Author: Priya ram
•Saturday, March 10, 2012
ரசிக்க ருசிக்கனு நானே பதிவுகள் தருவது போக, மத்தவங்க ப்ளாக் பார்த்து ரசித்து, செய்து பார்த்ததையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன். அது தான் இந்த ரசித்து ருசித்தவை...
நிறைய சமையல் குறிப்புகள்  பார்த்து புடிச்சிருந்தாலும், எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்க முடியவில்லை....
செய்தவை வரை உங்களுடன் இப்பொழுது பகிர்ந்து கொள்கிறேன். மற்றவை ரசித்து ருசித்தவை 1 ,2 ,3 ..... என்ற தலைப்புகளுடன்  பிறகு வரும்.....

ஒரு முறை வீட்டில் மிளகாய் பொடி தீர்ந்து போய் விட்டது.  மிளகாய் பொடி  செய்முறை  மஹி, அவங்க ப்ளாக் ல தந்து இருப்பது நினைவில் வர, அதை முயற்சி செய்து சூப்பர் ரா வந்தது... நன்றி மகி :)

செய்வதும் ரொம்ப ஈஸி யா தான் இருந்தது.

 கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சம அளவில் எடுத்துக்கணும். காரத்துக்கு ஏத்த மாதிரி மிளகாய்,   
 (நான் ஒரு 10 மிளகாய் எடுத்து கிட்டேன் ) பெருங்காயம், உப்பு,
ரெண்டு கை பிடி  எள்ளு ( அவங்க வெள்ளை எள்ளு சொல்லி இருப்பாங்க,
 நான் கருப்பு எள்ளு எடுத்துகிட்டேன்.  கருப்பு எள்ளு யூஸ் பண்ணறதா இருந்தால், ஒரு அரை மணி நேரம் ஊற வச்சு, தண்ணிய வடிய விட்டு எடுத்துக்கணும். வெள்ளை எள்ளு என்றால் அப்படியே எடுத்துக்கலாம். )



தனி தனியாக பருப்பு, எள்ளு, மிளகாயை எண்ணெய் விடாமல் வறுத்து கொர கொரனு பவுடர் பண்ணிக்கணும். அதனுடன் உப்பு, பெருங்காயம், கொஞ்சம் வெல்லம் ( நிறைய சேர்த்தால், காரம் தெரியாது) சேர்த்து கலந்துக்கனும்.




பொடி கைவசம் இருக்க, பொடி இட்லி, பொடி தோசை பண்ணனும்னு நினைச்சேன். பொடி இட்லி ஒரு முறை பிரேமா'ஸ் தளிகை ல  பார்த்ததில் இருந்தே செய்யணும்னு ஆசை. அதை இந்த பொடி வைத்து செய்து பார்த்து விட்டேன். அவங்க சொல்லி இருக்க பொடியும் ட்ரை பண்ணனும். நன்றி பிரேமா. :)


பொடி இட்லி செய்து விட்டேன், அடுத்தது பொடி தோசை செய்யலாம்னு மஹி'ஸ் கிட்சேன் ல பார்த்த பொடி தோசையை  செய்தேன். நன்றி மகி. :)


தோசை கூட வெங்காய சட்னி, தக்காளி சட்னி. ஒரு டிஷ்க்கு நிறைய சைடு டிஷ் பண்ணறது எனக்கு ரொம்ப புடிக்கும். சாம்பார் மட்டும் தான் அன்னிக்கு மிஸ்ஸிங்....


 மத்த ரசித்து ருசித்தவை வரும் பதிவுகளில்......
This entry was posted on Saturday, March 10, 2012 and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On March 10, 2012 at 8:30 PM , Aarthi said...

wow..awesome recipe

Aarthi
http://www.yummytummyaarthi.com/

 
On March 11, 2012 at 8:26 PM , ராதா ராணி said...

ப்ரியா..தோசையை விட அந்த ரெண்டு சட்னிதான் மவுத் வாட்டரிங்..:)

 
On March 13, 2012 at 11:25 PM , Mahi said...

இட்லிப்பொடி செய்துபார்த்து படமும் போட்டதுக்கு நன்றி ப்ரியா! ரெசிப்பி உங்களுக்குப் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி!:)

பொடி இட்லி-பொடி தோசை-சட்னிகள் எல்லாமே சூப்பரா இருக்கு!:P

 
On March 18, 2012 at 1:38 PM , Sowmya said...

ம்ம்ம்ம் பாக்கவே சூப்பர் ஆ இருக்கு

 
Related Posts Plugin for WordPress, Blogger...