•Thursday, August 25, 2011
என்னவர் குலாப்ஜாமூன் பண்ண சொல்லி ரொம்ப நாளா கேட்டு கிட்டே இருந்தார். மகியோட dry ஜாமூன் பார்த்து எனக்கும் பண்ணனும்னு ஆசையா இருந்தது.
நேத்து ஜாமூன் செய்து அதில் சிலவற்றை சுகர் -ல உருட்டி வைத்தேன்.
என்னவருக்கு ரொம்ப புடிச்சு இருந்தது. விரும்பி சாப்பிட்டார்.
ஹாட் ஜாமூன் வித் ஐஸ்-கிரீம் சாப்பிட்டால் நல்லா இருக்கும்னு மகி ஐடியா தந்ததால், அதையும் ட்ரை பண்ணலாம்னு என்னவர் அலுவலகத்தில் இருந்து வருவதற்குள் ஐஸ்-கிரீம் வாங்கி வந்து வைத்து இருந்தேன்.
ஐஸ்-கிரீம் கூட ஜாமூன் வைத்து தந்தேன். ஒரே சர்ப்ரைஸ் அவருக்கு. ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருந்தார். பண்ணவே இல்லை. திடீர்னு பண்ணேன். மகி சொல்லி இருந்த மாதிரி ஜாமூன் பொறித்து கொஞ்சம் ஆறியதும், சர்க்கரை, தண்ணீர் சம அளவு எடுத்து பாகு செய்து (கம்பி பதம் எல்லாம் இல்லை, சும்மா கொதி வந்தா போதும் ) அதில் ஜாமூன் போட்டு, ஏலக்காய் போட்டு செய்தேன். நான் குலாப்ஜாமூன் மிக்ஸ் வாங்கி செய்து இருக்கேன். ரவை,பால் பவுடர் வைத்து அடுத்த முறை ட்ரை பண்ணனும். (இதை பண்ணவே இத்தனை நாள் ஆச்சு, அதை எப்போ ட்ரை பண்ண போறேனோ !!!! :) ) அடுத்து காந்த்வி ட்ரை பண்ணேன். நல்லா வந்தது மகி. இந்த தடவை போட்டோ எடுக்கலை. அடுத்த முறை செய்யும் போது போட்டோ எடுத்து போடுகிறேன்.
sweets
|
7 comments:
ரொம்ப சூப்பராக இருக்கின்றது....
aaha,super gulab jamoon priya! Thanks for trying out my recipes! khandvi seytheengala? romba santhosham! :) :)
Thanks again!
ஆஹா பாக்கும்போதே திங்கணும் போலருக்கே...திங்கணும் போல இருக்கே...நான் என்ன செய்வேன் நான் என்ன செய்வேன்...சரி பாத்து செஞ்சி சாப்ட்ருவோம்... பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்களுடன்
நன்றி கீதா.
நன்றி மகி.
மனோ சுவாமிநாதன் அவர்களே, என்னுடைய வலைப்பூவை, வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ராஜேஷ்.