•Monday, August 08, 2011
இந்த பாயசம் மங்களகரமான பாயசமாம்.(மஞ்சள், சிவப்பு, பச்சை கலர் ல இல்லையேனு யாரும் கேட்க கூடாது ) எந்த பண்டிகை வந்தாலும் இந்த பாயசம் தான் செய்வாங்க. அதுவும் இந்த ஆடி மாசத்துல நிறைய செய்வாங்க. ஆடி வெள்ளி, ஆடி அம்மாவாசை, ஆடி கிருத்திகை இப்படி எல்லா நாளும் பருப்பு பாயசம் தான் இருக்கும். இது செய்யறதும் ஈஸி தான். (பிரியாக்கு வேற வேலையே இல்லை. எல்லாம் ஈஸி ஈஸி - னு சொல்லிடுவாங்க, செய்யறது யாருன்னு கேட்கறீங்களா ???? ) ட்ரை பண்ணி பாருங்க. நிஜமாகவே ரொம்ப
ஈஸியான பாயசம் தான். சக்கரை சேர்வதை விட வெல்லம் சேர்ந்தால் ஒடம்புக்கும் ரொம்ப நல்லது. வெல்லத்துல இரும்பு சத்து அதிகம் இருக்கு.
தேவையான பொருட்கள் :
கடலை பருப்பு - 1 /2 கரண்டி
பயத்தம் பருப்பு - 1 1 /2 கரண்டி
பால் - 1 டம்ளர்
வெல்லம் - தேவையான அளவு
நெய்
முந்திரி, திராட்சை
அரைக்க :
அரிசி - 1 கை ( 1 /2 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும் )
தேங்காய்
ஏலக்காய்
செய்முறை :
கடலை பருப்பு, பயத்தம் பருப்பு லேசாக வறுத்து, பாலும் கொஞ்சம் தண்ணியும் கலந்து விட்டு குக்கரில் பருப்பை குழைய வேகவிடவும். இதில் சீவிய வெல்லத்தை போட்டு நன்றாக கலக்கவும். அரைக்க கொடுத்து உள்ளதை கரகரனு அரைத்து இதில் கொட்டி பால் கொஞ்சம் விட்டு சுட வைக்கவும். தனியாக நெய் காயவைத்து முந்திரி, திராட்சை பொறித்து கொட்டி இறக்கினால் பயத்தம் பருப்பு பாயசம் ரெடி.
பாயசம் பார்க்கும் போதே மனசு வேணும் வேணும்னு சொல்லுதா ?????
ஒடம்புக்கு வேற நல்லது. வேண்டியவங்க எவ்வளவு வேணும்னாலும் தாராளமா எடுத்து குடிக்கலாம். குடிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க....
ஒடம்புக்கு வேற நல்லது. வேண்டியவங்க எவ்வளவு வேணும்னாலும் தாராளமா எடுத்து குடிக்கலாம். குடிச்சிட்டு எப்படி இருக்குனு சொல்லிட்டு போங்க....
sweets
|
8 comments:
செய்முறை ரொம்ப நல்லாயிருக்கு...
I have tried a similar one from a cookbook,love it a lot!
கலக்குறிங்க...ரொம்ப நல்லா இருக்கு...
நல்லா இருக்கு ப்ரியா! கடலைப்பருப்பு சேர்த்து பாயசம் செய்ததில்லை,செய்து பார்க்கிறேன்.
நன்றி மேனகா.
ஒரு முறை கலக்கியதால் முந்திரி பருப்பு பாயசம் உள்ள போய்டுச்சுன்னு, திராட்சை போட்டதும் நான் கலக்கவே இல்லை கீதா....... சும்மா ஜோக்குக்கு சொன்னேன். நன்றி கீதா. .
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ராஜி.....
நன்றி மகி. கடலை பருப்பு சேர்த்து ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப நல்லா இருக்கும்.