•Wednesday, August 10, 2011
தேங்காய் சேர்த்து செய்ய கூடிய எல்லா காயும் எங்க வீட்டுல இப்படி தான் செய்வாங்க. இந்த மாதிரி முறைல அவரைக்காய், பீன்ஸ், கேரட், பீட்ரூட், வெண்டைக்காய்,வாழைக்காய்,கோஸ், குடைமிளகாய், -ல செய்யலாம்.
நான் அவரைக்காய் - ல செய்து இருக்கேன்.
செய்முறை :
அவரைக்காயை பொடியாக நறுக்கிக்கணும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் (தேங்காய் போட்டு செய்யும் காய்க்கு எல்லாம் கொஞ்சமாக எண்ணெய் விட்டால் போதும் ) விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கி, நறுக்கிய காயை போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு,உப்பு போட்டு மூடி வேக விடனும். நன்றாக வெந்ததும், துருவிய தேங்காய் போட்டு கிளறி இறக்கிடணும்.
கொத்தமல்லி கொஞ்சம் பொடியாக நறுக்கி தூவினால் நன்றாக இருக்கும். வெண்டைக்காய் இந்த முறையில் செய்யும் பொழுது தண்ணீர்க்கு பதில் கொஞ்சம் மோர் இல்லைனா புளி தண்ணி கொஞ்சம் விட்டால் கொழ கொழப்பு நீங்கி வெந்து வரும். கோஸ் பண்ணும் போது பயத்தம் பருப்பு கொஞ்சம் ஊறவச்சு காய் பண்ணும்போது சேர்த்தால் ரொம்ப நல்லா இருக்கும். குடைமிளகாய் செய்யும் போது தேங்காய் தூவி செய்யலாம் இல்லைனா வெந்த துவரம் பருப்பு கொஞ்சம் போட்டு கலந்து முடிக்கலாம். எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும்.
2 comments:
நன்னா இருக்கு ப்ரியா! இந்த முறையில காயின் ஒரிஜினல் டேஸ்ட் தெரியும். நான் எல்லாக்காய்க்கும் வெங்காயம் சேர்த்தே செய்து பழக்கம். இப்படி செய்துபார்க்கனும்னு நினைப்பேன்,ஆனா நடக்கறதில்லை!;)
நன்றி மகி.... நாங்க நிறைய வெங்காயமே சேர்த்துக்க மாட்டோம் பா. பூண்டு எப்பவும் சேர்த்துக்கறது இல்லை. இந்த மாதிரியும் ஒரு நாள் செய்து பாருங்க. பச்சை தன்மை மாறாம ரொம்ப நல்லா இருக்கும்.