்சு, அதை எப்போ ட்ரை  பண்ண போறேனோ !!!!  :) )  அடுத்து காந்த்வி ட்ரை பண்ணேன். நல்லா வந்தது மகி. இந்த தடவை போட்டோ எடுக்கலை. அடுத்த முறை செய்யும் போது போட்டோ எடுத்து போடுகிறேன்.   
Author: Priya ram
•Monday, August 22, 2011
இதுக்கு முன்னாடி நான் பண்ண ரெண்டு எம்போஸ் பெயின்டிங் போட்டு இருந்தேன். இது நான் பண்ண மூன்றாவது பெயின்டிங். இந்த கிட்  இதே மாதிரி பாக்ஸ் ல கிடைக்கும். அதுல ஒரு வெல்வெட் துணியில் (கலர் பண்ணாம ) படம் வரைந்து இருக்கும். அந்த படம் கலர் பண்ணி, பாக்ஸ் மேல இருக்கும். 7  கலர் கிட் கூட வரும். இந்த கலரில் ஒன்னு, ரெண்டு கலர் சேர்த்தால் கிட் ல  இல்லாத  ஒரு கலர் கொண்டு வரலாம்.  

உ.தா: பிங்க் + ப்ளூ = வயலெட்
வெள்ளை + ஆரஞ்சு = பீச்

இப்படி இல்லாத கலர்சும் கொண்டு வரலாம்.



இந்த மாதிரி வெல்வெட் துணியை வச்சு எல்லா பக்கமும் செல்லோ டேப் போட்டு நகராத மாதிரி ஒட்டிக்கணும்.


அப்புறம் கொடுத்து இருக்க பிரெஷ் வச்சு, பாக்ஸ் மேல இருக்க படத்துல இருக்க கலர்க்கு ஏத்த மாதிரி, கலர் பண்ணனும். (இல்லைனா நம்ப விருபத்துக்கு ஏத்த மாதிரியும் கலர் பண்ணிக்கலாம் )



கலர் பண்ணி முடிச்ச பிறகு ஒரு நாள் காய வைத்து விட்டு மறுநாள் இந்த வெல்வெட் துணியை கவிழ்த்து போட்டு (டிசைன் கீழ் பக்கம் பார்த்த மாதிரி இருக்கணும் ) மேல பேப்பர் போட்டு அயன் பண்ணனும். இவ்வாறு அயன் பண்ணுவதால் படம் எம்போஸ் ஆகி வரும். எம்போஸ் பண்ண பெயின்டிங் பிரேம் பண்ணிக்கலாம்.

 சின்ன பசங்களை கூட இதை செய்ய சொல்லலாம்.
Author: Priya ram
•Saturday, August 20, 2011


மல்டி கலர் கிறிஸ்டல் மணிகள் வைத்து இதை  செய்தேன்.



ப்ளூ கலர் கிறிஸ்டல் மணிகள் வைத்து இதை  செய்தேன். 



கிரீன் கலர்  மணிகள் வைத்து இதை  செய்தேன்.

Author: Priya ram
•Monday, August 15, 2011
என்னோட மாமி பொண்ணு ஒருத்தி எம்போஸ் பெயின்டிங் பண்ணி இருந்தா. அதை பார்த்ததும் எனக்கும் வாங்கி ட்ரை பண்ணனும்னு தோனுச்சு. நான் முதல்ல  பண்ண எம்போஸ் பெயின்டிங் இது தான். இந்த கிட்  விலை 70  ரூபாய் தான்.  பெயிண்ட் பண்ணற ஆர்வத்துல கண்ணு,மூக்கு எல்லாம் தெரியாத மாதிரி பெயிண்ட் பண்ணிட்டேன்.   


அந்த பெயிண்ட் கிட்ல கருப்பு கலர் பெயிண்ட் வேற இல்லை. என்ன பண்ணறதுன்னு ஒன்னும் புரியாத நேரத்தில் சிநேகிதி கிட்ட கேட்டேன். அவங்க கருப்பு பியர்ல் கலர்  வாங்கி கண்ணு, மூக்கு எல்லாம் வரஞ்சிடுங்கனு ஐடியா தந்தாங்க. அதே மாதிரி பண்ணிடலாம்னு கருப்பு பியர்ல் கலர் வாங்கி டூத் பிக் வச்சு கண்ணு, மூக்கு, வாய்,மீசை  எல்லாம் வரைந்தேன்.


இது நான் ரெண்டாவதா பண்ண எம்போஸ் பெயின்டிங். 


இந்த கிட் 125 ரூபாய் தான். அழகான எம்போஸ் பெயிண்ட்டிங் கிடைத்திடும். சின்ன குழந்தைங்க கூட பண்ணலாம்.


அடுத்ததா  இன்னும் ஒரு எம்போஸ் பெயிண்ட்டிங் பண்ணிட்டு இருக்கேன். அதை விளக்கமா  அடுத்த பதிவில் போடறேன். 


பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க.
Author: Priya ram
•Sunday, August 14, 2011
கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் தேங்காய் போட்ட காய் எதுவும் சாப்பிட மாட்டேன். டெய்லி அம்மா கிட்ட ரோஸ்ட் காய் தான் வேணும்னு கேட்பேன். எங்க  அம்மா நிறைய எண்ணெய்  விட்டு எல்லா காயும் முறுவலா வர  மாதிரி  செய்வாங்க. இங்க, எங்க மாமியார் வீட்டுல நிறைய எண்ணெய் சேர்க்க மாட்டோம். அதனால onnu, ரெண்டு  காய் தான் ரோஸ்ட் டா கிடைச்சு இருக்கு. எங்க அம்மா காய் பண்ணா வெறும் காய் மட்டும் சாப்பிட்டே நாங்க மூணு பெரும் காலி பண்ணிடுவோம். டிபன் பாக்ஸ் ல எடுத்துட்டு போனா எனக்கு ஒரு காய் கூட கிடைக்காது. என்னோட தோழிகளே எல்லாத்தையும் எடுத்துப்பாங்க. இப்போ காய் எப்படி பண்ணறதுன்னு பார்ப்போம். 

உருளைகிழங்கை கட் பண்ணி மஞ்சள் பொடி போட்டு குக்கரில் வேக வைக்கணும்.   

வெந்ததும் தோல் உருச்சிட்டு வாணலியில் எண்ணெய்  விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடிக்க விட்டு, தோல் உருச்ச உருளைகிழங்கு போடணும். 



உப்பு, மிளகாய் பொடி போட்டு அடுப்பை  சிம் -ல வச்சு நல்லா கலந்து கொடுக்கணும்.


மிளகாய் பொடி வாசனை போய், சுபெர்ப்  உருளைகிழங்கு ரோஸ்ட் கிடைக்கும்.


அரச்சு விட்ட சாம்பார் கூட இந்த காய் தொட்டுண்டு சாப்பிட சூப்பர் ரா இருக்கும். இதே முறையில சேப்பங்கிழங்கு ரோஸ்ட் - ம் பண்ணலாம்.
Author: Priya ram
•Friday, August 12, 2011

கல்யாணத்துக்கு முன்னாடி எப்போ டிரஸ் வாங்கினாலும் அதுக்கு தகுந்த மாதிரி வளையல் வாங்கிடுவேன். புது டிரஸ் பார்த்ததும், வளையல் வாங்க என் தம்பி கூட வண்டியில கிளம்பிடுவேன். அவனும் நான் வளையல் வாங்கற வரைக்கும் பொறுமையா வெயிட் பண்ணுவான்.




 


எங்க கல்யாணம் மூணு நாள் கல்யாணம். நிறைய சம்ப்ரதாயம் நிறைந்த கல்யாணம். ஒவ்வொரு  சம்ப்ரதாயத்துக்கும் ஒரு பட்டு புடவைன்னு, என்னோட கல்யாணத்துக்கு மொத்தம் 7   பட்டு பொடவை எடுத்தாங்க. ஒரு ஒரு புடவைக்கும் 4  டசன் வளையல் வாங்கிண்டேன். அப்புறம் விளையாடல்னு ஒரு ஈவென்ட் அதுக்கு என்னவர் வீட்டுக்காரங்க வேற ஒரு 4 , 5  டசன் வளையல்  வாங்கி தருவாங்க. 





நான்  கல்யாணம் ஆகி சிங்கப்பூர் போகும் போது, எங்க அக்கா வளையல் எடுத்து கிட்டு போக ஒரு கிட் வாங்கி தந்தா. அப்புறம் நான் ஒரு 2  கிட் வாங்கினேன். 

எனக்கு வளையல் மேல இருக்க ஆசைய பார்த்து கல்யாணத்துக்கு அப்புறம் எங்க நாத்தனார் பெங்களூர் -ல இருந்து நிறைய ஆர்டிபிசியல் வளையல் வேற வாங்கி அனுப்பினாங்க.




சிங்கப்பூர் -ல எனக்கு ஒரு நார்த் இந்தியன் தோழி கிடைச்சாங்க. அவங்க ஊருக்கு போயிட்டு வரும்போது, அவங்க பக்கம் கல்யாணத்துக்கு போட்டுக்கற வளையல் எனக்காக வாங்கிட்டு வந்து தந்தாங்க.




இப்படி நிறைய வளையல் சேர்ந்தாலும் எப்போ வளையல் கடை பார்த்தாலும் வளையல் வாங்க மாட்டோமான்னு தான் இருக்கும். (வச்சுக்க தான் கிட் இல்லை :(  )

இத பார்த்துவிட்டு யாரும் கண்ணு, மூக்கு (   ஹி.....ஹி..... பேச்சு வாக்குல வந்துடுச்சு )     எல்லாம் போடாம ப்ரியாக்கு இன்னும் நிறைய    கிட் வளையல் சேரணும்னு சொல்லிட்டு போங்க.
Author: Priya ram
•Wednesday, August 10, 2011
தேங்காய் சேர்த்து செய்ய கூடிய எல்லா காயும் எங்க வீட்டுல இப்படி தான் செய்வாங்க. இந்த மாதிரி முறைல அவரைக்காய், பீன்ஸ், கேரட், பீட்ரூட், வெண்டைக்காய்,வாழைக்காய்,கோஸ், குடைமிளகாய், -ல  செய்யலாம்.

நான் அவரைக்காய் - ல செய்து இருக்கேன்.




செய்முறை :

அவரைக்காயை பொடியாக நறுக்கிக்கணும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் (தேங்காய் போட்டு செய்யும்  காய்க்கு எல்லாம் கொஞ்சமாக எண்ணெய் விட்டால் போதும் ) விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி, நறுக்கிய காயை போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு,உப்பு போட்டு மூடி வேக விடனும். நன்றாக வெந்ததும், துருவிய  தேங்காய் போட்டு கிளறி இறக்கிடணும். 

கொத்தமல்லி கொஞ்சம் பொடியாக நறுக்கி தூவினால் நன்றாக இருக்கும். வெண்டைக்காய் இந்த முறையில் செய்யும் பொழுது தண்ணீர்க்கு பதில் கொஞ்சம் மோர் இல்லைனா புளி தண்ணி கொஞ்சம் விட்டால் கொழ கொழப்பு நீங்கி வெந்து வரும். கோஸ் பண்ணும் போது பயத்தம் பருப்பு கொஞ்சம் ஊறவச்சு காய் பண்ணும்போது சேர்த்தால் ரொம்ப நல்லா இருக்கும். குடைமிளகாய் செய்யும் போது தேங்காய் தூவி செய்யலாம் இல்லைனா வெந்த துவரம் பருப்பு கொஞ்சம் போட்டு கலந்து முடிக்கலாம். எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும்.
Author: Priya ram
•Monday, August 08, 2011

இந்த பாயசம்  மங்களகரமான பாயசமாம்.(மஞ்சள், சிவப்பு, பச்சை கலர் ல இல்லையேனு யாரும் கேட்க கூடாது ) எந்த பண்டிகை வந்தாலும் இந்த பாயசம் தான் செய்வாங்க. அதுவும் இந்த ஆடி மாசத்துல நிறைய செய்வாங்க. ஆடி வெள்ளி, ஆடி அம்மாவாசை, ஆடி கிருத்திகை இப்படி எல்லா நாளும் பருப்பு பாயசம் தான் இருக்கும். இது செய்யறதும் ஈஸி தான். (பிரியாக்கு வேற வேலையே இல்லை. எல்லாம் ஈஸி ஈஸி - னு சொல்லிடுவாங்க, செய்யறது யாருன்னு கேட்கறீங்களா ???? )  ட்ரை பண்ணி பாருங்க. நிஜமாகவே ரொம்ப
ஈஸியான பாயசம் தான்.  சக்கரை சேர்வதை விட வெல்லம் சேர்ந்தால் ஒடம்புக்கும் ரொம்ப நல்லது. வெல்லத்துல இரும்பு சத்து அதிகம் இருக்கு.

தேவையான பொருட்கள் :

கடலை பருப்பு - 1 /2  கரண்டி
பயத்தம் பருப்பு - 1 1 /2  கரண்டி
பால் - 1  டம்ளர்
வெல்லம் - தேவையான அளவு
நெய்
முந்திரி, திராட்சை

அரைக்க :

அரிசி - 1 கை ( 1 /2  மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும் )
தேங்காய்
ஏலக்காய்



செய்முறை :

கடலை பருப்பு, பயத்தம் பருப்பு லேசாக வறுத்து, பாலும் கொஞ்சம் தண்ணியும் கலந்து  விட்டு குக்கரில் பருப்பை  குழைய வேகவிடவும். இதில் சீவிய வெல்லத்தை போட்டு நன்றாக கலக்கவும். அரைக்க கொடுத்து உள்ளதை கரகரனு அரைத்து இதில் கொட்டி பால் கொஞ்சம் விட்டு சுட வைக்கவும். தனியாக நெய் காயவைத்து முந்திரி, திராட்சை பொறித்து கொட்டி இறக்கினால் பயத்தம் பருப்பு பாயசம் ரெடி.


பாயசம் பார்க்கும் போதே மனசு வேணும் வேணும்னு சொல்லுதா ?????
ஒடம்புக்கு வேற நல்லது. வேண்டியவங்க எவ்வளவு வேணும்னாலும் தாராளமா எடுத்து குடிக்கலாம். குடிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க....

Author: Priya ram
•Thursday, August 04, 2011
இந்த ரசம் பித்தத்தை போக்கும். செய்முறையும் ரொம்ப ஈஸி.  எங்க மாமனார்க்கு டெய்லி சாப்பாட்டுல சாம்பார், காய் எதுவும் இல்லைனாலும் ரசம் கண்டிப்பா இருக்கணும்.  அதனால எங்க வீட்டுல தினமும் சாம்பார், காய், ரசம், சாதம்  இருக்கும். சாம்பார் மட்டும் டெய்லி மாறும். ஒரு நாள் சாம்பார், அடுத்த நாள் வத்த கொழம்பு, அடுத்த நாள் கீரை, அடுத்த நாள் மோர் கொழம்பு, அடுத்த நாள் அவியல், அடுத்த நாள் பொரிச்ச கூட்டு இப்படி டெய்லி ஒரு வகை இருந்தாலும்  ரசம் எப்பவும் இருக்கும். சாம்பார் தவிர்த்து மத்த நாள் எல்லாம் ரசத்துக்காக பருப்பு தனியா குக்கர்ல வைக்கணும். சாதம் எங்க மாமியார் வெண்கல பானை -ல வடிச்சு பண்ணுவாங்க. (சாதத்துல  இருக்க கஞ்சி சுகர் இருக்கவங்களுக்கு நல்லது இல்லைன்னு டெய்லி எங்க வீட்டுல சாதம் வடிப்பாங்க ) என்னிக்காவது ஒரு நாள் பருப்பு வைக்க கஷ்டமா இருந்தா, இந்த ரசம் பண்ணிடுவோம். சீக்கரம் பண்ணிடலாம்.

செய்முறை :

புளியை நல்லா கரைச்சு அதுல தக்காளி நறுக்கி போட்டு, உப்பு, மிளகாய் பொடி (கொஞ்சமா ), மஞ்சள் பொடி,பெருங்காயம்  போட்டு பச்சை வாசனை போக நன்றாக கொதிக்க விடனும்.


நன்றாக கொதித்ததும் ரசப்பொடி போடணும்.

தனியாக வாணலியில் கொஞ்சமாக நெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கொஞ்சமாக வேப்பம்பூ போட்டு வறுத்து ரசத்துல கொட்டிடனும். ரசம் ரொம்ப கம்மியா தெரிந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கலாம்.

ரசம் மஞ்சள் நுரை நுரச்சிண்டு வரும்போது இறக்கிடணும்.

வேப்பம்பூ ரசம் ஒடம்புக்கு ரொம்ப நல்லது. மயக்கம், பித்தம் எல்லாம் சரி பண்ணும். தேங்காய் துவையல், வேப்பம்பூ ரசம் இருந்தால் எதுவும் வேண்டாம்.  ட்ரை பண்ணி பாருங்கோ.....
Author: Priya ram
•Wednesday, August 03, 2011
எங்க வீட்டுல எல்லாம் ஈச்சொம்பு -ல தான் ரசம் பண்ணுவாங்க. ரசம் வாசனையா அருமையா இருக்கும். ரசம் பண்ணறது ரொம்ப ஈஸி. இந்த பாத்திரத்தை அடுப்புல காலியா வச்சிட்டு வேலை பண்ண கூடாது. பத்திரம் அடிப்பகுதி மட்டும் தனியா வந்துடும். இதுல ரசம் பண்ணும் போது அடுப்பு சிம் - ல தான் இருக்கணும்.




துவரம் பருப்பை வேகவச்சு தனியா வைக்கணும்.

தனியா ஒரு பாத்திரத்தில்  புளியை கரைச்சு தண்ணிய ஈயச்சொம்புல விட்டு, பொடியா நறுக்கிய தக்காளி போட்டு, உப்பு, மிளகாய் பொடி போட்டு அடுப்புல ஏத்திடனும்.



இது தான் ஈயப்பாத்திரம். சூடா  இருக்கும்போது கிடுக்கி வச்சு புடிச்சா இப்படி தான் லைட் டா பள்ளம் விழும்.... :)

பச்சை வாசனை போனதும், வேக வச்ச துவரம் பருப்பு கொஞ்சமா எடுத்து அதுல தண்ணி விட்டு கரைச்சு விடனும்.  ( நிறைய பருப்பு விட்டால், கொஞ்சம் கொதிச்சதும் மேலாக எடுத்து அதுல ரசப்பொடி போட்டு ரசமாகவும், அடில திக்காக இருக்கும் பருப்புல கடுகு,வெந்தயம், பெருங்காயம் தாளிச்சு கொட்டி, ஏதாவது வேக வச்ச காய் போட்டு சுட வச்சு சாம்பார்- ஆகவும் யூஸ் பண்ணலாம். ஒரே நேரத்துல ரெண்டு வேலை ஆகிடும். ) ரசப்பொடி போடணும்.



மஞ்சள் நுரை நுரச்சிண்டு வரும் போது கொத்தமல்லி போடணும்.


நெய் தனியாக காய வைத்து கடுகு, ஜீரகம், பெருங்காயம் தாளித்து கொட்டினால் ரசம் ரெடி.

காமெடி பகுதி : என்னவர் ஒரு நாள் இன்னிக்கு நான் ரசம் பண்ணறேன்னு சொன்னார்.  யாரும் சமையல் ரூம் உள்ள வரகூடாதுனு சொல்லிட்டார். சரி அவரே சரியா பண்ணிடுவார்னு நம்......பி..... நாங்களும் யாரும் போகலை. மொதல்ல ஈயச்சொம்பை அடுப்புல வச்சார். அதுல கொஞ்சம் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, ஜீரகம் எல்லாம் போட்டு விட்டு புளி தண்ணி விட்டா தண்ணி கீழ கொட்டறது. என்னனு பார்த்தா பாத்திரம் அடிப்பகுதி மட்டும் ரவுண் -  டா அழகா பேர்ந்து வந்து இருக்கு. அவர் சமைக்க போனதுல ஒரு ஈயச்சொம்பு வீண் ஆனது தான் மிச்சம்.  

பின் குறிப்பு : என்னோட ப்ளாக் - யை பின் தொடர்பவர் லிஸ்ட் ல என்னவர் இருந்தாலும், ப்ளாக் ஓபன் பண்ணி பார்ப்பதே இல்லை. அந்த தைரியத்தில் உங்களுடன் இந்த காமெடியை பகிர்ந்து கொண்டேன். :))))
Author: Priya ram
•Monday, August 01, 2011
வெஜிடபுள் ரைஸ் எங்க அம்மா ரொம்ப நல்லா செய்வாங்க. வீட்டுல எங்க மாமியார், மாமனார் இல்லாதப்போ (ஏன்னா அவங்க வெங்காயம், கேரட், பிரட் எல்லாம் சாப்பிட மாட்டாங்க ) அம்மா கிட்ட செய்முறை கேட்டு இந்த ரைஸ் பண்ணேன். ரொம்ப அருமையா இருந்தது.

தேவையான பொருட்கள் :

நெய்
கடலை எண்ணெய்
லவங்கம்
பட்டை
வெங்காயம் - 2
பூண்டு - 6  (எங்க அம்மா போடுவாங்க. நல்லா இருக்கும். நான் இதுல போடலை )
பச்சை மிளகாய்
கேரட் - 2
பீன்ஸ் - 7
உருளை கிழங்கு - 1
பச்சை பட்டாணி - 1  / 4  கப்
அரிசி - 1  கப்
தண்ணீர் - 2  கப்
முந்திரி பருப்பு
பிரட் - 4  ஸ்லைஸ்
புதினா - கொஞ்சம்
உப்பு


செய்முறை :

குக்கர் -ல கொஞ்சம் எண்ணெய், நெய் விட்டு பட்டை, லவங்கம் போட்டு வெடிக்க விடனும். வெங்காயம் போட்டு நன்றாக வதக்கணும். வதங்கியதும் பூண்டு,பச்சை மிளகாய்,பச்சை பட்டாணி  போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய  கேரட், பீன்ஸ், உருளை கிழங்கு போட்டு வதக்கணும்.

வதங்கியதும் அரிசியை களைந்து வடிய வச்சு குக்கர் ல போட்டு வதக்கணும்.  உப்பு தேவையான அளவு போடணும்.

வதங்கியதும் 2  கப் தண்ணீர் விட்டு ஒரு முறை கிளறி குக்கரை மூடி 2  விசில் விடனும். பிரஷர் போனதும் திறந்து ஒரு முறை கிளறி விடனும்.


தனியாக வாணலியில் நெய் காய வைத்து முந்திரி பொரிச்சு போடணும்.

பிரட் சின்ன சின்ன துண்டுகள் பண்ணி நெய் - ல பொரிச்சு சாதத்துல போடணும்.

சாதம் சூடாக இருக்கும் போதே புதினா தூவினால் அருமையான வெஜிடபள் ரைஸ் தயார்.



ரைத்தா தொட்டுண்டு சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும். பாஸ்மதி ரைஸ் இங்க யூஸ் பண்ண மாட்டாங்க. அதனால பச்சை அரிசில தான் பண்ணேன். நல்லா வந்தது.
Related Posts Plugin for WordPress, Blogger...