•Monday, October 17, 2011
பயத்தம் பருப்பு தோசை செய்வது ரொம்ப ஈஸி. இதில் கொத்தமல்லி நிறைய போட்டு செய்வதால், வாசனையாக ரொம்ப நல்லா இருக்கும்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 1 கப்
பயத்தம் பருப்பு - 1 கப்
இஞ்சி
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லி - 2 கப்
உப்பு
எண்ணெய்
செய்முறை :
பயத்தம் பருப்பு, அரிசியை 1 மணி நேரம் ஊற வைக்கணும்.
ஒரு மணி நேரத்துக்கு பிறகு மிக்சில கொர கொரன்னு அரச்சுக்கணும்.
அதுல கொத்தமல்லி, இஞ்சி, பச்சைமிளகாய், உப்பு போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு அரச்சுக்கணும்.
தோசை மாவு மாதிரி இருக்கணும்.
அரச்ச உடனே தோசை செய்து விடலாம்.
இந்த தோசைக்கு கொஞ்சமாக எண்ணெய் சேர்த்தால் போதும்.
தோசைக்கு தொட்டுக்க சட்னி, சாம்பார், மிளகாய் பொடி எது வேண்டுமானாலும் போட்டுக்கலாம். நான் முருங்கைக்காய் சாம்பார் தொட்டுண்டு சாப்பிட்டேன். உங்களுக்கு புடிச்சதை தொட்டுண்டு பெசரெட்டு செய்து சாப்பிட்டு பாருங்க.
10 comments:
Wonderful pesarattu,perfect! I love it a lot!
சூப்பரா இருக்கு தோசை.
ப்ரியா,அம்மாவும் இந்த பாசிப்பருப்பு தோசை செய்தேன்னு சொல்வாங்க,நான் இதுவரை செய்ததில்லை. சூப்பரா இருக்கு!
ஒரு சந்தேகம்..முழு பச்சைப்பயறில்தானே பெசரட்டு செய்வாங்க??! உங்க ரெசிப்பி கொஞ்சம் வித்யாசமா இருக்கே? ;)
நன்றி வானதி
நல்லா இருக்கு தோசை.மல்லி இல்லை சேர்த்து செய்வது இப்பத்தான் கேள்விபடுறேன்.. விரைவில் செய்து பார்த்து சொல்றேன்.
நன்றி ராஜி. :)
நன்றி மகி.... நீங்களும் செய்து பாருங்க. எவ்வளவு கொத்தமல்லி சேர்த்து செய்யரமோ அவ்வளவு நல்லா இருக்கும்.கொத்தமல்லி, இஞ்சி வாசனை தோசை செய்யும் போதே வரும். சூடா செய்து சாப்பிட்டா நல்லா இருக்கும்.
எங்க வீட்டுல பச்ச பயறு சுண்டல், உருண்டை செய்ய தான் யூஸ் பண்ணுவாங்க. அதனால நான் எப்பவும் பெசரெட்டு பயத்தம் பருப்பு போட்டு தான் செய்யறது. நீங்க பச்ச பயறு போட்டும் செய்யலாம். ட்ரை பண்ணி பாருங்க.
நன்றி ராதா. செய்து சாப்பிட்டு பாருங்க இன்னும் சூப்பர் ரா இருக்கும்.
தோசையும் சூப்பர், Photos ம் சூப்பர்.....
நன்றி பாபு..... :)