Author: Priya ram
•Wednesday, April 03, 2013
என் பொருட்கள் தான் எனக்கு மட்டும் தான்.....தொடர்பதிவு...எழுத சொல்லி மகி என்னை அழைச்சு இருந்தாங்க.... நான் எப்பவும் யாராவது ஏதாவது பொருள் கொடுத்தால், அதை அவங்க நியாபகமா, கொடுக்கற நாள் நியாபகமா ரொம்ப பத்திரமா எடுத்து வைப்பேன்... அப்படி எடுத்து வச்சு இருக்கிற பொருட்கள் பத்தி தான் உங்க கூட பகிர்ந்துக்க போறேன்...

இது எங்க அம்மா நான் காலேஜ் படிக்கும் போது வங்கி தந்த கொலுசு......வெள்ளை கல் வச்சு சிவப்பு  மணிகளுடன் ரொம்ப அழகா இருக்கும்.. அதுக்கு கீழ இருக்க தங்க நிற  கொலுசு என்னோட கல்யாணம் அப்போ வாங்கி தந்தது .... மடிசார் கட்டிண்டு இந்த தங்க நிற கொலுசு போட்டுண்டு,காலில் மருதாணி வச்சிண்டு, அம்மி மிதிக்கும் போது ரொம்ப அழகா இருந்தது...



இது என்னோட கணவர் கல்யாணத்துக்கு முன்னாடி, எனக்கு வாங்கி தந்த மேக்கப் கிட்....



நான் மை, பொட்டு தவிர வேற எதுவும் யூஸ் பண்ண மாட்டேன்னு அப்போ அவருக்கு தெரியாது.....



இது எங்க அம்மா எங்களோட கல்யாணம் அப்போ, ராம்க்கு விரத பொட்டியில் தந்த டர்க்கி டவல்... எனக்கு ரொம்ப புடிச்ச கலர்... ரொம்ப பத்திரமா வச்சு இருக்கேன்...


ராம் எனக்கு கல்யாணத்துக்கு அப்புறம் தந்த முதல் கிரீடிங் கார்டு.....


இதுவரை நான் அவருக்கு தந்து இருக்க கார்டு.....இதுல ரெண்டு நானே பண்ணது.... இதையும் நான் தான் பத்திரமா பாதுகாத்து வச்சு இருக்கேன்....



இந்த நகை வைக்கற பாக்ஸ், என்னோட தோழி, வேலை பண்ணும்போது வாங்கி தந்தது.....



எங்க கல்யாணம் டைம் ல ராம்க்கு எங்க அம்மா, மாப்பிள்ளை மோதிரம் போட்டாங்க.. அந்த மோதிரம் இந்த டெட்டி குள்ள தான் வச்சு தந்தது.....




இந்த பொம்மை எனக்கு ரொம்ப புடிக்கும்.. இப்போ இதுக்குள்ள என்னோட ரிங் இருக்கு....



இது என்னோட மாமனார் எனக்கு வாங்கி தந்த வளையல் கிட்.... இது மாதிரி எங்க அக்காவும் எனக்கு நிறைய வாங்கி தந்து இருக்கா....



நிறைய வளையல் இருந்தாலும், ராம் ஆபீஸ் friend மனைவி, என்னோட நல்ல தோழி, எனக்கு வாங்கி தந்த இந்த நார்த் இந்தியன் வளையல் எனக்கு ரொம்ப புடிக்கும்....



என்னோட சின்ன மாமியார் பொண்ணு, என்னோட சின்ன நாத்தனார் எனக்கு வாங்கி தந்த முத்து மாலை..... எனக்கு கல்யாணம் ஆன புதுசில் அவ வாங்கி தந்தது.....



என்னோட தம்பி எனக்கு வாங்கி தந்த இந்த உண்டியல்....



என்னோட அக்கா வாங்கி தந்த இந்த சுடிதார்.... கல்யாணத்துக்கு முன்னாடி இந்த சுடிதார் போட்டு கிட்டு தான் ராம் - முதல் முறை மீட் பண்ணது....




ராம் கல்யாணத்துக்கு அப்புறம் வந்த - முதல் காதலர் தினத்துக்கு இந்த pooh  பொம்மை வாங்கி தந்தார்...அதுகூட இருக்க பொம்மை எல்லாம் அதோட கூட வந்தது... :)


இந்த கார்டு - என்னோட நாத்தனார் கல்யாணத்துக்கு முன்னாடி வந்த என்னோட பிறந்த நாளுக்கு அனுப்பின கார்டு....இது கூடவே எனக்கு புடவை, வளையல்,கொலுசு, செயின், கிளிப் எல்லாம் வாங்கி அனுப்பி இருந்தாங்க.... ஒரு பெரிய பார்சல் வந்தது....



இந்த பொம்மை எல்லாம் எனக்கு ராம் வாங்கி தந்தது....

இது தாய்லாந்து ல வாங்கி தந்தது....



இது ரோட்ல வித்துகிட்டு போயிட்டு இருந்தாங்க....பார்த்து வேணும்னு கேட்டதுல வாங்கி தந்தது.....



இது மதுராந்தகம் தேர் திருவிழாவில் வாங்கி தந்தது...



இது ராம் ஸ்கூல் தோழி எனக்கு வாங்கி தந்த கிட்....



ஒன்னுக்குள்ள ஒண்ணுனு ரொம்ப அழகா இருக்கும்....



இப்போ கொஞ்ச நாள் முன்னாடி ராம் சவுத் கொரியா போய் இருக்கும் போது, ஏர்போர்ட் -இல் இந்த பொம்மை அவங்களே தந்து, கூடவே குட்டி குட்டி கலர் பேப்பர் தராங்களாம்.... விருப்பம் இருக்கவங்க வாங்கி அதுக்கு டிரஸ் பண்ணி, அழகான பொம்மையா மாத்தலாம்.....

ராம் அலங்கரிச்சு கொண்டு வந்த பொம்மை...


இன்னும் நிறைய பொருட்கள் என்கிட்டே நியாபகமா, நிறைய கதை சொல்லிட்டு இருக்கு.....நம்ம கிட்ட இருக்க பொருட்கள் எடுத்து பார்க்கும் போது ஒன்னு ஒன்னும் ஒரு கதை சொல்லும்.... அதை எல்லாம் நினைத்து பார்த்து, உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி..... இந்த தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி மகி....
This entry was posted on Wednesday, April 03, 2013 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

7 comments:

On April 3, 2013 at 7:24 PM , Menaga Sathia said...

சூப்பர்ர் ப்ரியா,ஒவ்வொன்றும் விலைமதிப்புள்ள பொக்கிஷங்களே..

 
On April 3, 2013 at 9:52 PM , திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான ....ம்ஹீம்... அழகான பொக்கிசங்கள்... பாராட்டுக்கள்...

வாழ்த்துக்கள்...

 
On April 3, 2013 at 10:05 PM , Mahi said...

ஆஹா! எல்லாப் பொக்கிஷங்களும் ஒவ்வொரு விதத்தில் அழகா இருக்கு ப்ரியா! அந்த கரடி மோதிர பெட்டி செம க்யூட்! :)

முதல்ல பாத்தப்ப போட்டிருந்த சுடிதார் கூட ஞாபகமா வைச்சிருக்கீங்களே, இதான் அரேஞ்ச் மேரேஜோட ஸ்பெஷாலிட்டி! ;)

உங்க Pooh பொம்மை மாதிரியே என்கிட்டவும் ஒண்ணு இருக்கு, வெள்ளை கலர் புஸுபுஸூ டெடி பேர்! ஊரில இருக்குது ஆனா.

நிச்சயமா, இப்படியான பொருட்களைப் பார்க்கையில் ஒவ்வொரு நினைவு அலைமோதும். ரொம்ப நல்லா இருக்கும். பதிவைத் தொடர்ந்ததுக்கு மிக்க நன்றி!

ஆமா, அதென்ன உங்க தம்பி சின்ன குழந்தைங்களுக்கு வாங்கித் தரமாதிரி அக்காவுக்கு உண்டியல் வாங்கி தந்திருக்கார்?! :))))

 
On April 4, 2013 at 2:04 AM , இமா க்றிஸ் said...

ரொம்ப சுவாரசியமா இருக்கு உங்க கலெக்க்ஷன்.

 
On April 4, 2013 at 4:16 PM , VijiParthiban said...

ரொம்ப அருமையான பொக்கிஷங்கள் பிரியா.... எல்லாமே அருமை ... வாழ்த்துக்கள் ....

 
On April 22, 2013 at 4:36 PM , காமாட்சி said...

அழகா சேர்த்து வைத்து எழுதியிருக்கே. பாராட்டணும் உன்னை.அன்புடன்

 
On May 21, 2013 at 1:43 PM , காமாட்சி said...

ரொம்பவே அழகாக பாதுகாத்து வச்சிருக்கே. நல்ல பொருமை. ஆசிகள் பிரியா. அன்புடன்

 
Related Posts Plugin for WordPress, Blogger...