Author: Priya ram
•Thursday, March 22, 2012
எல்லோருக்குமே அவங்க அவங்க அம்மா சமையல் ரொம்ப புடிக்கும். அந்த சுவைக்கு ஈடு, இணையே கிடையாது. சாதாரணமா ஒரு ரசம், காய் செய்து தந்தா கூட அது தேவாம்ருதம் தான். அப்படி தான் எனக்கும். எங்க அம்மாவோட சமையல்னா அவ்வளவு புடிக்கும். அவங்க பண்ணறது எல்லாம் புடிச்சாலும், எனக்கு ரொம்ப புடிச்சதுன்னு ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு. ஒரு நாலு நாள் முன்னாடி ஊருக்கு போய் இருந்தேன். ஒரு மூணு நாள் இருந்து விட்டு வந்தேன். எனக்கு புடிச்சது எல்லாம் செய்ய சொல்லி, நல்லா........ சாப்பிட்டு வந்தேன். அங்க சாப்பிட்டது எல்லாம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள தான் இந்த பதிவு.

எங்க வீட்டுல போன வாரம் நோம்பு. அதனால அடை செய்து இருந்தாங்க. சூப்பர் ரா இருந்தது. இது எப்படி செய்யணும்னு அடுத்த போஸ்ட் ல போடறேன்.


வெல்ல  அடை.

இந்த அடை - க்கு வெண்ணெய் தொட்டுண்டு சாப்பிட்டா நல்லா இருக்கும்.  


உப்பு அடை.



அரைத்து விட்ட சாம்பார்.


 பச்சை சுண்டைக்காய் போட்டு அரைத்து விட்ட சாம்பார்.  பின்னாடி பாத்திரத்தில் ஏதோ எட்டி பார்க்குதே அது என்னனா......


வெண்டைக்காய் ரோஸ்ட். தனி தனியா முறுவலா அம்மா பண்ணுவாங்க... இந்த தடவை வெண்டைக்காய் -ல ஏதோ சரி இல்லை... :)


போண்டோ, சுய்யம்.


குண்டு, குண்டா இருக்கே, அது தான் சுய்யம்... கொழுகட்டைக்கு செய்யும் பூரணம் செய்து, அதை உளுத்தம் மாவில் தோய்த்து எண்ணையில் பொறித்து எடுத்தால் சுய்யம் ரெடி.


சேப்பங்கிழங்கு ரோஸ்ட். எப்படி தனி தனியா சூப்பர் ரா இருக்கு பாருங்க...


முருங்கைக்காய் சாம்பார்.



முருங்கைக்காய். பச்சை தன்மை போகாம, வெந்து சூப்பர் ரா இருந்தது.



கடலைக்காய் பூரணம் கொழுக்கட்டை,எள்ளு பூரணம் கொழுக்கட்டை.  


தேங்காய் பூரணம் கொழுக்கட்டை.

இது இல்லாம, ஆப்பம் - குருமா, வெஜ் புலாவ்,  வெங்காய அடை, சப்பாத்தி - குருமா இப்படி இன்னும் நிறைய சாப்பிட்டேன். எங்க அம்மா சமையல் சூப்பர் ரா இருந்தது. நீங்களும் பார்த்து ரசிங்க..... ருசிங்க.....
This entry was posted on Thursday, March 22, 2012 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

10 comments:

On March 23, 2012 at 5:01 AM , Mahi said...

அம்மா சமையல் அருமை! எல்லாமே நல்லா இருக்கு ப்ரியா! உப்பு அடை கொஞ்சம் நான் செய்யும் கொழுக்கட்டை போல இருக்குமோ? :)

சுண்டைக்காயில புளிக்குழம்புதான் செய்வோம் நாங்க,சாம்பார் புதுசா இருக்கு.

ஹ்ம்ம்..இப்படி முருங்கைக்காய் எல்லாம் ஊருக்கு வரப்பதான்!வெண்டைக்காய் கொஞ்சம் முத்தலாப் போச்சுன்னு நினைக்கிறேன்!

சுய்யம், இனிப்பு கொழுக்கட்டை,சேப்பங்கிழங்கு ரோஸ்ட்..வெளுத்துக்கட்டிருக்கீங்க! ;)

 
On March 23, 2012 at 9:16 AM , Priya ram said...

நன்றி மகி...

இந்த உப்பு அடை அரிசி மாவு வச்சு செய்யறது... சீக்கிரமாகவே செய்முறை போடறேன்.... வெல்ல அடையும் ட்ரை பண்ணி பாருங்க மகி... நல்லா இருக்கும்..

பச்சை சுண்டைக்காய் - ல அரைத்து விட்டு சாம்பார் செய்து சாப்பிட்டு பாருங்க... சும்மா சூப்பர் ரா இருக்கும்... இதுக்கு கத்தரிக்காய் ரோஸ்ட் காய் தொட்டுண்டு சாப்பிடனும்...

அங்க முருங்கைக்காய் பிரெஷ் - ஷா கிடைக்காதா ! போட்டோ -ல இருக்க முருங்கைக்காயை இப்போதைக்கு ருசிச்சிக்குங்க....

இன்னும் நிறைய அம்மா கையாள செய்து சாப்பிடனும்னு நினச்சேன் மகி... ஆனால் டைம் இல்லை.... 3 நாள்ல இவ்வளவு தான் சாப்பிட முடிஞ்சுது. :(

 
On March 26, 2012 at 3:40 PM , காமாட்சி said...

ப்ரியா அம்மா சமையல் எல்லாம் நேர்த்தியாக இருக்கு. எப்பவுமே கமெண்ட் அனுப்ப போவதற்கு தகராரு. காரடை நான்கூட பதிவு போட்டிருந்தேன். அம்மா ஈரமாவு வறுத்தறைத்துப் பண்ணியிருக்கலாம்.
நான் களைந்துலர்த்திய அரிசி வறுத்துடைத்துப் பண்ணினேன். நல்ல மாமியார், அம்மாவின் பக்குவங்கள் உன்னையும் தொடருகிறது. ஸந்தோஷம். அடிக்கடி வந்துகொண்டிரு. அன்புடன்

 
On March 28, 2012 at 7:22 PM , Vijiskitchencreations said...

ammaa samyal all recipes are super. I like it.
I am following your blog.
byw www.vijisvegkitchen.blogspot.com

I like your vella adai.

 
On April 2, 2012 at 6:46 AM , Sowmya said...

ம்ம் சூப்பர் ரெசிபிஸ்.அம்மா சமையல் எப்பவுமே ஸ்பெஷல்

 
On April 3, 2012 at 1:29 PM , Priya ram said...

நன்றி காமாட்சி அம்மா...

 
On April 3, 2012 at 1:30 PM , Priya ram said...

நன்றி சௌம்யா...

 
On April 3, 2012 at 1:32 PM , Priya ram said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி விஜி. அடுத்த பதிவு வெல்ல அடை, உப்பு அடை தான்.... ட்ரை பண்ணி பாருங்க... சூப்பர் ரா இருக்கும்.

 
On April 3, 2012 at 7:51 PM , Priya dharshini said...

hi priya, amma samayal super menu..First time here,glad to follow u :)

 
On April 3, 2012 at 8:08 PM , Priya ram said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பிரியா...

 
Related Posts Plugin for WordPress, Blogger...