Author: Priya ram
•Monday, December 22, 2014
வெங்காய தொக்கு :

சின்ன வெங்காயம் - 1 கிலோ
எண்ணெய்
கடுகு
வெந்தயம்
பெருங்காயம்
உப்பு
வறட்டு மிளகாய்பொடி
புளி
வெல்லம்

சின்ன வெங்காயம் தோல் உரித்து, நைசாக அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம் போட்டு அரைத்த விழுதை கொட்டி, உப்பு போட்டு நன்றாக பச்சை வாசனை போக வதக்கவும்.
திக்காக கரைத்த புளி தண்ணீர் கொட்டி, வறட்டு மிளகாய் பொடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி வெல்லம் போட்டு கிளறி இறக்கவும்.


கூடவே செய்த தக்காளி தொக்கு....


இந்த தக்காளி தொக்கு செய்முறை இங்க இருக்கு.... 



Author: Priya ram
•Monday, December 22, 2014
மா இஞ்சி தொக்கு :

மா இஞ்சி - 1/4 கிலோ
வர மிளகாய் - 12
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய்
கடுகு
வெந்தயம்
பெருங்காயம்
தூள் வெல்லம் - சிறிதளவு

மா இஞ்சி தோல் சீவி நறுக்கி வைக்கவும்.



வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வர மிளகாய் வறுத்து வைக்கவும்.
மா இஞ்சி, வர மிளகாய், உப்பு, புளி அனைத்தையும் நைசாக அரைக்கவும்.



வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதை கொட்டி நன்றாக கிளறவும்.



எண்ணெய் பிரிந்து வந்ததும் வெல்லம் போட்டு கிளறி இறக்கவும்.



சுவையான மா இஞ்சி தொக்கு. 



Related Posts Plugin for WordPress, Blogger...