Author: Priya ram
•Tuesday, November 29, 2011
தேவையான பொருட்கள் :

எண்ணெய்
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலை பருப்பு
துவரம் பருப்பு
தக்காளி
கத்தரிக்காய்
புளி
உப்பு
சாம்பார் மிளகாய்பொடி
மஞ்சள் பொடி

வறுத்து பொடி செய்ய :

தனியா - 2  ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2 
வெந்தியம் -  1  / 2  டீஸ்பூன்
 துவரம் பருப்பு - 1   ஸ்பூன்
துருவின தேங்காய் - 2  ஸ்பூன்


செய்முறை :

வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு தனியா, காய்ந்த மிளகாய், வெந்தியம், துவரம் பருப்பு, துருவின தேங்காய் போட்டு வறுத்து பவுடர் செய்து வச்சுக்கணும்.

புளியை நன்றாக கரைச்சு வச்சுக்கணும்.

வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு  போட்டு தக்காளி, கத்தரிக்காய் போட்டு வதக்கி, புளி தண்ணீர் கரைத்து விட்டு, உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு நன்றாக கொதிக்க விடனும். திக்காக வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி,
3  ஸ்பூன் வறுத்து பொடி பண்ண பவுடர் போட்டு, 2  ஸ்பூன் நல்ல எண்ணெய் விட்டு கிளறினால், பொடி போட்ட வத்த குழம்பு ரெடி....





இந்த வத்த குழம்பை காய்ந்த சுண்டைக்காய் வத்தல், வெண்டைக்காய் போட்டும் செய்யலாம். காய், தக்காளி போடும் போதே சின்ன வெங்காயம் போட்டு வதக்கியும் செய்யலாம். செய்து சாப்பிட்டு பாருங்க.... சூப்பர் ரா இருக்கும்.
Author: Priya ram
•Saturday, November 12, 2011
நானும், என்னவரும் வெளில சாப்பிட போகும் போது கட்லெட் ஆர்டர் பண்ணால் சாப்பிடவே மாட்டார்....  கட்லெட் வெளில சாப்பிடவே அவருக்கு புடிக்கலை. வீட்டுல நான் செய்து தரேன்னு சொல்லி இருந்தேன்.....

நானும், என்னோட அக்காவும் சின்னதுல கட்லெட் செய்து இருக்கோம். வெறும் உருளைகிழங்கு, வெந்நீரில் நனைச்ச பிரட் வச்சு செய்து இருக்கோம்.

தொலைக்காட்சில ஒரு தடவை ஈஸியாக   கட்லெட் செய்ய சொல்லி கொடுத்தாங்க. அதை பார்த்து விட்டு, அடுத்த நாளே ட்ரை பண்ணேன். ரொம்ப நல்லா வந்தது.... என்னவருக்கும் புடிச்சு இருந்தது....

தேவையான பொருட்கள் :

கேரட் - 1
உருளைகிழங்கு - 2
பச்சை பட்டாணி
கொத்தமல்லி
உப்பு
பிரட் கிரம்ஸ்
வறட்டு மிளகாய் பொடி
எண்ணெய்

செய்முறை :

உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி தனி தனியாக வேக வச்சுக்கணும்.


 வெந்த  காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, மிளகாய் பொடி போட்டு நன்றாக பிசையணும்.


பிசைந்து வச்சு இருக்கறதை வடை மாதிரி தட்டி பிரட் கிரம்ஸ் -ல்  பிரட்டி , தவாவில் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக பொறித்து எடுத்தால் கட்லெட் ரெடி...


கட்லெட் கூட டொமேடோ கெட்சப் தொட்டுண்டு சாப்பிடலாம்.


Author: Priya ram
•Wednesday, November 09, 2011

இந்த குருமா சப்பாத்தி , இட்லி, தோசைக்கு தொட்டுண்டு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள் :

கேரட் - 1 
பீன்ஸ் - 6
கோஸ் - 1 / 4 
வெங்காயம் - 2 
தக்காளி - 2
எண்ணெய்
நெய்
லவங்கம் -  2 
சீரகம் - 1 / 2  ஸ்பூன்
உப்பு
வறட்டு மிளகாய் பொடி
பால் - 1  கப்  
தயிர் - 1  கப் 


செய்முறை :

கேரட், பீன்ஸ், கோஸ் பொடியாக நறுக்கி வைக்கணும்.


வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி வைக்கணும்.

வாணலியில் கொஞ்சம் எண்ணெய், நெய் விட்டு, சீரகம், லவங்கம் வெடிக்க விடனும். வெங்காயம், தக்காளி போட்டு வதக்கணும். உப்பு, வறட்டு மிளகாய் பொடி போட்டு ஒரு முறை கிளறனும். காய் எல்லாம் போட்டு வதக்கணும்.

பால், தயிர் விட்டு கலந்து காய் வேக விடனும்.


காய்கள் வெந்து குருமா ரெடி....

கொஞ்சம் அதிகமா பால், தயிர் சேர்த்து செய்தால் க்ரேவி மாதிரி கிடைக்கும்.

சப்பாத்தியுடன் பால், தயிர் குருமா சாப்பிட ரெடி.


Related Posts Plugin for WordPress, Blogger...