•Wednesday, November 09, 2011
இந்த குருமா சப்பாத்தி , இட்லி, தோசைக்கு தொட்டுண்டு சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 1
பீன்ஸ் - 6
கோஸ் - 1 / 4
வெங்காயம் - 2
தக்காளி - 2
எண்ணெய்
நெய்
லவங்கம் - 2
சீரகம் - 1 / 2 ஸ்பூன்
உப்பு
வறட்டு மிளகாய் பொடி
பால் - 1 கப்
தயிர் - 1 கப்
செய்முறை :
கேரட், பீன்ஸ், கோஸ் பொடியாக நறுக்கி வைக்கணும்.
வெங்காயம், தக்காளி பொடியாக நறுக்கி வைக்கணும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய், நெய் விட்டு, சீரகம், லவங்கம் வெடிக்க விடனும். வெங்காயம், தக்காளி போட்டு வதக்கணும். உப்பு, வறட்டு மிளகாய் பொடி போட்டு ஒரு முறை கிளறனும். காய் எல்லாம் போட்டு வதக்கணும்.
பால், தயிர் விட்டு கலந்து காய் வேக விடனும்.
காய்கள் வெந்து குருமா ரெடி....
கொஞ்சம் அதிகமா பால், தயிர் சேர்த்து செய்தால் க்ரேவி மாதிரி கிடைக்கும்.
சப்பாத்தியுடன் பால், தயிர் குருமா சாப்பிட ரெடி.
7 comments:
வாவ் சூப்பராக இருக்கு
Looks little bit dry Priya..I make it in a gravy farm. Nice recipe..Romba naal aachu seythu. Thanks for reminding! :)
Carrot beans cabbage photo azhakaa irukku! ;)
அரைக்காம கரைக்காம சுலபமா எல்லாத்தையும் வதக்கி சேர்த்து நல்ல குறிப்பு. சுருக்க ஆகும்.
ஃபேஷன் நகைகள் செய்ய தேவையான பொருட்களை எங்களுக்கு ஒரு போன் கால் மூலமாகவோ அல்லது ஒரு மெயில் மூலமாகவோ தொடர்புக்கொண்டால் உங்கள் வீடு தேடி கூரியர் மூலமாக பொருட்களை அனுப்பி வைக்கிறோம்..
பொருட்கள் தேவைக்கு தொடர்புக்கொள்ளவும்:
moosa shahib
e.mail : moosafs69@gmail.com
contact no: 0476 - 3293737 Mobile no : 09387044070
NEW JANATHA FANCY JEWELLERY
B.R.Complex, K.S.R.T.C.Bus Stand,
Thevarkaavu Road
karunagappally - 690518
நன்றி சிநேகிதி.
நன்றி மகி... திரும்ப செய்து சாப்பிடுங்க...
நன்றி காமாட்சி அம்மா... காய் நறுக்கி வச்சுக்கிட்டா, செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி தான்... செய்து பாருங்க..
நன்றி moosa shahib, ஏதாவது பொருள் தேவை என்றால் கண்டிப்பாக உங்கள் கடைக்கு கால் பண்ணுகிறேன்.