Author: Priya ram
•Monday, April 09, 2012
எங்க வீட்டுல காரடையான் நோன்புன்னு, ஒரு நோன்பு உண்டு. அந்த நோன்புக்கு இந்த அடை செய்வாங்க.

வெல்ல அடை செய்ய தேவையான பொருட்கள் :

அரிசி மாவு
வெல்லம்
காராமணி
தேங்காய்
நெய்  

அரிசி மாவு செய்முறை :

4  கப் அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, வடிய விட்டு,மிக்ஸியில்  araiththu, சலித்து, மாவை வறுத்து [இளம் சூடு ], சலித்து வைத்தால் அரிசி மாவு கிடைக்கும். இந்த மாவில் வெல்ல அடை, உப்பு அடை, கொழுக்கட்டை எல்லாம் செய்யலாம். 


இப்போ வெல்ல அடை செய்முறைக்கு போவோம். காராமணியை வேக வைத்து வச்சுக்கணும்.


வெல்லம், ஒரு கால் கப் தண்ணீர் சேர்த்து சுட வைக்கணும். இதை வடிகட்டணும்.


வாணலியில் வடிகட்டின வெல்ல  தண்ணீர் சேர்த்து அதனுடன் வேக வைத்த காராமணி, தேங்காய் சேர்த்து கொதிக்க விடனும்.


நல்லா கொதிக்கும் போது அரிசி மாவு சேர்த்து நன்றாக கிளறனும்.


கட்டி தட்டாமல் நன்றாக கிளறனும்.


நன்றாக சேர்ந்து வரும் போது 2 ஸ்பூன் நெய் விட்டு கிளறனும்.


இந்த மாதிரி மாவு கிடைக்கும்.


இந்த மாவை, எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வடைகளாக தட்டி,



வேக வைத்து எடுத்தால் வெல்ல அடை ரெடி.



இந்த அடையுடன் வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

உப்பு அடை செய்ய தேவையான பொருட்கள் :

அரிசி மாவு
தண்ணீர்
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
பச்சை மிளகாய்
பெருங்காயம்
கொத்தமல்லி, கருவேப்பிலை
உப்பு
தேங்காய்
காராமணி

செய்முறை :

வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம்  தாளிக்கணும்.


பச்சை மிளகாய் போட்டு வதக்கணும்.


தண்ணீர் விட்டு, தேங்காய், வேக வைத்த காராமணி, உப்பு போட்டு கொதிக்க விடனும்.


கருவேப்பிலை போடணும்.

நன்றாக கொதிக்கும் போது மாவு சேர்த்து கிளறனும். கொத்தமல்லி  தூவணும்.

இந்த மாவை எண்ணெய் தடவிய இட்லி தட்டில் வடைகளாக தட்டி வேக வைத்தால் உப்பு அடை ரெடி.


வெல்ல அடை, உப்பு அடை செய்து சாப்பிட்டு பாருங்க. சூப்பர் ரா இருக்கும்.
Related Posts Plugin for WordPress, Blogger...