Author: Priya ram
•Wednesday, January 18, 2012
வீட்டுல ஒரு முறை வள்ளிக்கிழங்கு நிறைய இருந்தது. என்ன பண்ணலாம்னு யோசிக்கும் போது வறுவல் பண்ணலாம்னு தோனித்து....உடனே வறுவல் பண்ணிட்டேன்.


 தேவையான பொருட்கள் :

வள்ளிக்கிழங்கு
எண்ணெய்
உப்பு
வறட்டு மிளகாய் பொடி

செய்முறை :

வள்ளிக்கிழங்கை தோல் நீக்கிட்டு சிப்ஸ் மாதிரி மெலிசாக சீவிக்கணும்.


வாணலியில் எண்ணெய் காய வைத்து பொறித்து எடுக்கணும்.

 

கடைசி முறை பொரிக்கும் முன்பு, பொரிச்சு வைத்திருப்பதில் உப்பு, வறட்டு மிளகாய் பொடி தூவி, அதன் மீது கடைசி முறை பொறிப்பதை போட்டு குலுக்கி கொடுத்தால் வள்ளிக்கிழங்கு வறுவல் உப்பு, காரத்துடன் தயார்.



இது நான் முதல் முறை செய்தது. கொஞ்சம் காரம் அதிகமாக போட்டு செய்துட்டேன். காரம் கம்மியாக போட்டு நேத்து திரும்பவும் செய்தேன் அந்த படம் தான் முதலில் உள்ள படம்.

குறிப்பு :

வள்ளிக்கிழங்கை சீவிய உடனே பொரிச்சிடனும்.
This entry was posted on Wednesday, January 18, 2012 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

8 comments:

On January 20, 2012 at 10:33 AM , Unknown said...

ஓக்கே வள்ளிக்கிழங்கு சீவிய உடனே பொறித்துவிடுறேன் ப்ரீயா

 
On January 20, 2012 at 12:36 PM , Radha rani said...

வல்லிகிழங்கில் சிப்ஸ்சா ..நல்லாஇருக்கு.காரம் அதிகமா போட்ட சிப்ஸ்தான் கலர்புல்லா சாப்பிட அழைக்குது..

 
On January 20, 2012 at 5:20 PM , Angel said...

எனக்கு ரொம்ப பிடிக்கும் செய்திடறேன்.ரெசிப்பிக்கு தேங்க்ஸ் ப்ரியா

 
On January 20, 2012 at 7:30 PM , vanathy said...

super. Looking crispy.

 
On January 21, 2012 at 10:54 AM , Mahi said...

How I missed this post? Just now saw this Priya! Crisply chips.

Is it maravalli kizhangu?

 
On January 22, 2012 at 8:42 PM , Sowmya said...

வள்ளிகிழங்கு சிப்ஸ் சூப்பர்.

 
On January 23, 2012 at 3:16 PM , Priya ram said...

சீக்கிரம் பொரிச்சு சாப்பிட்டு சொல்லுங்க சினேகிதி.

நன்றி ராதா.... செய்து சாப்பிட்டு பாருங்க... ரொம்ப நல்லா இருக்கும்.

நன்றி angelin.

 
On January 23, 2012 at 3:18 PM , Priya ram said...

நன்றி வானதி.



நன்றி சௌம்யா.



நன்றி மகி. இது இனிப்பு வள்ளிக்கிழங்கு வைத்து செய்தது. மர வள்ளிக்கிழங்கு இல்லை மகி.

 
Related Posts Plugin for WordPress, Blogger...