•Tuesday, April 19, 2011
இந்த சமிக்கி மாலையை சமிக்கி வைத்து செய்தேன்.
தேவையான பொருட்கள் :
பச்சை, கோல்டன் கலர் சமிக்கி ( இது பூ வடிவத்தில் இருக்கும். எல்லா கலர்லயும் கிடைக்கிறது )
டுவைன் நூல்
ரெண்டு ஊசி
கோல்டன் மணி
கோல்டன் கலர் டேப்
கத்திரிகோல்
செய்முறை :
பச்சை, கோல்டன் கலர் சமிக்கியை கப் வடிவத்தில் மடிக்கணும். டுவைன் நூலில் தேவையான அளவு எடுத்து இரண்டு புறமும் ஊசி கோர்த்துக்கணும். ஒரு கோல்டன் சமிக்கி, மூணு கோல்டன் மணி,ஒரு பச்சை சமிக்கி, மூணு கோல்டன் மணி இப்படியே மாத்தி மாத்தி கோர்த்து கொண்டே வர வேண்டும். ரெண்டு பேர் ரெண்டு பக்கம் கோர்த்து கொண்டே வந்தால் மாலை சீக்கிரம் பண்ணி விடலாம். நடுவில் கிழே தொங்கும் பகுதிக்கு ஒரு சமிக்கி, ஐந்து மணி, ஒரு சமிக்கி என கோர்த்து நடுவில் சேர்த்து முடிச்சு போடணும். நமக்கு தேவையான அளவுல மாலை செய்துக்கலாம்.
6 comments:
அழகா இருக்கு ப்ரியா!
நன்றி மகி.
Supera irukku PRiya!
Kurinjikathambam, Event : HRH-Healthy Summer
சூப்பர் ஆ இருக்கு மாலை
நன்றி குறிஞ்சி.
நன்றி சௌம்யா.