•Monday, August 22, 2011
இதுக்கு முன்னாடி நான் பண்ண ரெண்டு எம்போஸ் பெயின்டிங் போட்டு இருந்தேன். இது நான் பண்ண மூன்றாவது பெயின்டிங். இந்த கிட் இதே மாதிரி பாக்ஸ் ல கிடைக்கும். அதுல ஒரு வெல்வெட் துணியில் (கலர் பண்ணாம ) படம் வரைந்து இருக்கும். அந்த படம் கலர் பண்ணி, பாக்ஸ் மேல இருக்கும். 7 கலர் கிட் கூட வரும். இந்த கலரில் ஒன்னு, ரெண்டு கலர் சேர்த்தால் கிட் ல இல்லாத ஒரு கலர் கொண்டு வரலாம்.
உ.தா: பிங்க் + ப்ளூ = வயலெட்
வெள்ளை + ஆரஞ்சு = பீச்
இப்படி இல்லாத கலர்சும் கொண்டு வரலாம்.
இந்த மாதிரி வெல்வெட் துணியை வச்சு எல்லா பக்கமும் செல்லோ டேப் போட்டு நகராத மாதிரி ஒட்டிக்கணும்.
அப்புறம் கொடுத்து இருக்க பிரெஷ் வச்சு, பாக்ஸ் மேல இருக்க படத்துல இருக்க கலர்க்கு ஏத்த மாதிரி, கலர் பண்ணனும். (இல்லைனா நம்ப விருபத்துக்கு ஏத்த மாதிரியும் கலர் பண்ணிக்கலாம் )
கலர் பண்ணி முடிச்ச பிறகு ஒரு நாள் காய வைத்து விட்டு மறுநாள் இந்த வெல்வெட் துணியை கவிழ்த்து போட்டு (டிசைன் கீழ் பக்கம் பார்த்த மாதிரி இருக்கணும் ) மேல பேப்பர் போட்டு அயன் பண்ணனும். இவ்வாறு அயன் பண்ணுவதால் படம் எம்போஸ் ஆகி வரும். எம்போஸ் பண்ண பெயின்டிங் பிரேம் பண்ணிக்கலாம்.
சின்ன பசங்களை கூட இதை செய்ய சொல்லலாம்.
Painting
|
0 comments: