Author: Priya ram
•Monday, December 22, 2014
வெங்காய தொக்கு :

சின்ன வெங்காயம் - 1 கிலோ
எண்ணெய்
கடுகு
வெந்தயம்
பெருங்காயம்
உப்பு
வறட்டு மிளகாய்பொடி
புளி
வெல்லம்

சின்ன வெங்காயம் தோல் உரித்து, நைசாக அரைத்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம் போட்டு அரைத்த விழுதை கொட்டி, உப்பு போட்டு நன்றாக பச்சை வாசனை போக வதக்கவும்.
திக்காக கரைத்த புளி தண்ணீர் கொட்டி, வறட்டு மிளகாய் பொடி போட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி வெல்லம் போட்டு கிளறி இறக்கவும்.


கூடவே செய்த தக்காளி தொக்கு....


இந்த தக்காளி தொக்கு செய்முறை இங்க இருக்கு.... 



Author: Priya ram
•Monday, December 22, 2014
மா இஞ்சி தொக்கு :

மா இஞ்சி - 1/4 கிலோ
வர மிளகாய் - 12
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - தேவைக்கு
எண்ணெய்
கடுகு
வெந்தயம்
பெருங்காயம்
தூள் வெல்லம் - சிறிதளவு

மா இஞ்சி தோல் சீவி நறுக்கி வைக்கவும்.



வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு வர மிளகாய் வறுத்து வைக்கவும்.
மா இஞ்சி, வர மிளகாய், உப்பு, புளி அனைத்தையும் நைசாக அரைக்கவும்.



வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம் தாளித்து அரைத்த விழுதை கொட்டி நன்றாக கிளறவும்.



எண்ணெய் பிரிந்து வந்ததும் வெல்லம் போட்டு கிளறி இறக்கவும்.



சுவையான மா இஞ்சி தொக்கு. 



Author: Priya ram
•Friday, January 24, 2014
இந்த குக்கீஸ் செய்வது ரொம்ப ஈஸி .



தேவையான பொருட்கள் :

மைதா மாவு - 1 1/2 கப்
Baking Powder - 1/4 டீஸ்பூன்
Baking Soda - pinch
சர்க்கரை - 1/4 கப்
வெண்ணெய்
உப்பு
இஞ்சி - ஒரு துண்டு
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1

செய்முறை :

மைதா , baking powder, Baking soda சேர்த்து சலித்து வைக்கணும்...
வெண்ணெய், சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறனும்...
இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய் பச்சையாக அரச்சிக்கணும்..

இதை எல்லாம் ஒன்றாக சேர்த்து சப்பாத்தி மாவு மாதிரி பிசைந்து வைக்கணும்...


குழவியால் சப்பாத்தி இடுவது போல் தேய்த்து அச்சு மூலம் குக்கீஸ் செய்து



baking tray இல் அடுக்கி



200c இல் 25 நிமிஷம் ஓவன் இல் வைத்து எடுத்தால் ஜிஞ்ஜர்  குக்கீஸ் தயார்.....



இந்த குக்கீஸ் செய்து பாருங்க....காரமாக நல்லா இருக்கும்  ....
Related Posts Plugin for WordPress, Blogger...