•Friday, April 01, 2011
தக்காளி தொக்கு எங்க வீட்டுல ரெண்டு விதமா பண்ணுவோம். ஒன்னு தக்காளிய அரைத்து பண்ணுவது மற்றொன்று தக்காளியை பொடியாக நறுக்கிட்டு பண்ணறது. இந்த தொக்கு தக்காளியை அரைத்து பண்ணேன்.
தேவையான பொருட்கள் :
தக்காளி - 1 / 2 கிலோ
கடுகு - 1 / 4 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - கொஞ்சம்
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
மஞ்சள் பொடி - 1 / 4 ஸ்பூன்
வறட்டு மிளகாய் பொடி - 1 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து தக்காளியை தண்ணி விடாமல் அரைத்து கொட்டி அதில் மஞ்சள் பொடி, உப்பு, மிளகாய் பொடி போட்டு கிளறி மூடி வைக்கணும்.அடுப்பை சிம் - ல வைக்கணும். இது நன்றாக கொதித்து தக்காளி தொக்கு திக்காக எண்ணெய் ஓரத்தில் சேர்ந்து வரும்போது வாணலியை இறக்கிடணும். தக்காளி தொக்கு ரெடி.
தொக்கு
|
5 comments:
தொக்கு சூப்பரா இருக்கு ப்ரியா..இது இட்லி-தோசைக்கு சைட் டிஷாதானே செய்யணும்?
நன்றி மஹி.இது இட்லி,தோசை,சப்பாத்தி எதுக்கும் தொட்டுக்கலாம். எங்க வீட்டுல சாதத்துக்கு கூட போட்டு பிசைந்து சாப்பிடுவாங்க. இந்த மாதிரி பண்ணா எங்க மாமனார்க்கு ரொம்ப புடிக்கும்.
தொக்கு சூப்பரா இருக்கு நன்றி
நன்றி சாய்ராம்.
நானும் இதே மாதிரி தான் செய்வேன். உடனே காலியாகிடும். எல்லாத்த்க்கும் ஏற்ற தொக்கு.