Author: Priya ram
•Friday, September 30, 2011
இந்த மணி மாலைகள்  செய்வது ரொம்ப ஈஸி. கருப்பு மணி சரம் வைத்து இந்த மணி செய்தேன். மணி சரம் விலை
25  ரூபாய், டாலர்  55  ரூபாய். இதர செலவுடன்  மொத்தம் 90  ரூபாய் தான் செலவு ஆகும்.




ஹிந்தி நாடகம் ஒண்ணுல, ஒரு பெண்  இந்த மாதிரி ஐந்து சரத்தில் மணி மாலை போட்டுண்டு இருந்ததை பார்த்தேன். அதை பார்த்ததும் அதே மாதிரி ட்ரை பண்ணலாம்னு ஐந்து ஹோல் இருக்க மாதிரி சமோசா லாக் தேடினேன். எந்த கடையிலயும்  கிடைக்காததால் மூணு ஹோல் இருக்க சமோசா லாக் வைத்து இந்த மணி செய்தேன்.



பின்னாடி  மணி வைப்பதை விட கயிறு வைத்தால் நல்லா இருக்கும்னு ஐடியா வந்ததால், பின்னாடி கயிறு வைத்து மணியை மாத்தினேன். எது நல்லா இருக்குனு சொல்லுங்க.....




இந்த சிவப்பு, பச்சை மணியில் மீதி இருந்ததை வைத்து இந்த மல்டி கலர் மணி செய்தேன். இந்த டாலரும்
55  ரூபாய் தான். குறைந்த செலவில் அழகழகான மணிகள் ரெடி.



Author: Priya ram
•Thursday, September 22, 2011
புளியோதரை எனக்கு ரொம்ப புடிக்கும். அதுக்கு தேவையான புளிக்காச்சல் செய்வது கஷ்டம்னு நினச்சுகிட்டு இருந்தேன். அப்புறம் ஆடி பதினெட்டுக்கு கலந்த சாதம் செய்யணும்னு புளிக்காச்சல் எப்படி செய்யறதுன்னு அம்மா கிட்ட கேட்டு செய்தேன். எல்லோரும் ரொம்ப நல்லா இருக்குனு சொன்னாங்க. அதுக்கு அப்புறம் நிறைய தடவை புளிக்காச்சல் செய்துவிட்டேன். செய்வதும் ரொம்ப ஈஸிதான்.


தேவையான பொருட்கள் :

தனியா - 1 / 2 கப்
உளுத்தம் பருப்பு -  1 / 2  கரண்டி
கடலைப்பருப்பு -  1 / 2 கரண்டி
வெந்தயம் -  1 / 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 16
 புளி - ரெண்டு எலுமிச்சம் பழம் அளவு
எள்ளு -  1 / 2  கரண்டி
நல்லெண்ணெய்
மஞ்சள் பொடி
உப்பு
கடலைக்காய்
பெருங்காயம்
கருவேப்பிலை

செய்முறை :

புளி, உப்பு போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு ஊற வைத்து கொஞ்சம் திக்காக கரைச்சு வச்சுக்கணும்.
கடலைக்காய் வறுத்து தோல் நீக்கி  வச்சுக்கணும்.
தனியா, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய் - 8
எள்ளு இவை அனைத்தையும் வெறும் வாணலியில் வறுத்து பவுடர் பண்ணி வச்சுக்கணும்.


இந்த பவுடர் ரெண்டு, மூணு தடவை புளிக்காச்சல் செய்ய உதவும்.

வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு ( கொஞ்சமாக ), பெருங்காயம், காய்ந்த மிளகாய் - 8
போட்டு நல்லா வதக்கி புளிக்கரைசலை விட்டு கொஞ்சம் மஞ்சள் பொடி போட்டு நல்ல சுண்ட கொதிக்கவிடனும்.


நல்லா கொதிச்சு சுண்ட வந்ததும் வாணலியை அடுப்பில் இருந்து இறக்கிட்டு,
சூட்டுடன் 3 ஸ்பூன் அரச்சு வச்சு இருக்க பவுடர் போட்டு கிளறனும்.


 புளிக்காச்சல் ரெடி. கடலைக்காய் வருத்ததை இப்போவே சேர்த்துக்கலாம்.



புளிப்பு ஊறி சாப்பிட நன்றாக இருக்கும். அப்படி இல்லைனா சாதம் கலக்கும்  போது, தனியாக  வாணலியில் இன்னும் கொஞ்சம் எண்ணெய் வைத்து கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை  வறுத்து கொட்டி, கடலைக்காய் பருப்பும் போட்டு கலந்துக்கலாம்.


இந்த புளிக்காச்சலை சாதத்தில் போட்டு கலந்து, தொட்டுக்க வடாம் போட்டுண்டு சாப்பிட்டா நல்லா இருக்கும்.

Author: Priya ram
•Monday, September 12, 2011
எங்க அம்மா வீட்டுல எல்லாம் அடையில வெங்காயம் பொடியா நறுக்கி போட்டு செய்வாங்க. தடிமனா இருக்கும்.  என்னால ஒரு அடைக்கு மேல சாப்பிடவே முடியாது. எங்க மாமியார் வீட்டுல வெங்காயம் சேர்க்க மாட்டாங்க.. அதனால அடை மாவுல துருவின தேங்காய் போட்டு செய்வோம்.


தேவையான பொருட்கள் :

அரிசி - 1 /2 கப்
துவரம் பருப்பு -  1 /2 கப்
கடலை பருப்பு -  1 /2 கப்
பயத்தம் பருப்பு -  1 /2 கப்
மிளகாய் - காரத்துக்கு ஏத்த மாதிரி ( நான் 15  மிளகாய் போட்டு இருக்கேன் )
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம்
துருவின தேங்காய்
பொடியாக நறுக்கிய கருவேப்பிலை


செய்முறை :

அரிசி, பருப்பு, மிளகாய் ஒரு மணி நேரம் ஊற வைக்கணும்.






ஊறியதும் மிக்சியில கொரகொரன்னு அரச்சுக்கணும்.






அரச்ச மாவுல தேவையான அளவு மாவு எடுத்து, அதுல உப்பு, பெருங்காயம், துருவின தேங்காய், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை போட்டு அடை செய்யலாம்.  அடை பண்ணும் போது, அங்க அங்க ஓட்டை போட்டு, அதுல எண்ணெய் விட்டு செய்தால் மொறு மொறுன்னு நல்லா இருக்கும்.






எங்க வீட்டுல நாலு பேர் இருக்கோம். இந்த மாவு எங்க வீட்டுக்கு ரெண்டு நாளைக்கு  வரும். சமமான அளவு அரிசி, பருப்பு போடுவதால், நீங்க குறைவாகவும் போட்டுக்கலாம்.


அடைக்கு மிளகாய் பொடி, எண்ணெய் தொட்டுண்டு சாப்பிட்டா நல்லா இருக்கும். ஆனால் எனக்கு புடிச்சது தயிர் கூட சாப்பிடுவது தான். நீங்க எப்படி வேணும்னாலும் சாப்பிடுங்க...... :)
Author: Priya ram
•Monday, September 05, 2011
இந்த பூக்களை கிரேப் பேப்பர் (டபுள் சைடட் டுப்லெக்ஸ் பேப்பர் ) வைத்து செய்தேன். 









Related Posts Plugin for WordPress, Blogger...