•Wednesday, February 09, 2011
இன்னிக்கு மதியானம் சாப்பாடுக்கு ஏதாவது பண்ணனும்னு யோசிச்சு டெய்லி பண்ணற சாம்பார், ரசம் எல்லாம் வேண்டாம்னு புதுசா முதல் தடவையா இந்த புதினா சாதம் ட்ரை பண்ணேன். ரொம்ப நல்லா வந்தது.
தேவையான பொருட்கள்
புதினா - 1 கப்
கருவேப்பிலை
பச்சை மிளகாய்
முந்திரி பருப்பு
பச்சை பட்டாணி
சீரகம்
லவங்கம்
நெய்
கடலை எண்ணெய்
புளி
உப்பு
சாதம்
செய்முறை
குக்கரில் சாதம் உதிர் உதிராக இருக்கும் படி முதல்ல செய்து வச்சுக்கணும். கருவேப்பிலை கொஞ்சம், புதினா ஒரு கப், பச்சை மிளகாய் 2 ( காரத்திற்கு ஏற்ப ), புளி கொஞ்சம், உப்பு போட்டு தனியா அரச்சு வச்சுக்கணும்.
வாணலில கொஞ்சம் நெய், கடலை எண்ணெய் விட்டு அதுல சீரகம், லவங்கம் போட்டு வெடிக்க விட்டு பிறகு பச்சை பட்டாணி, முந்திரி பருப்பு போட்டு வதக்கணும் ( பச்சை பட்டாணி போட்டு வதக்கும் போது வெடிக்கும் சோ கொஞ்சம் கவனமா இருக்கணும் ). அப்புறம் அதுல அரச்சு வச்சு இருக்க விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கி குக்கரை இறக்கிடணும். இதில் உதிர் உதிரான சாதம் போட்டு கிளறினால் புதினா சாதம் ரெடி. இதுக்கு தொட்டுக்க எல்லா ரைதாவும் சூட் ஆகும்.
எங்க வீட்டுல பெரியவங்க வெங்காயம் சாப்பிட மாட்டாங்க. சோ வெங்காயம் சேர்க்காம இந்த புதினா சாதம் பண்ணி இருக்கேன். விரும்பினா வெங்காயம் கூட போட்டுக்கலாம்.
1 comments:
rice superah iruku ma.