•Wednesday, July 13, 2011
கல்யாணத்துக்கு முன்னாடி எங்க அம்மா வெள்ளை சேவை செய்து அதுல லெமன் சேவை, தேங்காய் சேவை, எள்ளு பொடி சேவை, மாங்காய் சேவை எல்லாம் செய்வாங்க. கல்யாணத்துக்கு அப்புறம் நாங்க தனியா சிங்கப்பூர் ல இருக்கும் போது அவருக்கு அம்மா மாதிரியே செய்து கொடுத்து நல்ல பெயர் வாங்கிக்கணும்னு ஆசை பட்டேன். அம்மாவே அரிசியை களைந்து உணர்த்தி மெசின் - ல மாவா அரச்சு கொடுத்து அனுப்பி இருந்தாங்க. அதுல கொழுக்கட்டை பண்ணலாம்னு அவங்க செய்து தந்தாங்க. அதே மாவு யூஸ் பண்ணி முறுக்கு கொழல் வச்சு சேவை பண்ண ட்ரை பண்ணேன். ஆவில வெந்து வந்ததும் கொஞ்சம் தடியா நூடல்ஸ் மாதிரி இருந்தது.
அப்புறம் இந்தியா வந்ததும் எங்க சித்தி கிட்ட ஒரு பெரிய கொழல்
CONCORD PURE RICE SEVAI.....
அப்புறம் இந்தியா வந்ததும் எங்க சித்தி கிட்ட ஒரு பெரிய கொழல்
இருந்தது. அதை வாங்கிட்டு வந்து இரண்டாவது முறை ட்ரை பண்ணேன். அதுலயும் ஒழுங்கா வரலை.
இந்த கொழல் தான் அது. இதுல மாவு போட்டு கீழ தட்டு வச்சு மேல ஒருத்தர் பிழிய, ஒருத்தர் கொழலின் மூணு காலையும் புடிச்சுகிட்டே கீழ தட்டை சுத்தணும். அப்போ தான் மேல மேல மாவு விழாது. அப்புறம் பிழிந்ததை ஆவில வச்சு எடுக்கணும். இந்த முறையிலும் சேவை சரியா வரலை.
அப்புறம் ஒரு முறை ரிலையன்ஸ் ப்ரெஷ் போகும் போது இந்த சேவை பாக்கெட் பார்த்தேன். இதை வாங்கி ட்ரை பண்ணேன். நல்ல வெள்ளையா மெலிசா சேவை அருமையா வந்தது. பால், சக்கரை போட்டு கொடுத்தேன். அது என்னவருக்கு புடிக்கலை.
இந்த கொழல் தான் அது. இதுல மாவு போட்டு கீழ தட்டு வச்சு மேல ஒருத்தர் பிழிய, ஒருத்தர் கொழலின் மூணு காலையும் புடிச்சுகிட்டே கீழ தட்டை சுத்தணும். அப்போ தான் மேல மேல மாவு விழாது. அப்புறம் பிழிந்ததை ஆவில வச்சு எடுக்கணும். இந்த முறையிலும் சேவை சரியா வரலை.
அப்புறம் ஒரு முறை ரிலையன்ஸ் ப்ரெஷ் போகும் போது இந்த சேவை பாக்கெட் பார்த்தேன். இதை வாங்கி ட்ரை பண்ணேன். நல்ல வெள்ளையா மெலிசா சேவை அருமையா வந்தது. பால், சக்கரை போட்டு கொடுத்தேன். அது என்னவருக்கு புடிக்கலை.
CONCORD PURE RICE SEVAI.....
என்னவர் ஒரு நாள் கோவில் போறத்துக்காக காலைல வந்து, எல்லோரும் 10 நிமிஷத்துல ரெடி ஆகுங்க செங்கல்பட்டு தாண்டி ஒரு கோவில் இருக்கு போயிட்டு வந்துடலாம்னு சொன்னார். என்னவர் கோவில் உள்ள போனா சிலை, கல்வெட்டுன்னு பார்த்து கிட்டே இருப்பார். அவர் கூட போனா அவ்வளவு சீக்கிரம் வீட்டுக்கு வரவே முடியாது. என்னாலையும் பசி தாங்க முடியாது. உடனே என்ன செய்யலாம்னு யோசிச்சேன்....டக்குன்னு சேவை நியாபகம் வர இந்த தேங்காய் சேவை பண்ணி பாக்ஸ்-ல போட்டு எடுத்துக்கிட்டு கிளம்பிட்டோம். அவருக்கும் ரொம்ப புடிச்சு இருந்தது.
அந்த பாக்கெட்லையே எப்படி பண்ணனும்னு இருக்கும். இருந்தாலும் நானும் ஒரு முறை சொல்லிக்கறேன்... 
சேவையை இந்த மாதிரி பாத்திரத்தில் எடுத்துக்கணும்.
வெந்நீர் தண்ணி கொதிக்க வச்சு சேவை முழுகற மாதிரி தண்ணி விட்டு மூடி வச்சுடணும். 3 - 5 நிமிஷம் கழிச்சு அதிகமா இருக்க தண்ணிய வடிகட்டிட்டா சேவை கிடைச்சுடும்.
தேங்காய் சேவை செய்ய தேங்காய் துருவி எடுத்துக்கணும்.
தேங்காய் சாதம் செய்வது போல் வாணலியில் எண்ணெய், கொஞ்சம் நெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சை மிளகாய், கருவேப்பிலை, முந்திரி பருப்பு போட்டு வறுத்து தேங்காயும் போட்டு வதக்கணும். அப்புறம் அதுல செய்து வைத்து இருக்க சேவையை கொட்டி கிளறினா தேங்காய் சேவை ரெடி.
நான் பச்சை மிளகாய் இல்லாததால் வரமிளகாய் போட்டு இருக்கேன்.
இதுலயே அடுத்தது எலுமிச்சை சேவை பண்ணனும். எனக்கு ரொம்ப புடிச்சது எங்க அம்மா கையாள பண்ணற எள்ளு பொடி சேவை தான். அதையும் ட்ரை பண்ணிட்டு போடோஸ் போஸ்ட் பண்ணறேன்.
இப்போ எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட எல்லாம் இந்த சேவை வாங்குங்க ரொம்ப நல்லா இருக்குனு சொல்லிட்டு இருக்கேன். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.....
5 comments:
ப்ரியா,நீங்க போட்டோலே போட்டிருக்கற மெஷின்லதான் நாங்க சந்தகை பிழிவோம். அரிசிய அரைச்சு இட்லி மாதிரி வேகவிட்டு,சுடச்சுட இந்த குழல்ல போட்டு பிழிஞ்சா சூப்பரா வருமே..ஸாஃப்ட்டாவும் இருக்கும். கோயமுத்தூர் ஸ்பெஷல் இது! :)
நானும் இங்கே இதேபோல ரெடிமேட் சேவை வாங்குவேன்,என்னவருக்கு தக்காளி சேவை-லெமன் சேவை ரொம்ப புடிக்கும். தேங்காய் சேவை சூப்பராத்தான் இருக்கும்..ஹும்,இவ்ளோ தேங்கா சாப்ட்டா நானும் தேங்கா மாதிரி ஆகிருவேன்ல,அதனால் செய்யறதில்லை! ;) ;)
நன்றி மகி. உங்க போஸ்ட்- ல சந்தகை பத்தி கேள்வி பட்டு இருக்கேன். அந்த மாதிரி பெயர் நாங்க கேள்வி பட்டதே இல்லை. ட்ரை பண்ணி பார்க்கறேன் மகி.
அதுக்கு தொட்டுக்க என்ன பண்ணுவீங்க ? முன்னாடி முட்டை போட்டு ஏதோ ஒரு side dish சொல்லி இருந்தீங்க இல்லையா ??? அது இந்த சந்தகைக்கு தானே சொல்லி இருந்தீங்க ?
veg side dish ஏதாவது சொல்லுங்க மகி.
என்னவருக்கு தேங்காய் பாலும் பிடிக்கலை. இந்த மாதிரி கலந்த சாதம் மாதிரி கலந்த சேவை பண்ணா தான் விரும்பி சாப்பிடறார்.
//தேங்காய் சேவை சூப்பராத்தான் இருக்கும்..ஹும்,இவ்ளோ தேங்கா சாப்ட்டா நானும் தேங்கா மாதிரி ஆகிருவேன்ல,அதனால் செய்யறதில்லை! ;) ;)// தேங்காய் மாதிரி எல்லாம் ஆக மாட்டீங்க மகி.... ட்ரை பண்ணி பாருங்க.
இது என்ன... 'தேங்காய்' தொடர் பதிவா!!! ;) நானும் போடலாமா என்று யோசிக்கிறேன். ;)
//இந்த குழல்ல போட்டு பிழிஞ்சா// குழலா!! ஒண்ணுமே புரியல.
எனக்கு தெரிஞ்சதெல்லாம் இடியப்பம் மட்டுமே. மகி ப்ளாக்ல சேவை பார்த்து இருக்கேன். எல்லாரும் சொல்றீங்க. செய்து பார்க்கணும்.
மகி ப்ளாக் - ல தேங்காய் பதிவு பார்த்ததும், நான் போட்டோ எடுத்து பதிவா போடாத தேங்காய் சேவை நியாபகம் வந்துடுச்சு. அதான்
நானும் தேங்காய் பத்தின பதிவையே போட்டு, மகியும் நானும் கூட கிரீஸ் (வண்டில போடற கிரீஸ் இல்லைங்க.... :) சின்ன பசங்க சொல்லிப்பாங்களே அந்த கிரீஸ் ) சொல்லிகிட்டோம். உங்க கிட்ட தேங்காய் பதிவு இருந்தா நீங்களும் போடுங்க இமா.