Author: Priya ram
•Friday, August 30, 2013
இந்த பொங்கல் ரொம்ப ஈஸியா செய்துடலாம்....மகி ஒரு முறை அவங்க ப்ளாக் ல போஸ்ட் செய்து இருந்தாங்க...அதை பார்த்து ட்ரை பண்ணேன்...என்னோட மாமனார்க்கு ரொம்ப ரொம்ப புடிச்சு போச்சு...இப்போ நைட் டின்னெர்  பண்ணனும்னா, புளி பொங்கல் செய்துடுனு சொல்லுவார்... ஈஸி என்பதால் நானும் உடனே செய்து விடுவேன்....


தேவையான பொருட்கள் :

நல்லெண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
கடலைப்பருப்பு
வெந்தயம்
வேர்கடலை - 1 கைப்பிடி
கருவேப்பிலை
பெருங்காயம்
காய்ந்த மிளகாய் - 8
புளி -  எலுமிச்சை அளவு
உப்பு
பச்சரிசி நொய் - 1 ஆழாக்கு

செய்முறை :

திக்காக 2  கப் புளிக்கரைசல் எடுத்து வைக்கவும்...
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், கருவேப்பிலை, பெருங்காயம், காய்ந்த மிளகாய், வேர்கடலை போட்டு வதக்கி புளி கரைசல் 2 கப் விட்டு, உப்பு போட்டு கொதிக்க விடவும்.....


நொய்யை களைந்து வடிய விட்டு  கொதிக்கும் புளிகரைசலில் போட்டு ஒரு முறை கிளறி குக்கரை மூடி, 2 விசில் விடவும்....




ப்ரெஷர் போனதும் குக்கரை திறந்து கிளறினால் புளி பொங்கல் தயார்....



வடாம்,சிப்ஸ் தொட்டுண்டு சாப்பிடலாம்....நான் தயிர் தொட்டுண்டு சாப்பிட்டேன்...ரொம்ப நல்லா இருந்தது....
This entry was posted on Friday, August 30, 2013 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

6 comments:

On August 31, 2013 at 4:27 AM , Mahi said...

புளிப்பொங்கல் பார்க்கவே சூப்பரா இருக்கு ப்ரியா! உங்க வீட்டில அடிக்கடி செய்யறீங்களா? கேக்கவே சந்தோஷமா இருக்கு! நன்றி!:)

 
On August 31, 2013 at 9:00 AM , Priya ram said...

நன்றி மகி..இப்போ நிறைய பண்ணறேன்...ரொம்ப ஈஸியா இருக்கு..எல்லாத்தையும் போட்டு வதக்கி, புளி தண்ணி விட்டு கொதிச்சதும் நொய் போட்டு மூடி விசில் போட்டா வேலை ஓவர்...ரொம்ப சீக்கிரம் (5 நிமிஷம் தான் வேலை ) முடிஞ்சுடுது...வெங்காயம் வீட்டுல சேர்ப்பது இல்லை என்பதால், கட் பண்ணற வேலை கூட இல்லை...சூப்பர் ரெசிபி....

 
On August 31, 2013 at 5:02 PM , இராஜராஜேஸ்வரி said...

அருமையான எளிமையான
புளிப்பொங்கல்.. பாராட்டுக்கள்..!

 
On September 1, 2013 at 4:54 PM , VijiParthiban said...

அருமையான எளிமையான புளிப்பொங்கல் பார்க்கவே சூப்பரா இருக்கு ப்ரியா.....

 
On September 19, 2013 at 12:30 PM , Sowmya said...

mmmm... tasty puli pongal...super..

 
On January 9, 2014 at 9:19 AM , திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_9.html) சென்று பார்க்கவும்... நன்றி...

 
Related Posts Plugin for WordPress, Blogger...