•Tuesday, November 29, 2011
தேவையான பொருட்கள் :
எண்ணெய்
கடுகு
உளுத்தம்பருப்பு
கடலை பருப்பு
துவரம் பருப்பு
தக்காளி
கத்தரிக்காய்
புளி
உப்பு
சாம்பார் மிளகாய்பொடி
மஞ்சள் பொடி
வறுத்து பொடி செய்ய :
தனியா - 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
வெந்தியம் - 1 / 2 டீஸ்பூன்
துவரம் பருப்பு - 1 ஸ்பூன்
துருவின தேங்காய் - 2 ஸ்பூன்
செய்முறை :
வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு தனியா, காய்ந்த மிளகாய், வெந்தியம், துவரம் பருப்பு, துருவின தேங்காய் போட்டு வறுத்து பவுடர் செய்து வச்சுக்கணும்.
புளியை நன்றாக கரைச்சு வச்சுக்கணும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, துவரம் பருப்பு போட்டு தக்காளி, கத்தரிக்காய் போட்டு வதக்கி, புளி தண்ணீர் கரைத்து விட்டு, உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி போட்டு நன்றாக கொதிக்க விடனும். திக்காக வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி,
3 ஸ்பூன் வறுத்து பொடி பண்ண பவுடர் போட்டு, 2 ஸ்பூன் நல்ல எண்ணெய் விட்டு கிளறினால், பொடி போட்ட வத்த குழம்பு ரெடி....
இந்த வத்த குழம்பை காய்ந்த சுண்டைக்காய் வத்தல், வெண்டைக்காய் போட்டும் செய்யலாம். காய், தக்காளி போடும் போதே சின்ன வெங்காயம் போட்டு வதக்கியும் செய்யலாம். செய்து சாப்பிட்டு பாருங்க.... சூப்பர் ரா இருக்கும்.
10 comments:
வித்யாசமா இருக்கு ப்ரியா! சாம்பார் பொடின்னா, ரெடிமேட் சாம்பார்பவுடர்தானே சொல்றீங்க?
தாளிப்பதுக்கு நான் கடலை பருப்பு,உளுந்துப்பருப்பு மட்டும்தான் போடுவேன்.,துவரம்பருப்பு சேர்ப்பதும் புதுசா இருக்கு. செய்து பார்க்கிறேன்.
I remmber putting a comment for this post priya..kaanama poyirucha?
Kuzhambu looks yumm!
வணக்கம், புதியதோர் மகளிர் திரட்டி... புதிய முயற்சி.. உங்களின் அதரவு தேவை...
மங்கையர் உலகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது...
நீங்கள் வலைப்பூவில் அல்லது இணையத்தளத்தில் எழுதும் மங்கையரா...?
உங்கள் வலைப்பூ/இணையத்தளம் மகளிருக்கு பயனளிக் கூடியதா?
உங்கள் பதிவுகளை இன்றே இங்கு இணைத்துக்கொளுங்கள்..
ஒ.... நீங்க அனுப்பின கமெண்ட் எங்க போச்சுனே தெரியலையே !!!! நன்றி மகி. இந்த முறையில வத்த குழம்பு ட்ரை பண்ணி பாருங்க.... ரொம்ப நல்லா இருக்கும்.
பார்க்கும் போதே சாப்பிடனும் போல சூப்பர் ஆ இருக்கு. very nice.
நன்றி பாபு. செய்து சாப்பிட்டு பாருங்க... ரொம்ப நல்லா இருக்கும்.
சாம்பார் பவுடர் தான் சொல்லறேன் மகி. துவரம் பருப்பு கொஞ்சமாக சேர்த்து தாளிச்சு பாருங்க நல்லா இருக்கும்.
அருமை.வாழ்த்துக்கள்.
nandri asiya omar.
நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
நன்றி
யாழ் மஞ்சு