•Saturday, November 12, 2011
நானும், என்னவரும் வெளில சாப்பிட போகும் போது கட்லெட் ஆர்டர் பண்ணால் சாப்பிடவே மாட்டார்.... கட்லெட் வெளில சாப்பிடவே அவருக்கு புடிக்கலை. வீட்டுல நான் செய்து தரேன்னு சொல்லி இருந்தேன்.....
நானும், என்னோட அக்காவும் சின்னதுல கட்லெட் செய்து இருக்கோம். வெறும் உருளைகிழங்கு, வெந்நீரில் நனைச்ச பிரட் வச்சு செய்து இருக்கோம்.
தேவையான பொருட்கள் :
கேரட் - 1
உருளைகிழங்கு - 2
பச்சை பட்டாணி
கொத்தமல்லி
உப்பு
பிரட் கிரம்ஸ்
வறட்டு மிளகாய் பொடி
எண்ணெய்
செய்முறை :
உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி தனி தனியாக வேக வச்சுக்கணும்.
வெந்த காய், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, உப்பு, மிளகாய் பொடி போட்டு நன்றாக பிசையணும்.
பிசைந்து வச்சு இருக்கறதை வடை மாதிரி தட்டி பிரட் கிரம்ஸ் -ல் பிரட்டி , தவாவில் எண்ணெய் விட்டு மொறுமொறுப்பாக பொறித்து எடுத்தால் கட்லெட் ரெடி...
கட்லெட் கூட டொமேடோ கெட்சப் தொட்டுண்டு சாப்பிடலாம்.
ஸ்னாக்ஸ்
|
2 comments:
உருளைக்கிழங்கு, கேரட், பச்சை பட்டாணி மட்டும் தான் சேர்க்கனுமா, இல்ல வேற எதாவது காய்கறியும் சேர்க்கலாமா ? நான் இதுவரை கட்லெட் சாப்பிட்டதே கிடையாது.
பீன்ஸ் கூட சேர்க்கலாம் பாபு. செய்து சாப்பிட்டு பாருங்க... ரொம்ப நல்லா இருக்கும்.