Author: Unknown
•Sunday, January 20, 2013

இந்த இட்லி நல்லெண்ணெய், நெய் வாசனையோட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்... மாவு அரைத்ததும் செய்து விடலாம்...

தேவையான பொருட்கள் :-

உளுத்தம் மாவு - 2 கை
அரிசி - 1 1/2 ஆழாக்கு
மிளகு பொடி  - 4 ஸ்பூன்.
சீரக பொடி - 1 ஸ்பூன்
சுக்குபொடி - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு
புளிச்ச தயிர் - 1/2 கப்

செய்முறை :

1. இட்லிக்கு மாவு அரைக்கும் போது, உளுந்து மாவு 2 கை எடுத்துக்கணும்...
2. 2 ஆழாக்கு அரிசியை ரவை மாதிரி மிச்சில அரச்சுக்கணும்..இதுக்கு பேர் தான் அரிசி உடைசல்..இதை வைத்து உப்புமா, தவளை தோசை, காஞ்சீபுரம் இட்லி பண்ணலாம்...
3. அரிசி உடைசலை தண்ணீர் விட்டு களைந்து, உளுந்து மாவில் சேர்க்கணும்...


4. புளிச்ச தயிர் விட்டு நன்றாக கலக்கணும்...
5. நெய்யில் முந்திரி வறுத்து கொட்டனும்...
6. எண்ணெய், நெய், மிளகு பொடி,சீரக பொடி ,  உப்பு, சுக்கு பொடி எல்லாம் போட்டு கலந்து 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்...



7. குட்டி, குட்டி டம்ளரில் நெய் தடவி மாவு விட்டு



 வேக வைத்து எடுக்கணும்...


 கத்தியால் கேக் எடுப்பது போல் எடுத்தால்  காஞ்சீபுரம் இட்லி ரெடி..


8. மிளகாய் பொடியுடன் தொட்டுண்டு சாப்பிட சூப்பர் ரா இருக்கும்...


மாவு அரச்சவுடன் 1/2 மணி நேரம் வைத்து உடனே  செய்து விடனும்... இந்த இட்லிக்கு கார சட்னி கூட தொட்டுண்டு சாப்பிடலாம்...  "அம்மா சமையல்" ல இந்த குறிப்பு சீக்கிரம் தருவதாக சொல்லி இருந்தேன்.. ரொம்ப லேட் ஆகிடுத்து... முயற்சி செய்து பாருங்க..
This entry was posted on Sunday, January 20, 2013 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

11 comments:

On January 20, 2013 at 3:00 PM , இளமதி said...

வணக்கம் பிரியா...
அருமையா இருக்கு இந்த இட்லி...:)
ஆமா இதுக்கு மாவு புளிக்க வைக்கெல்லாம் வேணாமோ..:0..டவுட்டா இருக்கே...

ரொம்ப ஈஸியா இருக்கு குறிப்பு..இன்னிக்கே செய்து பார்த்திட நினைக்கிறேன்...உங்க பதிலுக்கு காத்திட்டிருக்கேன்...:)
நல்ல குறிப்பு பகிர்வுக்கு மிக்க நன்றி!

 
On January 20, 2013 at 3:37 PM , Unknown said...

wow.. romba nalla vanthu iruku..

 
On January 20, 2013 at 8:37 PM , Unknown said...

நன்றி இளமதி....மாவு ரெடி செய்து அரை மணி நேரம் வச்சிட்டு, இட்லி செய்து விடலாம்... புளிக்க வைக்க வேண்டாம்.... புளிச்ச தயிர் சேர்த்து அரை மணி நேரம் வைத்தாலே போரும்....
செய்து பார்த்து விட்டு எப்படி வந்ததுனு சொல்லுங்க.... ஆல் தி பெஸ்ட்...

 
On January 20, 2013 at 8:38 PM , Unknown said...

நன்றி பாயிஸா... நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.... நல்லா வரும்....

 
On January 20, 2013 at 8:53 PM , Mahi said...

Wow...cute idli Priya! I made it in a different way..shall try your version soon!

 
On January 20, 2013 at 9:36 PM , Vijiskitchencreations said...

Priya.ஸூப்பர் ரெசிப்பி நான் இதுவரைக்கும் ட்ரை செய்ததில்லை. நான் டேஸ்ட் செய்திருக்கேன். என் தோழி சூப்ப்ர செய்வாங்க. அடுத்த தடவை உங்க ஸ்டைலில் செய்து பார்க்கனும்.

 
On January 21, 2013 at 1:06 PM , Unknown said...

நன்றி மகி.... இந்த முறையிலும் செய்து பாருங்க.. நல்லா இருக்கும்...

 
On January 21, 2013 at 1:08 PM , Unknown said...

நன்றி விஜி... ரொம்ப ஈஸி தான்... செய்து பாருங்க...உங்களுக்கும் சூப்பர் ரா வரும்...

 
On January 21, 2013 at 1:10 PM , Unknown said...

நன்றி சங்கீதா... எனக்கும் ரொம்ப புடிக்கும்..இட்லிக்கு அரைக்கும் போது எல்லாம், இந்த இட்லி செய்வேன்...

 
On January 24, 2013 at 7:44 PM , Sri's Mehandi Designs said...

அழகான ஷேப்ல சூப்பரா இருக்கு இட்லி

 
On February 13, 2013 at 5:07 AM , கவியாழி said...

இட்லி சாப்பிட இந்த ஜென்மம் மட்டும் போதாது .கெடுதல் செய்யாதது.நீங்கள் குறிப்பிடும் காஞ்சிபுரம் இட்லியை எந்த கடையில் கிடைக்கும் என்று சொல்லியிருந்தால் வசதியாய் இருக்கும்.

 
Related Posts Plugin for WordPress, Blogger...