•Sunday, July 03, 2011
தேன்குழல் செய்ய தேவையான பொருட்கள் :
அரிசி மாவு - 2 கப்
உளுத்தம் மாவு - 2 கைபிடி
வெண்ணெய்
பெருங்காயம்
சீரகம்
உப்பு
செய்முறை :
உளுத்தம் மாவு செய்ய உளுத்தம் பருப்பை வறுத்து பொடி செய்தால் உளுத்தம் மாவு கிடைக்கும். மேலே உள்ள அனைத்தும் போட்டு கொஞ்சமாக தண்ணீர் விட்டு பிசைந்து குழலில் தேன்குழல் தட்டு போட்டு மிதமாக காய்ந்த எண்ணையில் பொறித்து எடுத்தால் தேன்குழல் ரெடி.
குறிப்பு :
முறுக்கு குழலில் 5 ஓட்டை இருக்குமாறு ஒரு தட்டு இருக்கும் அது தான் தேன்குழல் தட்டு.
ஸ்னாக்ஸ்
|

5 comments:
பக்கொடாதான் பார்சல் வரலே தேன் குழலாச்சும் கரெக்டா அனுப்பி வையுங்க! இந்த மாதிரி நொறுக்ஸ் பண்ணி போட்டோ போட்டு ஏங்க வைக்குரீங்களே இது நியாயமா?
உங்க குறிப்புகள் எல்லாம் மிக சுலபமான விளக்கங்களோடு இருக்கிறது;
தேன்குழல் தட்டு எப்படி இருக்கும் என நினைத்துக்கொண்டே படித்தேன், நல்லவேளை குறிப்பு கொடுத்து இருக்கிங்க, நன்றி!
செய்து பார்க்கனும்!
பக்கோடா அனுப்பி வச்சேன் நடுவுல யாரோ எடுத்து கிட்டாங்க. தேன் கொழலை நல்லா பாக் பண்ணி அனுப்பி இருக்கேன். சீரக வாசனை தான் காட்டி கொடுத்துடுமோனு பயமா இருக்கு. யார் கைக்கும் போகாம கரெக்ட் டா சீக்கரம் நீங்களே வாங்கிண்டு சாப்பிட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க என் சமையல்..... :)
நீங்களும் செய்து பாருங்க என் சமையல்..... நான் சொல்லி இருக்க அளவு பண்ணா ஒரு மூணு கொழல் பிழியர மாதிரி தான் மாவு வரும். சீக்கரம் பண்ணிடலாம். ட்ரை பண்ணி பாருங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியா.... செய்து பாருங்க சூப்பர் ரா இருக்கும்.