•Monday, August 01, 2011
வெஜிடபுள் ரைஸ் எங்க அம்மா ரொம்ப நல்லா செய்வாங்க. வீட்டுல எங்க மாமியார், மாமனார் இல்லாதப்போ (ஏன்னா அவங்க வெங்காயம், கேரட், பிரட் எல்லாம் சாப்பிட மாட்டாங்க ) அம்மா கிட்ட செய்முறை கேட்டு இந்த ரைஸ் பண்ணேன். ரொம்ப அருமையா இருந்தது.
தேவையான பொருட்கள் :
நெய்
கடலை எண்ணெய்
லவங்கம்
பட்டை
வெங்காயம் - 2
பூண்டு - 6 (எங்க அம்மா போடுவாங்க. நல்லா இருக்கும். நான் இதுல போடலை )
பச்சை மிளகாய்
கேரட் - 2
பீன்ஸ் - 7
உருளை கிழங்கு - 1
பச்சை பட்டாணி - 1 / 4 கப்
அரிசி - 1 கப்
தண்ணீர் - 2 கப்
முந்திரி பருப்பு
பிரட் - 4 ஸ்லைஸ்
புதினா - கொஞ்சம்
உப்பு
செய்முறை :
குக்கர் -ல கொஞ்சம் எண்ணெய், நெய் விட்டு பட்டை, லவங்கம் போட்டு வெடிக்க விடனும். வெங்காயம் போட்டு நன்றாக வதக்கணும். வதங்கியதும் பூண்டு,பச்சை மிளகாய்,பச்சை பட்டாணி போட்டு வதக்கி, பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், உருளை கிழங்கு போட்டு வதக்கணும்.
வதங்கியதும் அரிசியை களைந்து வடிய வச்சு குக்கர் ல போட்டு வதக்கணும். உப்பு தேவையான அளவு போடணும்.
வதங்கியதும் 2 கப் தண்ணீர் விட்டு ஒரு முறை கிளறி குக்கரை மூடி 2 விசில் விடனும். பிரஷர் போனதும் திறந்து ஒரு முறை கிளறி விடனும்.
தனியாக வாணலியில் நெய் காய வைத்து முந்திரி பொரிச்சு போடணும்.
பிரட் சின்ன சின்ன துண்டுகள் பண்ணி நெய் - ல பொரிச்சு சாதத்துல போடணும்.
சாதம் சூடாக இருக்கும் போதே புதினா தூவினால் அருமையான வெஜிடபள் ரைஸ் தயார்.
ரைத்தா தொட்டுண்டு சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும். பாஸ்மதி ரைஸ் இங்க யூஸ் பண்ண மாட்டாங்க. அதனால பச்சை அரிசில தான் பண்ணேன். நல்லா வந்தது.
5 comments:
ரொம்ப ஈஸியான ரைஸ்...கடைசியில் பிரெட் துண்டுகள் சேர்ப்பது அருமை...
குறிப்பும் செய்முறைப் படங்களும் அருமை.
நன்றி இமா.
நன்றி கீதா... ஆமாம் செய்வது ரொம்ப ஈஸி. எங்க அம்மா பிரட் துண்டுகள் சேர்ப்பாங்க. அதே மாதிரி நானும் பண்ணேன்.
பிரட் சேர்ப்பது புதுசா இருக்கு... குறிப்பும் சுலபமா இருக்கு.. பகிர்வுக்கு நன்றி!