•Friday, August 12, 2011
கல்யாணத்துக்கு முன்னாடி எப்போ டிரஸ் வாங்கினாலும் அதுக்கு தகுந்த மாதிரி வளையல் வாங்கிடுவேன். புது டிரஸ் பார்த்ததும், வளையல் வாங்க என் தம்பி கூட வண்டியில கிளம்பிடுவேன். அவனும் நான் வளையல் வாங்கற வரைக்கும் பொறுமையா வெயிட் பண்ணுவான்.
எங்க கல்யாணம் மூணு நாள் கல்யாணம். நிறைய சம்ப்ரதாயம் நிறைந்த கல்யாணம். ஒவ்வொரு சம்ப்ரதாயத்துக்கும் ஒரு பட்டு புடவைன்னு, என்னோட கல்யாணத்துக்கு மொத்தம் 7 பட்டு பொடவை எடுத்தாங்க. ஒரு ஒரு புடவைக்கும் 4 டசன் வளையல் வாங்கிண்டேன். அப்புறம் விளையாடல்னு ஒரு ஈவென்ட் அதுக்கு என்னவர் வீட்டுக்காரங்க வேற ஒரு 4 , 5 டசன் வளையல் வாங்கி தருவாங்க.
நான் கல்யாணம் ஆகி சிங்கப்பூர் போகும் போது, எங்க அக்கா வளையல் எடுத்து கிட்டு போக ஒரு கிட் வாங்கி தந்தா. அப்புறம் நான் ஒரு 2 கிட் வாங்கினேன்.
எனக்கு வளையல் மேல இருக்க ஆசைய பார்த்து கல்யாணத்துக்கு அப்புறம் எங்க நாத்தனார் பெங்களூர் -ல இருந்து நிறைய ஆர்டிபிசியல் வளையல் வேற வாங்கி அனுப்பினாங்க.
சிங்கப்பூர் -ல எனக்கு ஒரு நார்த் இந்தியன் தோழி கிடைச்சாங்க. அவங்க ஊருக்கு போயிட்டு வரும்போது, அவங்க பக்கம் கல்யாணத்துக்கு போட்டுக்கற வளையல் எனக்காக வாங்கிட்டு வந்து தந்தாங்க.
இப்படி நிறைய வளையல் சேர்ந்தாலும் எப்போ வளையல் கடை பார்த்தாலும் வளையல் வாங்க மாட்டோமான்னு தான் இருக்கும். (வச்சுக்க தான் கிட் இல்லை :( )
இத பார்த்துவிட்டு யாரும் கண்ணு, மூக்கு ( ஹி.....ஹி..... பேச்சு வாக்குல வந்துடுச்சு ) எல்லாம் போடாம ப்ரியாக்கு இன்னும் நிறைய கிட் வளையல் சேரணும்னு சொல்லிட்டு போங்க.
வளையல்
|
23 comments:
(இத பார்த்துவிட்டு நான் கண்ணு, மூக்கு ( ஹி.....ஹி..... பேச்சு வாக்குல வந்துடுச்சு ) எல்லாம் போடல) ப்ரியாக்கு இன்னும் நிறைய கிட் வளையல் சேரணும்!
(இத பார்த்துவிட்டு நான் கண்ணு, மூக்கு ( ஹி.....ஹி..... பேச்சு வாக்குல வந்துடுச்சு ) எல்லாம் போடல) ப்ரியாக்கு இன்னும் நிறைய கிட் வளையல் சேரணும்!
(இத பார்த்துவிட்டு நான் கண்ணு, மூக்கு ( ஹி.....ஹி..... பேச்சு வாக்குல வந்துடுச்சு ) எல்லாம் போடல) ப்ரியாக்கு இன்னும் நிறைய கிட் வளையல் சேரணும்!
:))))))))))))
இத பார்த்துவிட்டு யாரும் கண்ணு, மூக்கு எல்லாம் போடாம ப்ரியாக்கு இன்னும் நிறைய கிட் வளையல் சேரணும்.
அதாவது... காது, ஐப்ரோ எல்லாம் போட்டா பரவாயில்லை.
கண்ணு, மூக்கு எல்லாம் போடாததுக்கு ரொம்ப நன்றி மகி.. :)
சொன்னதை சொல்லுமாம் கிளி பிள்ளைங்கர மாதிரி நிறைய கிட் வளையல் சேரணும்னு மட்டும் சொல்லிட்டு போயிட்டீங்க..... என்னோட வளையல் எல்லாம் எப்படி இருக்குனு சொல்லவே இல்லையே......
இமா கண்ணு, மூக்கு, காது, ஐப்ரோ எதுவும் போடாம (நீங்க வேற ஏதாவது போடணும்னு நினைச்சா அதையும் போடாம ( ஐ.... ஒரு வழியா தப்பிச்சிட்டோம்னு நினைக்கிறேன். ) ) கமெண்ட் மட்டும் போடுங்க....
அப்பாஆஆஆஆஆ.... எப்படி எல்லாம் தப்பிக்க வேண்டி இருக்கு.... ஒரு சின்ன புள்ளைய போட்டு (நான் தான், நான் தான்... :) ) ரொம்பவே கலாய்க்கிறாங்க பா.
வளையல் எல்லாம் சூப்பர். அப்பிடியே சுருட்டிட்டு ஓடிரலாமான்னு இருக்கு எனக்கு. இருங்க... என்னோட அடுத்த வளைகாப்பு வரப்ப சத்தம் போடாம சுட்டுருறேன். ;))
ஆஹா...போதுமா...
எவ்வளவு வளையல்...எல்லாம் சூப்பராக இருக்கின்றது...
பொறாமையா இருக்கு போங்க. முன்னாடி நிறைய இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு இருந்திச்சு. இப்ப அமெரிக்கன் டாலர்களில் பார்த்த பின்னர் வாங்கும் ஆசையே போய் விட்டது. சூப்பரா இருக்கு.
ஓ மை காட்... இவ்ளோ வளையலா... அவ்வவ்... நானும் நெறைய சேத்து வெச்சேன் கல்யாணத்துக்கு முன்னாடி... எல்லாம் என் தொங்கசிக்கு உயில் எழுதி குடுத்துட்டு வந்துட்டேன்... ஹ்ம்ம்... இப்ப இங்க பாக்கறப்ப எல்லாம் வாங்கறது தான்... ஆனா இங்க கண்ணாடி வளையல் அதிகம் கிடைக்கறதில்ல... உங்க வளையல் மேளா தொடர வாழ்த்துக்கள் ப்ரியா...:)
உங்கள் வலையல் கலெக்ஷன் பிரமாதம்
நானும் உங்களை மாதிரிதான் சின்னதில் இருந்து டிரெஸுகு மேட்சா வலையல் போடலான என் முகமே சரியா இருக்காது
போனவருடம் ராஜஸ்தான் போன போது கூட வித விதமா வ்ளையல் வாங்கி கொண்டு வீட்டில் உள்ல அனைத்து கொமரி பிள்ளைகளில் இருந்து குட்டிஸ் வரை பார்த்து பார்த்து வாங்கி வந்தேன்.
என் கணவரும் , பிள்ளைகளும் சோர்ந்தே போய் விட்டார்கள்.
இப்ப மேட்சா போடும் இன்ரட்ஸ்ட் போய் விட்டது.
கிளிப் முதல், வளையல், எல்லாமே , செருப்பு, தலையில் போடு ஸ்கார்ப், ஹாண்ட் பேக் எல்லமே எனக்கு மேட்சா இருக்கனும்.
வ்ளையலை எதில் வைத்து இருக்கீங்க அதுக்கு தனியா பர்ஸ் விக்குதா?
அதையும் கொஞ்சம் போட்டாவ போடுங்களேன்
//வளையல் எல்லாம் சூப்பர். அப்பிடியே சுருட்டிட்டு ஓடிரலாமான்னு இருக்கு எனக்கு. இருங்க... என்னோட அடுத்த வளைகாப்பு வரப்ப சத்தம் போடாம சுட்டுருறேன். ;))//
நன்றி இமா. ஆ....ஹா.... என் கிட்ட இருக்க ஆரஞ்சு பூனையை காவலுக்கு வைக்கணும் போல இருக்கே....
எப்போ உங்க அடுத்த வலைகாப்புன்னு சொல்லுங்க டீச்சர், நானே நிறைய வளையல் வேணும்னா வாங்கி அனுப்பறேன்.
இங்க சென்னைல T - nagar ல பாண்டியன் வளையல் கடைன்னு ஒரு கடை இருக்கு, அங்க இல்லாத வளையலே இல்லை....
நன்றி கீதா.:) உங்க பொண்ணுக்காக நீங்க கூட சேர்த்து வைக்க ஆரம்பிச்சுடுங்க. இப்போ இருக்க பசங்க எல்லாம் டிரஸ் - க்கு செட் டா எல்லாம் கேட்கறாங்க.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி வானதி. :)
;)) இனி... ஹும்! ;D
இதுக்கு முன்னாடி நடந்த வளைகாப்பு பார்க்கணுமா? https://picasaweb.google.com/106111488443617015705/KomUNK#
//ஓ மை காட்... இவ்ளோ வளையலா... அவ்வவ்... நானும் நெறைய சேத்து வெச்சேன் கல்யாணத்துக்கு முன்னாடி... எல்லாம் என் தொங்கசிக்கு உயில் எழுதி குடுத்துட்டு வந்துட்டேன்... ஹ்ம்ம்... இப்ப இங்க பாக்கறப்ப எல்லாம் வாங்கறது தான்... ஆனா இங்க கண்ணாடி வளையல் அதிகம் கிடைக்கறதில்ல... உங்க வளையல் மேளா தொடர வாழ்த்துக்கள் ப்ரியா...:)//
நன்றி அப்பாவி. பாசம் மிகுந்த அக்காவா இருக்கீங்களே.:):) எங்க அக்காவும், நானும் கூட இப்படி தான். கல்யாணத்துக்கு முன்னாடி ரெண்டு பேரும் சேர்ந்து வாங்கின வளையலை, அவ கல்யாணம் முடிஞ்சதும் என் கிட்டவே தந்துட்டு போய்ட்டா.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஜலீலா அக்கா!:) இப்போ தான் அன்னு பிரசவம்போது பட்ட கஷ்டமும், அதுக்கு நீங்க ஹெல்ப்புல்லா இருந்ததை பத்தி அவங்க எழுதி இருப்பதையும் படிச்சிட்டு வந்து பார்த்தா, உங்களோட கமென்ட் இருக்கு. இந்த வளையல் கிட் ரொம்ப அழகா இருக்கும், வளையல் வச்சுக்க வாட்டமா. அதையும் படம் எடுத்து போடறேன்.
என்னவர் இவ்வளவு வளையல் இருக்கே டெய்லி போட்டுக்கலாம்லன்னு கேட்பார். ஆனால் நான் எப்பவாவது, எங்கயாவது வெளில போகும் போது மட்டும் தான் போட்டுக்குவேன். பார்த்து, பார்த்து, சேர்த்து வச்ச வளையல்கள்.
இமா, உங்களோட வளைகாப்பு போடோஸ் அருமை. உங்க கை விரல்கள் குட்டி குட்டியா, குண்டு குண்டா இட்லி மாதிரி இருக்கு... :) :) கடைசி போட்டோ மருதாணி டிசைன் அருமை. அடுத்த வளைகாப்புக்கு சொல்லுங்க, கை முழுக்க வளையல் அடுக்கிடலாம். :)
/உங்க கை விரல்கள் குட்டி குட்டியா, குண்டு குண்டா இட்லி மாதிரி இருக்கு... :) :) /kiகி கி கி! :D :D
காலைல எழுந்ததும் படிச்ச கமென்ட்ஸ்லே டாப் இதான்! :D
ப்ரியா,என் கை விரல்கள் எல்லாம் நீள நீளமா பிஞ்சு வெண்டைக்கா(!??!) மாதிரியே இருக்குமாக்கும்! ;) ;)
கிளி மாதிரி கமென்ட் போட்டு ஓடிட்டேன்னு சொன்னீங்கள்ல? இப்ப பாருங்க,உங்களோட இந்த போஸ்டுக்குதான் இவ்ளோ கமென்ட் வந்திருக்கு. எல்லாம் என்னோட பிஞ்சு வெண்டைக்கா விரல்களின் ராசிதான்! ;)
எல்லா வளையலும் ரொம்ப நல்லா இருக்கு. நார்த் இண்டியன் வளையல் இங்கே சிலபேர் போட்டிருந்ததைப் பார்த்திருக்கேன்,அதுவும் உங்ககிட்ட இருப்பது ஆச்சர்யம்தான். அவங்க(பஞ்சாபிகள்னு நினைக்கிறேன்) கல்யாணத்தப்ப போட்ட வளையலை ஒரு வருஷம் கழிச்சுத்தான் கழட்டுவாங்களாம்.
வளையல் கிட் ரொம்ப நல்லா இருக்கு. எனக்கு இது கிடைக்கல. இங்கே வரப்ப கொண்டுவந்த வளையல்ல முக்கால்வாசி கண்ணாடிவளையல் ஒடஞ்சுபோச்.மெட்டல் வளையல்தான் இருக்கு.
//அடுத்த வளைகாப்புக்கு சொல்லுங்க, கை முழுக்க வளையல் அடுக்கிடலாம். :)//ஆமாம் இமா,ஐரோப்பால இருந்து,நாகைல இருந்தெல்லாம் ஸ்பெஷல் வளையல் வரும்,நாங்க எல்லாரும் வருவம். எப்பன்னு மறக்காமச் சொல்லுங்கோ! ;)
வலையுலகில இட்லி ரொம்பத்தான் ஃபேமஸா இருக்கு. ;)
//ஐரோப்பால இருந்து,நாகைல இருந்தெல்லாம் ஸ்பெஷல் வளையல்// வந்தா போதாது. கோவைல இருந்தும் வரணும் மகி.
ஒரு காலத்தில் வளையல்கார செட்டியார் வன்துதான் வளைகாப்பில் எல்லோருக்கும் வளையடுக்குவார். சம்மந்தி வீட்டாருக்கென ஸ்பெஷல் வளையல்கள் தனித்தே பெட்டியில் வரும்.
எல்லாம் சரிகை போட்ட பளபளா வளையல்கள்.
சாதா வளையல்களின் பெயர் பட்டு வளையல். அந்த வளையல்களை ஞாபகப் படுத்தியது உன் வளையல் சேகரிப்பூ.
பஞ்சாபீஸ் மருமகள் வளையலைக் கழட்டிக் கொடுத்து விட்டு மாமியார் பதிலாக தங்க வளையல் போட வேண்டும் என்று அவர்கள் வழக்கம்ன்னு முன்னாடியே சொன்னதும் உண்டு.
எக்ஸ்பீரியன்ஸ் சொல்லுகிறது.