•Wednesday, August 03, 2011
எங்க வீட்டுல எல்லாம் ஈச்சொம்பு -ல தான் ரசம் பண்ணுவாங்க. ரசம் வாசனையா அருமையா இருக்கும். ரசம் பண்ணறது ரொம்ப ஈஸி. இந்த பாத்திரத்தை அடுப்புல காலியா வச்சிட்டு வேலை பண்ண கூடாது. பத்திரம் அடிப்பகுதி மட்டும் தனியா வந்துடும். இதுல ரசம் பண்ணும் போது அடுப்பு சிம் - ல தான் இருக்கணும்.
துவரம் பருப்பை வேகவச்சு தனியா வைக்கணும்.
தனியா ஒரு பாத்திரத்தில் புளியை கரைச்சு தண்ணிய ஈயச்சொம்புல விட்டு, பொடியா நறுக்கிய தக்காளி போட்டு, உப்பு, மிளகாய் பொடி போட்டு அடுப்புல ஏத்திடனும்.
இது தான் ஈயப்பாத்திரம். சூடா இருக்கும்போது கிடுக்கி வச்சு புடிச்சா இப்படி தான் லைட் டா பள்ளம் விழும்.... :)
பச்சை வாசனை போனதும், வேக வச்ச துவரம் பருப்பு கொஞ்சமா எடுத்து அதுல தண்ணி விட்டு கரைச்சு விடனும். ( நிறைய பருப்பு விட்டால், கொஞ்சம் கொதிச்சதும் மேலாக எடுத்து அதுல ரசப்பொடி போட்டு ரசமாகவும், அடில திக்காக இருக்கும் பருப்புல கடுகு,வெந்தயம், பெருங்காயம் தாளிச்சு கொட்டி, ஏதாவது வேக வச்ச காய் போட்டு சுட வச்சு சாம்பார்- ஆகவும் யூஸ் பண்ணலாம். ஒரே நேரத்துல ரெண்டு வேலை ஆகிடும். ) ரசப்பொடி போடணும்.
மஞ்சள் நுரை நுரச்சிண்டு வரும் போது கொத்தமல்லி போடணும்.
நெய் தனியாக காய வைத்து கடுகு, ஜீரகம், பெருங்காயம் தாளித்து கொட்டினால் ரசம் ரெடி.
காமெடி பகுதி : என்னவர் ஒரு நாள் இன்னிக்கு நான் ரசம் பண்ணறேன்னு சொன்னார். யாரும் சமையல் ரூம் உள்ள வரகூடாதுனு சொல்லிட்டார். சரி அவரே சரியா பண்ணிடுவார்னு நம்......பி..... நாங்களும் யாரும் போகலை. மொதல்ல ஈயச்சொம்பை அடுப்புல வச்சார். அதுல கொஞ்சம் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, ஜீரகம் எல்லாம் போட்டு விட்டு புளி தண்ணி விட்டா தண்ணி கீழ கொட்டறது. என்னனு பார்த்தா பாத்திரம் அடிப்பகுதி மட்டும் ரவுண் - டா அழகா பேர்ந்து வந்து இருக்கு. அவர் சமைக்க போனதுல ஒரு ஈயச்சொம்பு வீண் ஆனது தான் மிச்சம்.
பின் குறிப்பு : என்னோட ப்ளாக் - யை பின் தொடர்பவர் லிஸ்ட் ல என்னவர் இருந்தாலும், ப்ளாக் ஓபன் பண்ணி பார்ப்பதே இல்லை. அந்த தைரியத்தில் உங்களுடன் இந்த காமெடியை பகிர்ந்து கொண்டேன். :))))
ரசம்
|
1 comments:
:) சூப்பர் காமெடி ப்ரியா! ஒருநாள் அவர் உங்க ப்ளாகைப் பார்க்கப்போறார்,அப்ப இருக்கு உங்களுக்கு! ;)
ரசம் நல்லா இருக்கு.அந்தக்காலத்தில் எல்லாம் ஈயச்சட்டியில்தான் முக்கால்வாசி சமையலே நடக்கும்,இப்பல்லாம் இண்டாலியத்துக்கு மாறிட்டாங்க. உங்க வீட்டு சொம்பு அழகா இருக்கு. :)
நல்லா விளக்கமா கதை சொல்றீங்க! நல்லா இருக்கு! :):)