•Sunday, October 09, 2011
என்னவருக்கு பஜ்ஜினா ரொம்ப புடிக்கும். ஒரு சண்டே சாயந்திரம் காய் எல்லாம் கட் பண்ணி கொடுத்து, பஜ்ஜி செய்து தரச் சொல்லி கேட்டார். (காய் கட்பண்ணி வச்சுட்டா மறுப்பு சொல்லாம செய்து தந்து தானே ஆகணும். குலோப் ஜாமூன் செய்ய நாள் தள்ளின மாதிரி, பஜ்ஜி செய்து தரவும் நாள் தள்ள போறேன்னு தான் காய் கட் பண்ணி தந்துட்டார் ). வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு பஜ்ஜி செய்து தந்தேன். என்னவருக்கு தக்காளி பஜ்ஜினா ரொம்ப புடிக்கும்.
தேவையான பொருட்கள் :
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
வறட்டு மிளகாய் பொடி
உப்பு
பெருங்காயம்
வெங்காயம், தக்காளி, உருளை கிழங்கு - 2
மாவு, உப்பு, பெருங்காயம், மிளகாய் பொடி எல்லாம் போட்டு தண்ணீர் விட்டு, கொஞ்சம் திக்கா தோசை மாவு மாதிரி கரைச்சுக்கனும்.
என்னவர் கட் பண்ணி கொடுத்த காய்கள். தக்காளி, வெங்காயம், உருளை கிழங்கு, வட்ட வட்டமாக கொஞ்சம் திக்காக கட் பண்ணி வச்சுக்கணும்.
எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது காயை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்தால் பஜ்ஜி ரெடி.
வெங்காயம், உருளைகிழங்கு பஜ்ஜி.
தக்காளி பஜ்ஜி.
இதே மாதிரி பீர்க்கங்காய், கத்தரிக்காய் பஜ்ஜியும் செய்து சாப்பிடலாம்.
குறிப்பு : அது என்ன.... சண்டே தான் பஜ்ஜி செய்து சாப்பிடனுமானு நீங்க கேட்கறது தெரியறது.... என்ன பண்ணறது.... மத்த நாள் எல்லாம் எங்க வீட்டு ரங்கமணி ஆபீஸ் - ல இருந்து வரவே நைட் ஆகிடறது. பஜ்ஜி சாயந்தர நேரத்தில் சாப்பிட்டா தான் நல்லா இருக்கும். அதான் எங்க வீட்டுல பஜ்ஜினா சண்டே தான். அம்மா வீட்டுல பஜ்ஜி செய்தா கூடவே கேசரியும் செய்துடுவாங்க. ரொம்ப நல்லா இருக்கும்.
அட.... இன்னிக்கும் சண்டே.... எல்லோரும் உங்களுக்கு புடிச்ச பஜ்ஜி செய்து சாப்பிடுங்க..... :)
ஸ்னாக்ஸ்
|
8 comments:
தக்காளி ல கூட பஜ்ஜி செய்யலாமா !!!!!
பாபு தக்காளி பஜ்ஜி ரொம்ப நல்லா இருக்கும். ஈரம் அதிகமா இருக்கும் என்பதால் கொஞ்சம் எண்ணெய் தெளிக்கும். ஜாக்ரதையா ட்ரை பண்ணி பாருங்க.
எல்லா காயிலும் பஜ்ஜி செய்திருக்கேன்....தக்காளி பஜ்ஜி!டிரை பண்ணி பாத்துடறேன்.:)
ராதா ட்ரை பண்ணி பாருங்க.... புளிப்பு சுவையுடன் நல்லா இருக்கும்....
/மத்த நாள் எல்லாம் எங்க வீட்டு தங்கமணி ஆபீஸ் - ல இருந்து வரவே நைட் ஆகிடறது./ ப்ரியா, இப்புடி பிழை விடக்கூடாது..தங்கமணி நீங்க, ரங்கமணிதான் ராம் சார்,ஓக்கே? :))))))))))))))
தக்காளி பஜ்ஜி புதுசா இருக்கு. ட்ரை பண்ணி பார்க்கிறேன்.
முதல் முறை தங்கமணி, ரங்கமணி யூஸ் பண்ணுவதால் குழம்பிட்டேன். ஹி...ஹி... ஹி... நன்றி மகி. ட்ரை பண்ணி பாருங்க... நல்லா இருக்கும்.
Hi!!!! First time here. Lovely recipes. Your blog indicates some malware. I am not ableto view fully.
thanks for coming janu.....