•Friday, April 22, 2011
நான் கல்யாணத்துக்கு முன்னாடி தெர்மோகோல் தட்டுல அலங்காரம் நிறைய செய்து இருக்கேன். இப்போ பண்ணலாம்னு எங்க மாமனார் கிட்ட தெர்மோகோல் தட்டு வாங்கி வர சொன்னேன். எத்தனைன்னு சொல்லாம விட்டுட்டேன். நான் எதிர் பார்த்தது ஒன்னு இல்லேன்னா ரெண்டு தட்டு வாங்கி வருவார்னு. அவர் பத்து தட்டு வாங்கி வந்துட்டார். அந்த தட்டுல ஒன்னு ஒண்ணா எடுத்து டிசைன் யோசிச்சு போட்டு கிட்டு இருக்கேன். அதுல மொதல்ல நான் போட்ட டிசைன் இது தான்.
தேவையான பொருட்கள் :
பெவிகால்
தெர்மோகோல் தட்டு
கலர் ஜிகினா தூள் ( என்ன கலர்ஸ் வேண்டுமோ அதை எடுத்துக்கலாம் )
பெப்ரிக் கலர்ஸ்
செய்முறை :
தெர்மோகோல் தட்டுல தேவையான டிசைன் வரையனும். எந்த பகுதிக்கு என்ன கலர் வேண்டுமோ அந்த பகுதியில் பெவிகால் தடவி கலர் ஜிகினாவை நிறைய போடணும். ஒரு பேப்பர் எடுத்து கொண்டு அதில் தெர்மோகோல் தட்டை கவிழ்த்து தட்டினால் தேவையான ஜிகினா மட்டும் பெவிகால் தடவிய இடத்தில் ஒட்டிக்கொண்டு மீதி ஜிகினா பேப்பரில் விழுந்து விடும். முழு படத்திற்கும் இதே மாதிரி ஜிகினா தூள் போட்டு அலங்காரம் செய்து விட்டு தேவை என்றால் தட்டை சுற்றி பெப்ரிக் கலர்ஸ் தரலாம்.
7 comments:
தக தக னு மின்னுது தெர்மாகோல் தட்டு
சூப்பர்
அழகா இருக்கு ப்ரியா!
ரொம்ப அழகாக இருக்கின்றது...சூப்பர்ப்..
its very cute
நன்றி சௌம்யா.
நன்றி மகி, கீதா.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பாபு.