•Wednesday, October 19, 2011
தேவையான பொருட்கள் :
அரிசி - 1 கப்
பயத்தம் பருப்பு - 3/4 கப்
தண்ணீர் - 5 கப்
எண்ணெய்
கடுகு
உளுத்தம் பருப்பு
பெருங்காயம்
கருவேப்பிலை
உப்பு
காய்ந்த மிளகாய்
செய்முறை :
அரிசி, பருப்பை வாணலியில் (எண்ணெய் விடாமல் ) வறுத்து வச்சுக்கணும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை தாளித்து, தண்ணீர் விட்டு, உப்பு போடணும். தண்ணீர் நன்றாக கொதிக்கும் போது அரிசி, பருப்பு களைந்து போட்டு நன்றாக கிளறனும். அடுப்பை சிம் - யில் வைத்து பருப்பு, அரிசி வெந்ததும் இறக்கிடணும்.
பெருங்காயம் வாசனையுடன் உசிலி ரெடி.
இந்த உசிலி கூட கார சட்னி தொட்டுண்டு சாப்பிடலாம்.
3 comments:
குக்கர்ல இல்லாம பாத்திரத்தில் சாதமே நான் சமைச்சதில்ல ப்ரியா! ;) இது குக்கர்ல வைக்கலாமா?
காய்கறி உசிலிதான் கேள்விப்பட்டிருக்கேன்,இது புதுசா இருக்கு..கொஞ்சம் பொங்கல் மாதிரி இருக்கு. நல்லா இருக்கு!
மகி, பருப்பு உசிலி காய்னு பீன்ஸ், கொத்தவரங்காய் - ல செய்வாங்க... அது வேற. இது ஒரு டிபன்.
பொங்கல் செய்யும் போது அரிசி, பருப்பு எல்லாம் குழைய வேக வைப்போம்..... இதுல அரிசி பருப்பு உதிர் உதிரா இருக்கணும்...
குக்கர் - ல கூட செய்யலாம் மகி. ட்ரை பண்ணி பாருங்க.
Just mouthwatering....looks so easy to prepare and delicious!