Author: Priya ram
•Monday, February 28, 2011
பாய்சா அவங்க ப்ளாக் - ல சொன்னத வச்சு இந்த குந்தன்  கம்மல் செய்து இருக்கேன். ப்ளூ கலர் எனக்கு புடிச்ச கலர் அதான் நானும் அதே கலர் - ல குந்தன் வாங்கி செய்து இருக்கேன். 





இவை இரண்டும்  quilling  பேப்பர் வச்சு பண்ண கம்மல்கள்.

Author: Priya ram
•Saturday, February 26, 2011








கருப்பு மணி வைத்து இந்த மாலை செய்தேன்.
Author: Priya ram
•Thursday, February 24, 2011
டபுள் ஸ்டோன் வைத்து இதை செய்தேன். 



Author: Priya ram
•Tuesday, February 22, 2011
இந்த படங்கள் என்னோட கணவருக்கு ஈமெயில்-ல வந்தது. அதை எனக்கு அனுப்பி இருந்தார். நான் பார்த்து ரசிச்சேன். நீங்களும் ரசிக்க இதோ 










Author: Priya ram
•Monday, February 21, 2011

முத்து வைத்து இந்த மாலை செய்தேன்.
Author: Priya ram
•Friday, February 18, 2011



பச்சை கலர் டபுள் ஸ்டோன் வச்சு இந்த ஆரம் செய்தேன்.
Author: Priya ram
•Friday, February 18, 2011


சில்பகார் என்பது m-seal மாதிரியே ஒரு வகை க்ளே. அதுல தான் இந்த நெக் செயின் பண்ணேன். இதுக்கு கலர் பண்ண பியர்ல் லர்ஸ்  உபயோகிச்சேன்.
Author: Priya ram
•Thursday, February 17, 2011
நேத்து சாக்கலேட் பண்ண ட்ரை பண்ணேன். நல்லா வந்தது. 

தேவையான பொருட்கள் :
பால் பவுடர் - 1 கப்
கோக்கோ பவுடர் - 2 ஸ்பூன்.
வெண்ணை - 1 ஸ்பூன்
தண்ணீர்  - 1/4 டம்ளர்

செய்முறை :
பால் பவுடர் கூட கோக்கோ பவுடர் போட்டு மிக்ஸ் பண்ணனும். தண்ணிய நல்லா கொதிக்க வச்சு அதுல வெண்ணைய போட்டு உருகியதும் இறக்கி பால் பவுடர் மிக்ஸ் - ல கொஞ்சம் கொஞ்சமா தண்ணிய விட்டு  சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசயனும். fridge கூட வர சாக்கலேட் mold   இல்லைனா தட்டுல கொஞ்சம் உருகின வெண்ணை தடவி இந்த மாவை போட்டு ப்ரீசர் ல ஒரு மணி நேரம் வச்சு எடுத்தா சாக்கலேட் ரெடி. இதுக்கு உள்ள பாதம் பருப்பும் stuff பண்ணலாம் சாப்பிடும் போது இன்னும் நல்லா இருக்கும்.



இந்த மோல்ட் வச்சு தான் நான் பண்ணேன்.






Author: Priya ram
•Tuesday, February 15, 2011




இந்த போட்டோ பிரேமை தெர்மோகோல் பால் - ஸ் வைத்து  decorate  பண்ணி இருக்கேன். நமக்கு தேவையான கலரில் தெர்மோகோல் பால் - ஸ் கடையில  கிடைக்கிறது. அதை  பெவிகால் போட்டு பிரேமை சுத்தி ஓட்டினால் அலங்கரிக்கப்பட்ட போட்டோ பிரேம் தயார்.
Author: Priya ram
•Thursday, February 10, 2011
ஸ்பான்ச் பேப்பர் வச்சு நிறைய ரோஜா பூக்கள் செய்யனும். அப்புறம் ரெண்டு ரெண்டு பூவா வச்சு பூ தொடுக்கற மாதிரி கட்டி தனித்தனியா வச்சுக்கணும். ஊசில டுவைன் நூலை கோர்த்து மல்லி பூ செண்டு கோக்கர மாதிரி கோர்த்தா மாலை ரெடி. 



இந்த ஸ்பான்ச் பேப்பர் புதுசா டிவி, fridge வாங்கும் போது கூட போர்த்தி வரும். தனியா கடையிலயும்  நிறைய கலரில் கிடைக்கிறது.

Author: Priya ram
•Wednesday, February 09, 2011



இன்னிக்கு மதியானம் சாப்பாடுக்கு ஏதாவது பண்ணனும்னு யோசிச்சு டெய்லி பண்ணற சாம்பார், ரசம் எல்லாம் வேண்டாம்னு புதுசா முதல் தடவையா இந்த புதினா சாதம்  ட்ரை பண்ணேன். ரொம்ப நல்லா வந்தது.

தேவையான பொருட்கள்

புதினா - 1 கப்
கருவேப்பிலை
பச்சை மிளகாய்
முந்திரி பருப்பு
பச்சை பட்டாணி
சீரகம்
லவங்கம்
நெய்
கடலை எண்ணெய்
புளி
உப்பு
சாதம்

செய்முறை
குக்கரில் சாதம் உதிர் உதிராக இருக்கும் படி முதல்ல செய்து வச்சுக்கணும். கருவேப்பிலை கொஞ்சம், புதினா ஒரு கப், பச்சை மிளகாய் 2 ( காரத்திற்கு ஏற்ப ), புளி கொஞ்சம், உப்பு போட்டு தனியா அரச்சு வச்சுக்கணும்.
வாணலில கொஞ்சம் நெய், கடலை எண்ணெய் விட்டு அதுல சீரகம், லவங்கம் போட்டு வெடிக்க விட்டு பிறகு  பச்சை பட்டாணி, முந்திரி பருப்பு போட்டு வதக்கணும் ( பச்சை பட்டாணி போட்டு வதக்கும் போது வெடிக்கும் சோ கொஞ்சம் கவனமா இருக்கணும் ). அப்புறம் அதுல அரச்சு வச்சு இருக்க விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கி குக்கரை இறக்கிடணும். இதில்  உதிர் உதிரான சாதம் போட்டு கிளறினால் புதினா சாதம் ரெடி. இதுக்கு தொட்டுக்க எல்லா ரைதாவும் சூட் ஆகும்.



எங்க வீட்டுல பெரியவங்க வெங்காயம் சாப்பிட மாட்டாங்க. சோ வெங்காயம் சேர்க்காம இந்த புதினா சாதம் பண்ணி இருக்கேன். விரும்பினா வெங்காயம் கூட போட்டுக்கலாம்.


Author: Priya ram
•Tuesday, February 08, 2011





இந்த பூக்களை  ஸ்டாகின்ஸ் துணி கொண்டு செய்தேன்.
Author: Priya ram
•Thursday, February 03, 2011








ஆர்கண்டி துணி வச்சு இந்த  ரோஜா பூக்கள் செய்தேன்.
Author: Priya ram
•Tuesday, February 01, 2011
சுற்றி விளையாட தூண்கள்
ஒளி காட்ட விளக்கு மாடங்கள்
கதை பேசித் தூங்க ரெட்டைத் திண்ணை
மழையை ரசிக்க மல்லிகை படர்ந்த முற்றம்
பத்தியும் பக்தியும் மணக்கும் பூஜையறை
பித்தளைப் பாத்திரக் காற்று மணக்கும் காமிரா அறை
உறவின் பெருமை சாற்றும் பிரேம் போட்டோ படங்கள்
அந்துருண்டை மணம் வீசும் நிறம்போன ட்ரங்கு  பொட்டி
தவறாய் மணி காட்டி தாளம் போடும் கூண்டுக் கடிகாரம்
தலைமுறை பல கண்ட மாதுளசி கொல்லை
வாழ்ந்துகொள்ள வாய்ப்பொன்று கிடைத்தால்
பத்திரப்படுத்துங்கள் அப்படியே
பாட்டியின் வீட்டை....



Related Posts Plugin for WordPress, Blogger...