•Friday, October 21, 2011
ஒரு ரெண்டு வாரமா youtube - ல வாழ்த்து அட்டை செய்வது எப்படின்னு பார்த்து கிட்டு இருந்தேன். பார்க்க பார்க்க ஆர்வம் அதிகமாக, வீட்டில் இருந்த பொருட்களை வைத்தும்,அருகில் உள்ள கடையில் கிடைத்த பொருட்களை வைத்தும் என்னவருக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து அட்டை செய்து தந்தேன். அதன் தொடர்ச்சியாக, இன்னிக்கு என்னோட அக்கா பையன், இரண்டாவது பிறந்த நாள். இது அவனுக்காக செய்த
வாழ்த்து அட்டை.
இன்னிக்கு காலைல அவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் போது,
Thank you சொல்லுனு அக்கா சொல்லி கொடுக்க, அவன் மழலை சொல்லில் tank கூ நு சொல்ல, கேட்க ரொம்ப அருமையா இருந்தது. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுகிட்டே இருக்கு.....
7 comments:
looking very lovely.
Happy B'day to Avinash! :)
Greeting card is cute priya!
மகியின் தளம் வழியே இன்றுதான் உங்கள் வலைப்பூ காண நேர்ந்தது.உங்கள் கை வேலைப்பாடும்,சமையலும் மிக அருமையாக உள்ளது.ரசிக்க ருசிக்க என்று வலைப்பூ தலைப்பிட்டு மிக பொருத்தமாக பதிவுகள் பகிர்கின்றீர்கள்.இன்று பொறுமையாக அமர்ந்து உங்களது அனைத்து இடுகைகளையும் பார்த்து முடித்தேன்.;
நன்றி வானதி
நன்றி மகி.... உங்க வாழ்த்துக்களை சொல்லிட்டேன்....
நன்றி angelin
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி ஸாதிகா அக்கா.....