Author: Priya ram
•Friday, July 20, 2012
இதுக்கு முன்னாடியே ஒரு போஸ்ட் அம்மா சமையல் பத்தி போட்டு இருக்கேன்... இப்போ இந்த தடவை ஊருக்கு போய்  இருக்கும் போது (ஒரு ரெண்டு மாசம் முன்னாடி ) இந்த dishes எல்லாம் செய்து தந்தாங்க...

குட்டி இட்லி : குட்டி இட்லி செய்து, கூடவே அரச்சு விட்ட சாம்பார் செய்து... இட்லி மேல நிறைய சாம்பார் விட்டு, கொத்தமல்லி தூவி, அதன் மேல கொஞ்சம் நெய் விட்டு, ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டா  சும்மா சூப்பர் ரா இருக்கும்....

குட்டி இட்லி


அரச்சு விட்ட சாம்பார்


இட்லி, சாம்பார், கொத்தமல்லி, நெய்யுடன்




ஸ்வீட் பணியாரம் : இது கூட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்... செய்யறதும் ரொம்ப ஈஸி தான்... சீக்கிரம் குறிப்பு தரேன்...


போன ரெண்டு நாள்ல, ஒரு நாள் எவனிங் ஸ்நாக்ஸ்க்கு செய்து தந்தாங்க.. சூப்பர் ரா இருந்தது...


பூரி- சென்னா : சவுத் இந்தியன் சமையல்ல கலக்கிட்டு இருந்த எங்க அம்மா திடிர்னு சென்னா மசாலா, ராஜ்மா மசாலா, பைங்கண் பார்த்தா, ஆளு பராட்டா , புல்கா இப்படி நார்த் இந்தியன் சமையலும் சூப்பர் ரா செய்ய ஆரம்பிச்சு, இப்போ அதுலயும் கலக்கறாங்க... சமையல்ல ஆர்வம் இருந்தா எல்லா dishes யும் ஈசியா பண்ணிடலாம்... இல்லைங்களா ?



காஞ்சிபுரம் இட்லி : இந்த இட்லி சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்... மிளகு, சீராக வாசனையுடன், முந்திரி பருப்பு எல்லாம் போட்டு செய்வாங்க... இதுக்கு பெஸ்ட் காம்பினேஷன் மிளகாய்பொடி தான்.... சூப்பர் ரா இருக்கும்... விரைவில் ரெசிபி வரும்..




இன்னும் நாலு நாள்ல திரும்பவும் ஊருக்கு போறேன். வரலக்ஷ்மி நோன்பு வருது... ரெண்டு நாள் ட்ரிப்... எனக்கு புடிச்ச டிஷ் எல்லாம் பண்ண சொல்லி சாப்பிட்டு விட்டு, உங்களுக்கு போட்டோ எடுத்து வரேன். :)





This entry was posted on Friday, July 20, 2012 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On July 20, 2012 at 5:51 PM , Unknown said...

அம்மா சமையல் னா சும்மா வா குறிப்பு சீக்கரம் தாங்க

 
On July 21, 2012 at 5:51 AM , Mahi said...

Superb! All dishes look yummy! Enjoy! :)

 
On July 21, 2012 at 2:49 PM , Priya ram said...

நன்றி சிநேகிதி.... சீக்கிரமாகவே தருகிறேன்...

 
On July 21, 2012 at 2:50 PM , Priya ram said...

thanks vanathy & mahi...

 
On September 24, 2012 at 1:07 PM , priyasaki said...

பார்க்கவே சாப்பிடனும்போல இருக்கு. ப்ளீஸ் ரெசிப்பி தருவீங்களா பிரியா? அம்மா ச‌மையல்ன்னா சொல்லத்தேவையே இல்லை.

 
On September 26, 2012 at 10:55 AM , Priya ram said...

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பிரியா.. சீக்கிரமே சமையல் குறிப்பு தருகிறேன்..

 
Related Posts Plugin for WordPress, Blogger...