•Wednesday, March 30, 2011
இப்போ மாங்காய் சீசன்னால வீட்டுல மாங்காய் வாங்கி வந்து இருந்தாங்க. இன்னிக்கு மாங்காய் தொக்கு பண்னேன். நல்லா வந்தது. ருசி நல்லா இருக்குனு வீட்டுல எல்லோரும் சொன்னாங்க.
தேவையானவை :
மாங்காய் - 1 தோல் சீவி துருவியது.
கடுகு - 1 / 4 ஸ்பூன்
மஞ்சள் பொடி - 1 / 4 ஸ்பூன்
வறட்டு மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
வெல்லம் - ஒரு சுண்டைக்காய் அளவு
உப்பு - தேவையான அளவு
வெந்தியம் வறுத்து பொடி பண்ணது - 1 / 2 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
பெருங்காயம் - 1 சிட்டிக்கை
செய்முறை :
வாணலியில் எண்ணெய் விட்டு நன்றாக காய்ந்ததும் கடுகு வெடிக்க விட்டு பெருங்காயம் போடணும். பிறகு துருவிய மாங்காய் போட்டு மஞ்சள் பொடி, உப்பு, வறட்டு மிளகாய் பொடி போட்டு நன்றாக கிளறி விட்டு வேக விடனும். மாங்காய் வெந்து எண்ணெய் ததும்பி வரும்போது வெந்திய பொடி, வெல்லம் போட்டு கிளறி இறக்கணும். சுவையான மாங்காய் தொக்கு ரெடி. இதை பண்ணும் போது எண்ணெய், மிளகாய் பொடி கொஞ்சம் அதிகமாக போட்டு செய்தால் ஒரு வாரம் வரை கூட கெடாமல் இருக்கும்.
தொக்கு
|
8 comments:
சுவையான தொக்கு,,
நல்லா இருக்கு ப்ரியா! நீங்க பெய்ன்ட் செய்த பானையா அது? க்யூட்டா இருக்கு. :)
கருத்துக்கு நன்றி சிநேகிதி!:)
நன்றி மஹி. இது நான் பெய்ன்ட் செய்த பானை இல்லை மஹி.
Colourful testy thokku mmmmm....
thanks sowmya.
சுவையான தொக்கு, கருத்துக்கு நன்றி
நன்றி சாய்ராம்.