•Saturday, July 09, 2011
என்னோட தங்க மரம் போஸ்ட்டில் உபயோகிச்ச மணிகளை வைத்து இந்த மணி செட் பண்ணேன். இதில் நான் கழுத்துக்கு மணி, கம்மல், கைக்கு ப்ரேஸ்லெட், காலுக்கு கொலுசு எல்லாம் பண்ணேன். முதலில் காலுக்கு கொலுசு பண்ணும் போது நிறைய மணி வச்சு செய்தேன். அப்புறம் மூணு மூணு மணி மட்டும் வைத்து செய்தேன். ரெண்டையும் போஸ்ட் பண்ணி இருக்கேன். பார்த்து விட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க.
9 comments:
wow! superb Priya.
நன்றி இமா.
அழகா இருக்கு ப்ரியா..இது எல்லாம் யாருக்கு செய்து குடுக்கறீங்க? :)
இதே மாதிரி எல்லா தங்கமணிகளும் குந்துமணி,காராமணி & கண்ணாடி மணி வச்சு எல்லா நகையையும் டிசைன் பண்ணிண்டாக்க ரங்கமணிகளுக்கு எவ்ளோ Money மிச்சம் ஆகும்!!..:)
டிசைன் எல்லாம் ரொம்ப அழகா இருக்கு மேடம்!
//இதே மாதிரி எல்லா தங்கமணிகளும் குந்துமணி,காராமணி & கண்ணாடி மணி வச்சு எல்லா நகையையும் டிசைன் பண்ணிண்டாக்க ரங்கமணிகளுக்கு எவ்ளோ Money மிச்சம் ஆகும்!!// ஆசை,தோசை,அப்பளம்,வடை! ;)))))))))))
அம்பி,இதெல்லாம் வீட்டுல இருக்கற பொட்டு-பொடிசுகளுக்கு. தங்கமணிகளுக்கெல்லாம் ஒன்லி தங்கம்-வைரம்-ப்ளாட்டினம்தான்.ஓவரா ஆகாசக்கோட்டைல்லாம் கட்டப்படாது,கீழே விழறச்சே வலிக்கும்! ;)
@ மஹி - தக்குடு கொஞ்சம் சந்தோஷப்பட்டா உங்களுக்கு பொறுக்காதே!!!!..:P
நன்றி மகி. என்னோட சின்ன நாத்தனார் பாட்டு கிளாஸ் எடுக்கறா. அவ தான் எனக்கு வித்து கொடுக்கறா. என்னோட சிஸ்டர் அவ தோழிகள் கிட்ட கொஞ்சம் வித்து கொடுத்தா.
நன்றி தக்குடு. தங்கம்,வைரம் எல்லாம் ஒடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லுவாங்க. (யாராவது ஏதாவது தங்கமணிகளுக்கு நல்லதா சொன்னா கெட்டியா புடிச்சுக்குவோம் இல்ல..... ஹி ஹி ஹி )
மிகவும் அழகாக இருக்கு செய்முறையும் அருமை. இந்த கிரஸ்டல்மணிவகைகள். ஆன் லைனில் வாங்கமுடியுமா? எங்கே கிடைக்கும். விபரம் தரவும்..