•Thursday, August 04, 2011
இந்த ரசம் பித்தத்தை போக்கும். செய்முறையும் ரொம்ப ஈஸி. எங்க மாமனார்க்கு டெய்லி சாப்பாட்டுல சாம்பார், காய் எதுவும் இல்லைனாலும் ரசம் கண்டிப்பா இருக்கணும். அதனால எங்க வீட்டுல தினமும் சாம்பார், காய், ரசம், சாதம் இருக்கும். சாம்பார் மட்டும் டெய்லி மாறும். ஒரு நாள் சாம்பார், அடுத்த நாள் வத்த கொழம்பு, அடுத்த நாள் கீரை, அடுத்த நாள் மோர் கொழம்பு, அடுத்த நாள் அவியல், அடுத்த நாள் பொரிச்ச கூட்டு இப்படி டெய்லி ஒரு வகை இருந்தாலும் ரசம் எப்பவும் இருக்கும். சாம்பார் தவிர்த்து மத்த நாள் எல்லாம் ரசத்துக்காக பருப்பு தனியா குக்கர்ல வைக்கணும். சாதம் எங்க மாமியார் வெண்கல பானை -ல வடிச்சு பண்ணுவாங்க. (சாதத்துல இருக்க கஞ்சி சுகர் இருக்கவங்களுக்கு நல்லது இல்லைன்னு டெய்லி எங்க வீட்டுல சாதம் வடிப்பாங்க ) என்னிக்காவது ஒரு நாள் பருப்பு வைக்க கஷ்டமா இருந்தா, இந்த ரசம் பண்ணிடுவோம். சீக்கரம் பண்ணிடலாம்.
செய்முறை :
புளியை நல்லா கரைச்சு அதுல தக்காளி நறுக்கி போட்டு, உப்பு, மிளகாய் பொடி (கொஞ்சமா ), மஞ்சள் பொடி,பெருங்காயம் போட்டு பச்சை வாசனை போக நன்றாக கொதிக்க விடனும்.
நன்றாக கொதித்ததும் ரசப்பொடி போடணும்.
தனியாக வாணலியில் கொஞ்சமாக நெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கொஞ்சமாக வேப்பம்பூ போட்டு வறுத்து ரசத்துல கொட்டிடனும். ரசம் ரொம்ப கம்மியா தெரிந்தால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கலாம்.
ரசம் மஞ்சள் நுரை நுரச்சிண்டு வரும்போது இறக்கிடணும்.
வேப்பம்பூ ரசம் ஒடம்புக்கு ரொம்ப நல்லது. மயக்கம், பித்தம் எல்லாம் சரி பண்ணும். தேங்காய் துவையல், வேப்பம்பூ ரசம் இருந்தால் எதுவும் வேண்டாம். ட்ரை பண்ணி பாருங்கோ.....
ரசம்
|
2 comments:
/ ட்ரை பண்ணி பாருங்கோ..... /இப்படியெல்லாம் சொல்லக்கூடாது. வேப்பம்பூ ஒரு கிலோ பார்சல் அனுப்பிட்டு அப்புறமா சொல்லுங்க! ;)
நீங்க இந்தியா வரும்போது சென்னை பக்கம் வரேன்னு சொல்லுங்க, வேப்பம்பூ நிறைய கொண்டு வந்து தரேன். அப்படியே லட்டும் கொண்டு வரேன்.