•Monday, September 12, 2011
எங்க அம்மா வீட்டுல எல்லாம் அடையில வெங்காயம் பொடியா நறுக்கி போட்டு செய்வாங்க. தடிமனா இருக்கும். என்னால ஒரு அடைக்கு மேல சாப்பிடவே முடியாது. எங்க மாமியார் வீட்டுல வெங்காயம் சேர்க்க மாட்டாங்க.. அதனால அடை மாவுல துருவின தேங்காய் போட்டு செய்வோம்.
தேவையான பொருட்கள் :
அரிசி - 1 /2 கப்
துவரம் பருப்பு - 1 /2 கப்
கடலை பருப்பு - 1 /2 கப்
பயத்தம் பருப்பு - 1 /2 கப்
மிளகாய் - காரத்துக்கு ஏத்த மாதிரி ( நான் 15 மிளகாய் போட்டு இருக்கேன் )
உப்பு - தேவையான அளவு
பெருங்காயம்
துருவின தேங்காய்
பொடியாக நறுக்கிய கருவேப்பிலை
செய்முறை :
அரிசி, பருப்பு, மிளகாய் ஒரு மணி நேரம் ஊற வைக்கணும்.
ஊறியதும் மிக்சியில கொரகொரன்னு அரச்சுக்கணும்.
அரச்ச மாவுல தேவையான அளவு மாவு எடுத்து, அதுல உப்பு, பெருங்காயம், துருவின தேங்காய், பொடியாக நறுக்கிய கருவேப்பிலை போட்டு அடை செய்யலாம். அடை பண்ணும் போது, அங்க அங்க ஓட்டை போட்டு, அதுல எண்ணெய் விட்டு செய்தால் மொறு மொறுன்னு நல்லா இருக்கும்.
எங்க வீட்டுல நாலு பேர் இருக்கோம். இந்த மாவு எங்க வீட்டுக்கு ரெண்டு நாளைக்கு வரும். சமமான அளவு அரிசி, பருப்பு போடுவதால், நீங்க குறைவாகவும் போட்டுக்கலாம்.
அடைக்கு மிளகாய் பொடி, எண்ணெய் தொட்டுண்டு சாப்பிட்டா நல்லா இருக்கும். ஆனால் எனக்கு புடிச்சது தயிர் கூட சாப்பிடுவது தான். நீங்க எப்படி வேணும்னாலும் சாப்பிடுங்க...... :)
5 comments:
சூப்பர் & ஹெல்தி அடை.
wow...So tempting..Did you add that much chilles while grinding it...
நன்றி வானதி.
நன்றி கீதா. ஆமாம் கீதா, அத்தனை மிளகாயும் போட்டு தான் அரைத்தேன். என்னவருக்கு காரமாக இருந்தால் பிடிக்கும். தேங்காய் சேர்த்ததால் காரமாக தெரியவில்லை. வெங்காயம் சேர்த்து செய்வதாக இருந்தால் கொஞ்சம் கம்மியாக போட்டுக்கலாம்.
கார ஸாரமா ருசியாயிருக்கு உன் அடை பக்குவம். அன்புடன்