•Thursday, July 25, 2013
இந்த ரெசிபி ரொம்ப நாளா என்னோட அண்ணன் கேட்டுகிட்டு இருந்தாங்க.... என் கணவருக்கு பாகற்காய் புடிக்காது... அதான் இந்த பிட்லை செய்வதற்கு ரொம்ப நாள் ஆகிடுச்சு.....
தேவையான பொருட்கள் :
எண்ணெய் - தாளிக்க
கடுகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
பாகற்காய் - 2
கடலைக்காய் - 1 கை
புளி - எலுமிச்சை அளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
மிளகாய் பொடி - 1/2 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு - 11/2 கரண்டி
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
வறுத்து அரைக்க :
தனியா - 1 டேபிள்ஸ்பூன்
கடலைபருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிக்கை
காய்ந்த மிளகாய் - 2
தேங்காய் - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
துவரம் பருப்பு , கடலை பருப்பை குழைய வேக வைக்கவும்...
புளி தண்ணீர் கரைத்து வைக்கவும்...
வறுத்து அரைக்க வேண்டியவற்றை 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுத்து அரைத்து வைக்கவும்...
பாகற்காயை பொடியாக நறுக்கி தரையில் பரப்பி வைக்கவும்.... ( தரையில் பரப்பி வைத்தால் கசப்பு குறையும் )
தக்காளி பொடியாக நறுக்கி வைக்கவும்....
கடலைக்காயை தண்ணீரில் போட்டு வைக்கவும்....
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் போட்டு வெடிக்க விடவும்.. அதில் கடலைக்காய், பாகற்காய்,தக்காளி போட்டு நன்றாக வதக்கவும் ..
புளி தண்ணீர் கொட்டி உப்பு, மிளகாய் பொடி போட்டு கொதிக்க விடவும்...
வேக வைத்த பருப்புடன் அரைத்த விழுதை கொட்டி கலந்து வைக்கவும்.
காய் வெந்து புளி தண்ணீர் சுண்டி வந்ததும்,
பருப்பு,அரைத்த விழுதை கொட்டி கொதிக்க வைத்து கருவேப்பிலை தூவி இறக்கவும்....
பாகற்காய் பிட்லை ரெடி...ரோஸ்ட் காயுடன் சாப்பிட அருமையாக இருக்கும். ...
நான் முருங்கைக்காய், கத்தரிக்காய்,உருளைகிழங்கு போட்டு காய் செய்தேன்....நன்றாக இருந்தது...

கூட்டு
|

5 comments:
கிட்டத்தட்ட சாம்பார் போல இருக்கு, ஆனா சாம்பார் இல்லை, கடலைக்காய் எல்லாம் போட்டு செய்திருக்கீங்க! ;) :) அடுத்த முறை பாகற்காய் வாங்கும்போது செய்து பார்க்கிறேன் ப்ரியா! படங்கள் நல்லா இருக்கு. பாகற்காய் இல்லாம வேற என்ன காய்ல செய்யலாம்?
நன்றி மகி...வெள்ளை பூசணிக்காய், கத்திரிக்காய் வைத்து கூட இந்த பிட்லை செய்யலாம்... செய்து பாருங்க....
/// தரையில் பரப்பி வைத்தால் கசப்பு குறையும்... ///
இந்த பிட்லையும் செய்து பார்ப்போம்... நன்றி...
அருமை. பார்க்கும்போதே சுவை நாவில் ஊறுகிறதே...;)
செய்து பார்த்துவிடவேண்டும். மகிக்கு கூறியபடி வேறு காய்களிலும் செய்து பார்ப்போம்.
பகிர்விற்கு மிக்க நன்றி தோழி!
ப்ரியா, பாகற்காய் பிட்லை செய்தேன், நல்லா இருந்தது! வழக்கம்போல ஒரு கோல்மால்..கடலை ஊறவைக்க மறந்துபோனேன், ஊறின கொண்டைக்கடலை கைவசம் இருந்ததால் அதைச் சேர்த்துட்டேன்! ஹிஹிஹி..அதுவும் சூப்பரா இருந்துச்சு..சீக்கிரம் ப்ளாக்ல போஸ்ட் பன்ணறேன், பாருங்க! :)
ரெசிப்பிக்கு நன்றி!