•Friday, March 11, 2011
இந்த பேப்பர் குடிசை வீடு போன வாரம் டிவி -ல ஒரு பெண்மணி கைவினை பொருட்கள் செய்யும் நிகழ்ச்சில வந்து சொல்லி தந்தாங்க. அவங்க சொல்லி தரும் போதே எனக்கு பண்ணனும்னு ஆசை வந்து விட்டது. உடனே பண்ண ஆரம்பிச்சுட்டேன். செய்வதும் ரொம்ப ஈஸி தான். இதுக்கு தேவை தினமும் கிழிக்கிற காலண்டர் பேப்பர் தான்.
இந்த மாதிரி பேப்பர் மொத்தமா எடுத்துக்கணும். இதுல ரெண்டு மாதிரி இருக்கும். ஒன்னு பின் அடிச்சது இன்னும் ஒன்னு ஆணி அடிச்சது இருக்கும். நம்ம இந்த வீடு பண்ண ஆணி அடிச்சது தான் உபயோகிக்கனும்.
ஆணி எடுத்து விட்டு இந்த வாட்டத்துல பேப்பரை வச்சுக்கணும்.
முதல் தாளை இந்த மாதிரி முக்கோணமா மடிச்சுக்கணும்.
அடுத்த தாளை இந்த மாதிரி பாதி மடிசிட்டு
மீதி பாதியை நேர் வாட்டத்தில் மடிக்கணும்
நுனி கீழ சரியா தொடணும் அப்படி செய்தால் தான் கூரை சரியாக வரும்.
அடுத்த தாளை முக்கோணமா மடிக்கணும்.
அதுக்கு அடுத்த தாளை பாதி மடிச்சு
மீதியை நேர் வாட்டத்தில் மடிக்கணும். இப்படியே மாத்தி மாத்தி மொத்த
பேப்பரையும் மடித்தால்
இந்த மாதிரி கிடைக்கும். சேர்த்தால் குடிசை வீடு கிடைக்கும்.
10 comments:
Ippo than unga blog paarka arambichen, ungaloda
works ellam supera irukunga.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அபர்ணா.
ப்ரியா,ரொம்ப க்யூட்டா இருக்குப்பா குடிசை வீடு!பேப்பரை தனித்தனியா கிழிச்சு பண்ணப்போறீங்களோன்னு பார்த்தேன்,அப்படியே செய்திருக்கீங்க.
போனவாரம் பேப்பர் ரோஸ் செய்ய ஒரு ப்ரெண்ட் சொல்லித்தந்தாங்க,ம்ஹும்,என் மண்டைல ஏறவே இல்லையே!! ;) இவர் நல்லா பழகிட்டார். :)
நன்றி மஹி. இது ரொம்ப ஈஸி பா. ட்ரை பண்ணி பாருங்க. அருண் சார் பண்ணற ரோஜா பூவை ஒரு பதிவில் போடுங்க. கத்துக்க ஆவலா இருக்கேன்.
வீடு சூப்பர் ஆ இருக்கு. கை வேலைகளில் கலைகளில் கலக்கறீங்க.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சௌம்யா. எனக்கு கை வேலைனா ரொம்ப புடிக்கும் பா.
ஹாய் ப்ரியா ரொம்ப நல்லா இருக்கு உங்கள் ப்ளாக்..
கை வேலைகள் எல்லாம் மிகவும் அருமை
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிநேகிதி
ரொம்ப க்யூட்டா இருக்கு குடிசை வீடு ப்ரியா...செய்துபார்க்கிறேன் .. வாழ்த்துக்கள் .... எந்த சேனலில் ஒளிபரப்பாகுது பிரியா நானும் பார்க்கலாம் என்று கேட்கிறேன்....
cute. :-) Will try if I find something suitable.