Author: Priya ram
•Thursday, March 22, 2012
எல்லோருக்குமே அவங்க அவங்க அம்மா சமையல் ரொம்ப புடிக்கும். அந்த சுவைக்கு ஈடு, இணையே கிடையாது. சாதாரணமா ஒரு ரசம், காய் செய்து தந்தா கூட அது தேவாம்ருதம் தான். அப்படி தான் எனக்கும். எங்க அம்மாவோட சமையல்னா அவ்வளவு புடிக்கும். அவங்க பண்ணறது எல்லாம் புடிச்சாலும், எனக்கு ரொம்ப புடிச்சதுன்னு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. ஒரு நாலு நாள் முன்னாடி ஊருக்கு போய் இருந்தேன். ஒரு மூணு நாள் இருந்து விட்டு வந்தேன். எனக்கு புடிச்சது எல்லாம் செய்ய சொல்லி, நல்லா........ சாப்பிட்டு வந்தேன். அங்க சாப்பிட்டது எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள தான் இந்த பதிவு.

எங்க வீட்டுல போன வாரம் நோம்பு. அதனால அடை செய்து இருந்தாங்க. சூப்பர் ரா இருந்தது. இது எப்படி செய்யணும்னு அடுத்த போஸ்ட் ல போடறேன்.


வெல்ல  அடை.

இந்த அடை - க்கு வெண்ணெய் தொட்டுண்டு சாப்பிட்டா நல்லா இருக்கும்.  


உப்பு அடை.



அரைத்து விட்ட சாம்பார்.


 பச்சை சுண்டைக்காய் போட்டு அரைத்து விட்ட சாம்பார்.  பின்னாடி பாத்திரத்தில் ஏதோ எட்டி பார்க்குதே அது என்னனா......


வெண்டைக்காய் ரோஸ்ட். தனி தனியா முறுவலா அம்மா பண்ணுவாங்க... இந்த தடவை வெண்டைக்காய் -ல ஏதோ சரி இல்லை... :)


போண்டோ, சுய்யம்.


குண்டு, குண்டா இருக்கே, அது தான் சுய்யம்... கொழுகட்டைக்கு செய்யும் பூரணம் செய்து, அதை உளுத்தம் மாவில் தோய்த்து எண்ணையில் பொறித்து எடுத்தால் சுய்யம் ரெடி.


சேப்பங்கிழங்கு ரோஸ்ட். எப்படி தனி தனியா சூப்பர் ரா இருக்கு பாருங்க...


முருங்கைக்காய் சாம்பார்.



முருங்கைக்காய். பச்சை தன்மை போகாம, வெந்து சூப்பர் ரா இருந்தது.



கடலைக்காய் பூரணம் கொழுக்கட்டை,எள்ளு பூரணம் கொழுக்கட்டை.  


தேங்காய் பூரணம் கொழுக்கட்டை.

இது இல்லாம, ஆப்பம் - குருமா, வெஜ் புலாவ்,  வெங்காய அடை, சப்பாத்தி - குருமா இப்படி இன்னும் நிறைய சாப்பிட்டேன். எங்க அம்மா சமையல் சூப்பர் ரா இருந்தது. நீங்களும் பார்த்து ரசிங்க..... ருசிங்க.....
Author: Priya ram
•Saturday, March 10, 2012
ரசிக்க ருசிக்கனு நானே பதிவுகள் தருவது போக, மத்தவங்க ப்ளாக் பார்த்து ரசித்து, செய்து பார்த்ததையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன். அது தான் இந்த ரசித்து ருசித்தவை...
நிறைய சமையல் குறிப்புகள்  பார்த்து புடிச்சிருந்தாலும், எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்க முடியவில்லை....
செய்தவை வரை உங்களுடன் இப்பொழுது பகிர்ந்து கொள்கிறேன். மற்றவை ரசித்து ருசித்தவை 1 ,2 ,3 ..... என்ற தலைப்புகளுடன்  பிறகு வரும்.....

ஒரு முறை வீட்டில் மிளகாய் பொடி தீர்ந்து போய் விட்டது.  மிளகாய் பொடி  செய்முறை  மஹி, அவங்க ப்ளாக் ல தந்து இருப்பது நினைவில் வர, அதை முயற்சி செய்து சூப்பர் ரா வந்தது... நன்றி மகி :)

செய்வதும் ரொம்ப ஈஸி யா தான் இருந்தது.

 கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சம அளவில் எடுத்துக்கணும். காரத்துக்கு ஏத்த மாதிரி மிளகாய்,   
 (நான் ஒரு 10 மிளகாய் எடுத்து கிட்டேன் ) பெருங்காயம், உப்பு,
ரெண்டு கை பிடி  எள்ளு ( அவங்க வெள்ளை எள்ளு சொல்லி இருப்பாங்க,
 நான் கருப்பு எள்ளு எடுத்துகிட்டேன்.  கருப்பு எள்ளு யூஸ் பண்ணறதா இருந்தால், ஒரு அரை மணி நேரம் ஊற வச்சு, தண்ணிய வடிய விட்டு எடுத்துக்கணும். வெள்ளை எள்ளு என்றால் அப்படியே எடுத்துக்கலாம். )



தனி தனியாக பருப்பு, எள்ளு, மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து கொர கொரனு பவுடர் பண்ணிக்கணும். அதனுடன் உப்பு, பெருங்காயம், கொஞ்சம் வெல்லம் ( நிறைய சேர்த்தால், காரம் தெரியாது) சேர்த்து கலந்துக்கனும்.




பொடி கைவசம் இருக்க, பொடி இட்லி, பொடி தோசை பண்ணனும்னு நினைச்சேன். பொடி இட்லி ஒரு முறை பிரேமா'ஸ் தளிகை ல  பார்த்ததில் இருந்தே செய்யணும்னு ஆசை. அதை இந்த பொடி வைத்து செய்து பார்த்து விட்டேன். அவங்க சொல்லி இருக்க பொடியும் ட்ரை பண்ணனும். நன்றி பிரேமா. :)


பொடி இட்லி செய்து விட்டேன், அடுத்தது பொடி தோசை செய்யலாம்னு மஹி'ஸ் கிட்சேன் ல பார்த்த பொடி தோசையை  செய்தேன். நன்றி மகி. :)


தோசை கூட வெங்காய சட்னி, தக்காளி சட்னி. ஒரு டிஷ்க்கு நிறைய சைடு டிஷ் பண்ணறது எனக்கு ரொம்ப புடிக்கும். சாம்பார் மட்டும் தான் அன்னிக்கு மிஸ்ஸிங்....


 மத்த ரசித்து ருசித்தவை வரும் பதிவுகளில்......
Author: Priya ram
•Thursday, March 01, 2012
எங்க அம்மா, அரச்சு விட்ட  சாம்பார் தனியா செய்து விட்டு, சாதம் செய்து அதில் நெய், நல்லெண்ணெய் விட்டு குழைய பிசைந்து சாம்பார் விட்டு நன்றாக கிளருவாங்க. அந்த மாதிரி தான் நானும் செய்துகிட்டு இருந்தேன். இந்த முறை ரொம்ப ஈஸி. ட்ரை பண்ணி பாருங்க....





தேவையான பொருட்கள் :

அரிசி - 1  கப்
thuvaram பருப்பு - 3  / 4 கப்
கத்தரிக்காய் - 1 
உருளைக்கிழங்கு - 2 
பீன்ஸ் - 10 
கேரட் - 3 
சௌ சௌ - 1 
பச்சை பட்டாணி - 1 / 4 கப்

வறுத்து அரைக்க :

கடலை பருப்பு - 2  டேபிள் ஸ்பூன்
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5 
பெருங்காயம்
வெந்தயம் - 1  / 4  டீஸ்பூன்
துருவின தேங்காய்
லவங்கம் - 4 
வெங்காயம் - 2 

தாளிக்க :

நல்லெண்ணெய்
நெய்
கடுகு
முந்திரி பருப்பு

அலங்கரிக்க :

கேப்சிகம் - 1 / 4 
தக்காளி - 2 
கொத்தமல்லி


மஞ்சள் பொடி
மிளகாய் பொடி
உப்பு
புளி

செய்முறை :


தேவையான பொருட்கள் லிஸ்ட் பார்த்ததும் ஓடிடாதீங்க..... பார்க்க தான் அப்படி இருக்கும். செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி.
 சரி செய்முறைக்கு போவோம்.

1 . அரிசி, பருப்பு, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், சௌ சௌ
பச்சை பட்டாணி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி  எல்லாம் குக்கரில் போட்டு 4 கப் தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு  வேக வைக்கணும்.

2 . வறுத்து அரைக்க கொடுத்து உள்ளவற்றை  எண்ணெய் விடாமல்   வறுத்து பேஸ்ட் பண்ணிக்கணும்.  ( வெங்காயமும் வறுத்து அரச்சு சேர்த்துடுங்க... சின்ன வெங்காயம் என்றால் சூப்பர் ரா இருக்கும். )

3 . புளி தண்ணீர் கரைத்து அதில் இந்த பேஸ்ட் கொட்டி, கட்டி இல்லாமல் கரைச்சுக்கனும்.

4 . குக்கர் பிரஷர் போனதும், நன்றாக கலந்து விட்டு, அதில் புளி கரைசலை விட்டு அடுப்பில் 5 நிமிடம் வைத்து நன்றாக கிளறனும்.

5 . உப்பு சேர்த்து, சூடாக இருக்கும் போதே தக்காளி, கேப்சிகம் பொடியாக நறுக்கி மேலே தூவவும்.

6 . வாணலியில் நெய் வைத்து காய்ச்சி முந்திரி வறுத்து கொட்டனும்.
 நல்லெண்ணெய் காய்ச்சி கொட்டனும். கடுகு தாளித்து கொட்டனும்.

7 .  கொத்தமல்லி தூவினால், கம கம பிசி பெலே பாத் ரெடி.

8 . சிப்ஸ், ரோஸ்ட் காய் தொட்டுண்டு சாப்பிட்டா சூப்பர் ஓ சூப்பர் தான்.....



Related Posts Plugin for WordPress, Blogger...