Author: Priya ram
•Thursday, March 01, 2012
எங்க அம்மா, அரச்சு விட்ட  சாம்பார் தனியா செய்து விட்டு, சாதம் செய்து அதில் நெய், நல்லெண்ணெய் விட்டு குழைய பிசைந்து சாம்பார் விட்டு நன்றாக கிளருவாங்க. அந்த மாதிரி தான் நானும் செய்துகிட்டு இருந்தேன். இந்த முறை ரொம்ப ஈஸி. ட்ரை பண்ணி பாருங்க....





தேவையான பொருட்கள் :

அரிசி - 1  கப்
thuvaram பருப்பு - 3  / 4 கப்
கத்தரிக்காய் - 1 
உருளைக்கிழங்கு - 2 
பீன்ஸ் - 10 
கேரட் - 3 
சௌ சௌ - 1 
பச்சை பட்டாணி - 1 / 4 கப்

வறுத்து அரைக்க :

கடலை பருப்பு - 2  டேபிள் ஸ்பூன்
தனியா - 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5 
பெருங்காயம்
வெந்தயம் - 1  / 4  டீஸ்பூன்
துருவின தேங்காய்
லவங்கம் - 4 
வெங்காயம் - 2 

தாளிக்க :

நல்லெண்ணெய்
நெய்
கடுகு
முந்திரி பருப்பு

அலங்கரிக்க :

கேப்சிகம் - 1 / 4 
தக்காளி - 2 
கொத்தமல்லி


மஞ்சள் பொடி
மிளகாய் பொடி
உப்பு
புளி

செய்முறை :


தேவையான பொருட்கள் லிஸ்ட் பார்த்ததும் ஓடிடாதீங்க..... பார்க்க தான் அப்படி இருக்கும். செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி.
 சரி செய்முறைக்கு போவோம்.

1 . அரிசி, பருப்பு, கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட், சௌ சௌ
பச்சை பட்டாணி, மஞ்சள் பொடி, மிளகாய் பொடி  எல்லாம் குக்கரில் போட்டு 4 கப் தண்ணீர் விட்டு 3 விசில் விட்டு  வேக வைக்கணும்.

2 . வறுத்து அரைக்க கொடுத்து உள்ளவற்றை  எண்ணெய் விடாமல்   வறுத்து பேஸ்ட் பண்ணிக்கணும்.  ( வெங்காயமும் வறுத்து அரச்சு சேர்த்துடுங்க... சின்ன வெங்காயம் என்றால் சூப்பர் ரா இருக்கும். )

3 . புளி தண்ணீர் கரைத்து அதில் இந்த பேஸ்ட் கொட்டி, கட்டி இல்லாமல் கரைச்சுக்கனும்.

4 . குக்கர் பிரஷர் போனதும், நன்றாக கலந்து விட்டு, அதில் புளி கரைசலை விட்டு அடுப்பில் 5 நிமிடம் வைத்து நன்றாக கிளறனும்.

5 . உப்பு சேர்த்து, சூடாக இருக்கும் போதே தக்காளி, கேப்சிகம் பொடியாக நறுக்கி மேலே தூவவும்.

6 . வாணலியில் நெய் வைத்து காய்ச்சி முந்திரி வறுத்து கொட்டனும்.
 நல்லெண்ணெய் காய்ச்சி கொட்டனும். கடுகு தாளித்து கொட்டனும்.

7 .  கொத்தமல்லி தூவினால், கம கம பிசி பெலே பாத் ரெடி.

8 . சிப்ஸ், ரோஸ்ட் காய் தொட்டுண்டு சாப்பிட்டா சூப்பர் ஓ சூப்பர் தான்.....



Author: Priya ram
•Wednesday, February 22, 2012
இது என்னுடைய 100 - ஆவது பதிவு.


திரட்டிப்பால் செய்ய தேவையான பொருட்கள் :

பால் - 1 1 /2 லிட்டர்
சக்கரை - 1  கப்

செய்முறை :

பாலை திக்கான ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு அடுப்பை சிம்-ல் வைத்து நன்றாக காய்ச்சனும்.



பாலை மேலும் காய்ச்சனும்....



பாலை மேலும் நன்றாக காய்ச்சனும்....

பால் திக்காக நிறைய ஏடு சேர்ந்து வரும்...

பால் நிறைய ஏடுடன் திக்காக வரும் போது, 1  கப் சக்கரை போட்டு நன்றாக கலக்கவும்...


சிம்-ல் வைத்து நன்றாக கிளறனும்...


 திரட்டிப்பால் ஒன்றாக சேர்ந்து வரும்...


திரட்டிப்பால் ரெடி.... பால் ஸ்வீட் என்பதால், அதிகமாக சக்கரை சேர்க்க வேண்டாம். சாப்பிடுவதற்கும் ரொம்ப நல்லா இருக்கும்.

குறிப்பு :
 அப்போ அப்போ பார்த்து, அடி பிடிக்காமல்,  கிளறிக்கொண்டே இருக்கணும்.
Author: Priya ram
•Thursday, February 16, 2012

வீட்டில் நிறைய பிரவுன் பேப்பர் இருந்தது.... அதை வைத்து இந்த என்வெலப் எல்லாம் செய்தேன்..









Author: Priya ram
•Saturday, February 11, 2012
ஒரு முறை என்னோட நாத்தனார் எங்க வீட்டுக்கு வந்து இருந்தாள். நான் சப்பாத்தி மாவு பிசைய போகும்போது, நானும் வரேன்னு சொல்லி கிட்சென்ல வந்து பேசிண்டு இருந்தா... மாவு பிசையும் போது பிள்ளையார் பண்ண தெரியுமான்னு கேட்டேன்... தெரியாதுன்னு சொன்னா... உடனே இந்த பிள்ளையார் செய்து காண்பித்தேன்... சூப்பர் மன்னி  -ன்னு சொன்னா...பிள்ளையார்க்கு கண்ணுக்கு என்ன செய்வதுனு யோசிச்சேன். எள்ளு வீட்டுல இருந்தது.. அதையே கண்ணாக வச்சுட்டேன்.


கண்ணு கரெக்ட் டா செட் ஆக்கிடுச்சு....


கிழே இருக்க எலி எங்க மாமியார் வந்து பண்ணாங்க.


எங்க வீட்டு சப்பாத்தி மாவு பிள்ளையார், மாவு கொழுக்கட்டை எல்லாம் எனக்கு வேண்டாம்....
எண்ணெய் கொழுக்கட்டை தான் வேணும்னு.... இந்த மாவு கொழுக்கட்டையை கிழே போட்டுட்டார்.


இப்போதைக்கு இந்த கொழுக்கட்டை வச்சுக்கோங்க.... இன்னும் கொஞ்ச நேரத்தில் எண்ணெய் கொழுக்கட்டை தரேன்னு சொல்லி, மாவு கொழுகட்டையை  கையில் தந்தேன்.... அவர் கிட்ட சொன்ன மாதிரியே எண்ணெய் கொழுக்கட்டை பண்ணிட்டேன். செய்வதும் ரொம்ப ஈஸி தான்.

தேவையான பொருட்கள் :

துருவின தேங்காய்
வெல்லம்
மைதா மாவு
உப்பு

செய்முறை :

துருவின தேங்காய், வெல்லம், வாணலியில் போட்டு நன்றாக கிளறி பூரணம் செய்து வச்சுக்கணும்.
மைதா மாவில் உப்பு போட்டு பிசைந்து 20  நிமிடம் ஊற வைக்கணும்.
மைதா மாவு உள்ளே பூரணம் வைத்து  கொழுக்கட்டை மாதிரி செய்து வச்சுக்கணும்.



கொழுகட்டையை எண்ணையில் போட்டு பொறித்து எடுத்தால் எண்ணெய் கொழுக்கட்டை ரெடி.


இந்த கொழுக்கட்டையை கோதுமை மாவு வைத்தும் இதே முறையில்  செய்யலாம்.


 பிள்ளையார், கொழுக்கட்டை எப்படி இருக்குனு சொல்லுங்க....



மஹி, நீங்க தந்து இருக்க இந்த விருதுக்கு நன்றி.... இந்த விருதை நான்
சௌம்யா - sowmya's creation க்கு கொடுக்கிறேன்.

Author: Priya ram
•Monday, January 30, 2012
இந்த கோலம் நேத்து எங்க வீட்டு வாசலில் நான் போட்டது. என்னோட நத்தனார்க்கு கல்யாணம் ஆகறதுக்கு முன்னாடி வாசலில் பெரிய கோலம் போடுவாங்களாம். என்னவரை தான் கூட துணைக்கு நிக்க சொல்லுவாங்களாம். அந்த நாள் நியாபகம் எல்லாம் வந்து, வாசலில் நீ கூட பெரிய கோலம் போடலாம்லன்னு என்னை கேட்டுகிட்டே இருந்தார். எங்க வீட்டுல எங்க அக்கா சூப்பர் ரா கோலம் போடுவா. எனக்கு பெரிய கோலம் எல்லாம் போடவே வராது.  


கேட்டுகிட்டே இருக்காரேன்னு, பிட் பேப்பர் எல்லாம் வச்சு கிட்டு,   நேத்து போட்டு தான் பார்த்துடுவோமேனு கோலம் போட்டேன்.


கோல மாவுல சுண்ணாம்பு கலந்து இருக்குனு, எங்க வீட்டுல அரிசி மாவு மட்டும் யூஸ் பண்ணி தான்  கோலம் போடுவோம்.


நான் போட்ட கோலம் சுமாராவாவது  இருக்கா ???? !!!!

Related Posts Plugin for WordPress, Blogger...