Author: Priya ram
•Monday, January 30, 2012
இந்த கோலம் நேத்து எங்க வீட்டு வாசலில் நான் போட்டது. என்னோட நத்தனார்க்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி வாசலில் பெரிய கோலம் போடுவாங்களாம். என்னவரை தான் கூட துணைக்கு நிக்க சொல்லுவாங்களாம். அந்த நாள் நியாபகம் எல்லாம் வந்து, வாசலில் நீ கூட பெரிய கோலம் போடலாம்லன்னு என்னை கேட்டுகிட்டே இருந்தார். எங்க வீட்டுல எங்க அக்கா சூப்பர் ரா கோலம் போடுவா. எனக்கு பெரிய கோலம் எல்லாம் போடவே வராது.  


கேட்டுகிட்டே இருக்காரேன்னு, பிட் பேப்பர் எல்லாம் வச்சு கிட்டு,   நேத்து போட்டு தான் பார்த்துடுவோமேனு கோலம் போட்டேன்.


கோல மாவுல சுண்ணாம்பு கலந்து இருக்குனு, எங்க வீட்டுல அரிசி மாவு மட்டும் யூஸ் பண்ணி தான்  கோலம் போடுவோம்.


நான் போட்ட கோலம் சுமாராவாவது  இருக்கா ???? !!!!

Author: Priya ram
•Tuesday, January 24, 2012


காஜு கட்லி என்னோட நாத்தனார் சொல்லி கொடுத்து ரெண்டு முறை ட்ரை பண்ணேன். ஒழுங்காகவே வரலை. கொஞ்ச நாள் முன்னாடி ராக்ஸ் கிட்சேன் -  ல காஜு கட்லி செய்முறை பார்த்தேன். அதை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.  ரொம்ப புடிச்சு போச்சு. செய்து பார்க்கலாம்னு ட்ரை பண்ணதில் நல்லா வந்தது.

தேவையான பொருட்கள் :

முந்திரி - 1  கப்
சக்கரை - 1  / 2  கப்
தண்ணீர் - 1  / 4 கப்



செய்முறை :

முந்திரி பருப்பை லைட் சூடு இருக்க மாதிரி வருத்துக்கணும்.  அதை மிக்சில போட்டு நல்லா பவுடர் பண்ணிக்கணும்.
சக்கரைல தண்ணீர் விட்டு கம்பி பதம் வரும் வரை காய்ச்சனும்.
சக்கரை பாகில் கொஞ்சம்  கொஞ்சமாக முந்திரி பவுடர் போட்டு கிளறனும்.
நன்றாக கிளறி கொண்டே இருந்தால் சேர்ந்து வரும்.
சமையல் மோடை மேலே கொஞ்சம் நெய் தடவி, கிளறிய கலவையை கொட்டனும். நன்றாக பிசையணும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.

தட்டில் நெய் தடவி, மாவை தட்டி, துண்டு போட்டால் காஜு கட்லி ரெடி.



நேரம் போக போக இன்னும் இறுகி கொண்டு சாப்பிட  ரொம்ப நல்லா இருக்கும்.



என்னோட ப்ளாக் ஆரம்பித்து இன்னியோட ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு. இன்று  என் ப்ளாக் - முதல் பிறந்த நாள் கொண்டாடுகிறது. இதுவரை கமெண்ட் கொடுத்து என்னை ஊக்க படுத்திய அனைத்து தோழிகளுக்கும் நன்றி. உங்களோட ஆதரவு  இனி வரும் வருடங்களிலும் தருமாறு கேட்டு கொள்கிறேன்.
Author: Priya ram
•Wednesday, January 18, 2012
வீட்டுல ஒரு முறை வள்ளிக்கிழங்கு நிறைய இருந்தது. என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது வறுவல் பண்ணலாம்னு தோனித்து....உடனே வறுவல் பண்ணிட்டேன்.


 தேவையான பொருட்கள் :

வள்ளிக்கிழங்கு
எண்ணெய்
உப்பு
வறட்டு மிளகாய் பொடி

செய்முறை :

வள்ளிக்கிழங்கை தோல் நீக்கிட்டு சிப்ஸ் மாதிரி மெலிசாக சீவிக்கணும்.


வாணலியில் எண்ணெய் காய வைத்து பொறித்து எடுக்கணும்.

 

கடைசி முறை பொரிக்கும் முன்பு, பொரிச்சு வைத்திருப்பதில் உப்பு, வறட்டு மிளகாய் பொடி தூவி, அதன் மீது கடைசி முறை பொறிப்பதை போட்டு குலுக்கி கொடுத்தால் வள்ளிக்கிழங்கு வறுவல் உப்பு, காரத்துடன் தயார்.



இது நான் முதல் முறை செய்தது. கொஞ்சம் காரம் அதிகமாக போட்டு செய்துட்டேன். காரம் கம்மியாக போட்டு நேத்து திரும்பவும் செய்தேன் அந்த படம் தான் முதலில் உள்ள படம்.

குறிப்பு :

வள்ளிக்கிழங்கை சீவிய உடனே பொரிச்சிடனும்.
Author: Priya ram
•Thursday, January 05, 2012
மணி மாலை செய்யும் முறை 


தேவையான பொருட்கள் : 

கியர் ஒயர் 
கத்தரிக்கோல் 
பிளேயர் 
ப்ளூ கலர் மணி ( தேவையான கலர் மணிச்சரம் )
குட்டி கோல்ட் மணி 
சக்ரி 
பெரிய கோல்ட் மணி 
மணி முடிவில் கோர்க்கும் ஹூக் செட். ( இதில் நான்கு வளையம், ஒரு ஹூக் இருக்கும் )
கியர் லாக்




கருப்பா குட்டி, குட்டியா இருப்பது தான் கியர் லாக்.


கியர் ஒயர், கத்தரிக்கோல் எடுத்துக்கணும். நமக்கு எந்த அளவுக்கு மணி மாலை வேண்டுமோ அதை விட கொஞ்சம் அதிகமாக கியர் ஒயர் கட் பண்ணி எடுத்துக்கணும்.


இந்த மாதிரி ரெண்டு முடிவையும் புடிச்சுகிட்டு கோர்த்தா சீக்கிரம் கோர்த்து விடலாம். நமக்கு தேவையான மாதிரி மணிகளை கோர்த்து வைக்கணும்.


ஒன்னரை  மணி சரத்தில் ரெண்டு மாலைகள் செய்யலாம்.


மணி மாலையின் முடிவில், ஒரு பக்கம் நான்கு வளையம் வைத்து கியர் லாக் போட்டு லாக் பண்ணனும்.


கியர் லாக் -யை பிளேயர் கொண்டு அழுத்தி விடனும்.


மற்றொரு பக்கம் கியர் லாக்,  ஹூக் வைத்து கீழ் படத்தில் இருக்க மாதிரி கோர்க்கணும்.


கியர் லாக், ஹூக், திரும்பவும் கியர் லாக் மாதிரி கோர்க்கணும்.


நல்லா கியர் ஒயரை இழுத்து புடிச்சு கிட்டு, பிளேயர் வைத்து கியர் லாக் - யை அழுத்தி விடனும்.



கீழ்  உள்ள படத்தில் உள்ளவாறு அழுத்தணும்.


கியர் லாக் அழுத்தி விட்டால் மணி மாலை அறுந்து போகாத மாதிரி கிடைத்து விடும்.  எக்ஸ்ட்ரா கியர் ஒயரை கட் பண்ணிடனும். ஒரு மாலைக்கு 4  கியர் லாக் போதும்.



இரண்டு மணி மாலைகள் தயார்.

மணி மாலைக்கு செட் - டா கம்மல் செய்யும் முறை

தேவையான பொருட்கள் :

கம்பி
குட்டி கோல்ட் மணி
ப்ளூ கலர் மணி - 8 
பிளேயர்
கத்தரிக்கோல்
ஹாங்கிங் ஹூக்

 


கம்பி எடுத்து இந்த மாதிரி மணியை கோர்த்துக்கனும்.


பிளேயர் வைத்து மேலே  கம்பியை இந்த மாதிரி வளைக்கனும்.  


ஹாங்கிங் ஹூக் எடுத்து வளையத்தை  பிரித்து, இந்த மணியை அதில் கோர்க்கணும்.





வளையத்தை சேர்த்து விட்டால் கம்மல் தயார்.


அழகான மணி மாலை, கம்மல் செட். இந்த மாதிரி கலர் கலராக மணி சரம் வாங்கி மல்டி கலர் மணி மாலையும் செய்யலாம்.  மற்ற மணி மாலைகள் பார்க்க  இங்கே     கிளிக் செய்து பாருங்க. 


எனக்கு தெரிஞ்ச அளவுக்கு ஏதோ செய்முறையை  விளக்கிட்டேன்.... ஏதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.....
Related Posts Plugin for WordPress, Blogger...