Author: Priya ram
•Tuesday, January 24, 2012


காஜு கட்லி என்னோட நாத்தனார் சொல்லி கொடுத்து ரெண்டு முறை ட்ரை பண்ணேன். ஒழுங்காகவே வரலை. கொஞ்ச நாள் முன்னாடி ராக்ஸ் கிட்சேன் -  ல காஜு கட்லி செய்முறை பார்த்தேன். அதை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.  ரொம்ப புடிச்சு போச்சு. செய்து பார்க்கலாம்னு ட்ரை பண்ணதில் நல்லா வந்தது.

தேவையான பொருட்கள் :

முந்திரி - 1  கப்
சக்கரை - 1  / 2  கப்
தண்ணீர் - 1  / 4 கப்



செய்முறை :

முந்திரி பருப்பை லைட் சூடு இருக்க மாதிரி வருத்துக்கணும்.  அதை மிக்சில போட்டு நல்லா பவுடர் பண்ணிக்கணும்.
சக்கரைல தண்ணீர் விட்டு கம்பி பதம் வரும் வரை காய்ச்சனும்.
சக்கரை பாகில் கொஞ்சம்  கொஞ்சமாக முந்திரி பவுடர் போட்டு கிளறனும்.
நன்றாக கிளறி கொண்டே இருந்தால் சேர்ந்து வரும்.
சமையல் மோடை மேலே கொஞ்சம் நெய் தடவி, கிளறிய கலவையை கொட்டனும். நன்றாக பிசையணும். சப்பாத்தி மாவு மாதிரி வரும்.

தட்டில் நெய் தடவி, மாவை தட்டி, துண்டு போட்டால் காஜு கட்லி ரெடி.



நேரம் போக போக இன்னும் இறுகி கொண்டு சாப்பிட  ரொம்ப நல்லா இருக்கும்.



என்னோட ப்ளாக் ஆரம்பித்து இன்னியோட ஒரு வருஷம் முடிஞ்சு போச்சு. இன்று  என் ப்ளாக் - முதல் பிறந்த நாள் கொண்டாடுகிறது. இதுவரை கமெண்ட் கொடுத்து என்னை ஊக்க படுத்திய அனைத்து தோழிகளுக்கும் நன்றி. உங்களோட ஆதரவு  இனி வரும் வருடங்களிலும் தருமாறு கேட்டு கொள்கிறேன்.
This entry was posted on Tuesday, January 24, 2012 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On January 24, 2012 at 3:30 AM , Mahi said...

முதல் வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் ப்ரியா! இன்னும் பலப்பல வருடங்கள் வெற்றிகரமாக வலைப்பூ உலகில் வலம்வர வாழ்த்துக்கள்!

காஜூ கத்லி நல்லா இருக்குது. நன்றி!

/உங்களோட ஆதரவு இனி வரும் வருடங்களிலும் தருமாறு கேட்டு கொள்கிறேன்./சும்மா கேட்டா எல்லாம் தரமாட்டோம்,கொஞ்சம் கமிஷன் அனுப்புங்க,சரியா?!;)

 
On January 24, 2012 at 10:09 AM , Unknown said...

வாழ்த்துக்கள்.. ஸ்வீட் சூப்பராக இருக்கு

 
On January 24, 2012 at 3:44 PM , Radha rani said...

வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள் ப்ரியா..தொடர்ந்து வந்துட்டே இருக்கேன்.

 
On January 24, 2012 at 3:53 PM , Radha rani said...

ஸ்வீட் நல்லாயிருக்கு..சீக்கிரம் செய்யுற ஈசியான குறிப்பு..செய்துடறேன்.:)

 
On January 24, 2012 at 8:15 PM , Aarthi said...

Congrats dear..

Aarthi
http://yummytummy-aarthi.blogspot.com/

 
On January 26, 2012 at 12:30 AM , அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

Happy Blog Birthday Priya...;) Lovely recipe...

 
Related Posts Plugin for WordPress, Blogger...