•Sunday, August 14, 2011
கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் தேங்காய் போட்ட காய் எதுவும் சாப்பிட மாட்டேன். டெய்லி அம்மா கிட்ட ரோஸ்ட் காய் தான் வேணும்னு கேட்பேன். எங்க அம்மா நிறைய எண்ணெய் விட்டு எல்லா காயும் முறுவலா வர மாதிரி செய்வாங்க. இங்க, எங்க மாமியார் வீட்டுல நிறைய எண்ணெய் சேர்க்க மாட்டோம். அதனால onnu, ரெண்டு காய் தான் ரோஸ்ட் டா கிடைச்சு இருக்கு. எங்க அம்மா காய் பண்ணா வெறும் காய் மட்டும் சாப்பிட்டே நாங்க மூணு பெரும் காலி பண்ணிடுவோம். டிபன் பாக்ஸ் ல எடுத்துட்டு போனா எனக்கு ஒரு காய் கூட கிடைக்காது. என்னோட தோழிகளே எல்லாத்தையும் எடுத்துப்பாங்க. இப்போ காய் எப்படி பண்ணறதுன்னு பார்ப்போம்.
உருளைகிழங்கை கட் பண்ணி மஞ்சள் பொடி போட்டு குக்கரில் வேக வைக்கணும்.
வெந்ததும் தோல் உருச்சிட்டு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடிக்க விட்டு, தோல் உருச்ச உருளைகிழங்கு போடணும்.
உப்பு, மிளகாய் பொடி போட்டு அடுப்பை சிம் -ல வச்சு நல்லா கலந்து கொடுக்கணும்.
மிளகாய் பொடி வாசனை போய், சுபெர்ப் உருளைகிழங்கு ரோஸ்ட் கிடைக்கும்.
அரச்சு விட்ட சாம்பார் கூட இந்த காய் தொட்டுண்டு சாப்பிட சூப்பர் ரா இருக்கும். இதே முறையில சேப்பங்கிழங்கு ரோஸ்ட் - ம் பண்ணலாம்.
4 comments:
:P :P சூப்பரா இருக்குது ப்ரியா!
யம். பார்க்க ஆசையாக இருக்கிறது.
இப்போ கிழங்கு சமைப்பதில்லை. ;( அதுவும் மாப்பொருள்தானே என்று ட்ரீட் உணவு வகையில் சேர்த்து விட்டாயிற்று.
நன்றி மஹி.
நன்றி இமா.எங்க வீட்டுக்கு வாங்க நான் செய்து தரேன்.